Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

தமிழ்மணம் டாப்-20 பதிவர்கள் ஒரு பார்வை....


கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்மணம் தரவரிசை-20 புதிய மாற்றங்களுடன் வருகிறது.இப்போது  தகுதியான பதிவர்கள் இடம்பிடிக்கிறார்கள். இந்த மாற்றம் வரவேற்க வேண்டியதே....முந்தைய வாரம் இதைப்ப்ற்றி ஒரு பதிவிட்டிருந்தபோது குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் பதிவர் கவிதைவீதி சௌந்தர் சார் அவர்கள். அவரின் வேண்டுகோளை ஏற்று இப்போது இப்போது இடம் பிடித்திருக்கும் பதிவர்களில் முதல் பத்து பதிவர்களை பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம்.


பதிவின் பெயர் : அட..,என்னங்க நீங்க?
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
இடம் : 1
 
இவர் பதிவுலகிற்கு வந்து நீண்ட நாட்களானாலும், இந்த ஒரு மாதமாகத்தான் நிறைய எழுதுகிறார். இவர் ஒரு பல்சுவை பதிவர். காமெடியிலும் கலக்ககூடியவர். இவருடைய பதிவை  ஒருமுறை படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் எழுத்து நடை இவருக்கு. கடந்த வாரம் பிடித்திருந்த முதல் இடத்தை இந்த வாரமும் தக்க வைத்துள்ளார். இனிமேலும் அப்படியே தக்கவைத்துக்கொள்வார் என்றே நினைக்கிறேன். 


பதிவின் பெயர் : நாஞ்சில் மனோ
நாஞ்சில் மனோ
இடம் : 2
 
இவரும் ஒரு பல்சுவை பதிவர்தான். பின்னூட்டங்களில் கத்தி, அருவாள் என்று புதிய நடைமுறையை கொண்டுவந்தவர். இப்படி பிரயோஜனமில்லாத பின்னூட்டங்கள் போடாமல் பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டங்களை போடவேண்டும் என்பது என் அவா...


பதிவின் பெயர் : மாய உலகம்
இடம் : 3

இவரை இன்னும் நான் படித்ததில்லை. படித்தபிறகு எழுதுகிறேன்.


பதிவின் பெயர் : நான் பேச நினைப்பதெல்லாம்
சென்னை பித்தன்
இடம் : 4
 
இவர் ஒரு வித்தியாசமான பதிவர். பெரும்பாலும் இளைஞர்களே பதிவுலகில் கோலோச்சும் நிலையில் இவர் 50+. ஆனாலும், இவரின் எழுத்துக்களில் இளமை ததும்பும்.யூத்களுக்கே சவால் விடும் இவரின் எழுத்து நடை. கதை, கவிதை என்று அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதிப்பவர் அய்யா...


பதிவின் பெயர் : விக்கி நிசமா பொய்யா
விக்கி உலகம்
இடம் : 4

முன்னாள் ராணுவ வீரரான விக்கி எல்லையில் இருந்து எதிரிகளை சுட்டாலும், இதுவரை பதிவுகளை சுட்டதில்லை இவர். பதிவுலகில் தோழமையை வளர்க்கவிரும்பும் பதிவர்


பதிவின் பெயர் : anbu ulagam
M.R
இடம் : 5
 
இதுவரை இவரையும் படித்ததில்லை. இனிமேல் தான் இவரின் பதிவை படிக்கவேண்டும்.

பதிவின் பெயர் : அரசையூரான்
ரஹீம் கஸாலி
இடம் : 6
 
இவரும் ஒரு பல்சுவை பதிவர்தான் என்றாலும், இவருடைய ஸ்பெஷலே அரசியல் பதிவுகள்தான். இடையிடையே மொக்கையும் போடுவார்.பதிவுலக அரசியலில் சிக்காத இவர், பரபரப்பான தலைப்புகள் மூலம் ஈர்ப்பவர்.


பதிவின் பெயர் : தமிழ்வாசி
இடம் : 7
 
பதிவுலகில் இவர் ஒரு வித்தியாசமான பதிவர். பிரபலங்களை கேள்விகேட்டு பதில் வாங்குவதில் வல்லவர். ஆக்கப்பூர்வமான பதிவுகள் இவருடையது.


பதிவின் பெயர் : http://cablesankar.blogspot.com
Cable Sankar
இடம் : 8
 
சினிமாதான் இவரின் இலக்கு என்றாலும் சாப்பாட்டுக்கடை மூலமும் எல்லோரையும் கவர்ந்தவர். இவர் நிறைய பதிவர்களின் துரோணாச்சாரியார். உடான்ஸ் மூலம் பதிவர்களை அடையாளம் காட்டிவருகிறார். விரைவில் தமிழ்மணம் போல உடான்ஸும் வளரும் என்பது என் எதிர்பார்ப்பு.


பதிவின் பெயர் : counsel for any
shanmugavel
இடம் : 8
 
பதிவுலகில் இவருக்கென்று தனி இடம் உண்டு. மொக்கைகளே அடைத்துகொண்டிருக்கும் பதிவுலகில் இவரின் பதிவு வித்தியாசமானது. பலருக்கும் உபயோகமான பதிவுகள் இவருடையது.

பதிவின் பெயர் : சூறாவளி
சூறாவளி
இடம் : 9

இவரை இன்னும் நான் படித்ததில்லை. படித்தபிறகு எழுதுகிறேன்.



பதிவின் பெயர் : கடையநல்லூர்.org
இடம் : 10
 
இவரை இன்னும் நான் படித்ததில்லை. படித்தபிறகு எழுதுகிறேன்.

இது என் பார்வைதான். இதிலுள்ள கருத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நன்றி..






தமிழ்மணம், ஐடியா மணியின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? அல்லது காப்பி-பேஸ்ட் பதிவுகளின் குப்பையாகத்தான் இருக்குமா?

இன்று நண்பர் ஐடியா மணி அவர்கள் ஒரு அருமையான பதிவு போட்டிருந்தார். பெரும்பாலான பதிவர்களின் மனக்குமுறலை அது பிரதிபலித்திருந்தது. முதலில் அவரின் துணிச்சலுக்கு ஒரு ஓ போடுகிறேன். தமிழ்மணம் டாப்-20 என்பது பெரிய ஆஸ்கார் விருதெல்லாம் கிடையாது. அதில் இடம்பிடிக்க இப்படி எழுத்து விபச்சாரம் செய்யவேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

நேர்மையாக, சொந்தக்கருத்துக்களை எழுதும் பதிவர்கள்தான் டாப்-20 இடம்பிடிப்பார்கள், காப்பி-பேஸ்ட் பதிவர்களுக்கு இடமில்லை என்று தமிழ்மணம் ஒரு அறிவிப்பை விட்டாலே போதும். இன்று டாப்-20 ஐ அடைத்துக்கொண்டிருக்கும் நிறைய பதிவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஏனென்றால் சொந்த சரக்கு எழுதும் அளவிற்கு அவர்கள் மூளை இல்லாத முண்டங்கள். நோகாமல் நொங்கு திங்க பார்ப்பவர்கள்.

தமிழ்மணத்தின் இந்த தவறான தரவரிசையால்தான் சொந்தமாக எழுதும் நிறைய பதிவர்கள் தமிழ்மணத்திலிருந்து விலகிக்கொண்டே போகிறார்கள். தமிழ் மணம் தர வரிசை பட்டியலை நிறுத்தவேண்டும். அல்லது காப்பி-பேஸ்ட் பதிவர்களை தமிழ் மணத்திலிருந்து நீக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை செய்தால்தான் தமிழ்மணத்திற்கு பதிவர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். இல்லாவிட்டால் காப்பி, பேஸ்ட், ஆபாச, பதிவுகளின் குப்பையாக தமிழ்மணம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பூனைக்கு மணியை ஐடியா மணி கட்டியிருக்கிறார். பார்க்கலாம், இனி, தமிழ்மணத்தின் நடவடிக்கையை....





அதிகமான ஹிட்ஸ்கள் வாங்கி தமிழ்மணத்தில் இடம் பிடிக்க......



ஒரு நாளுக்கு சுமார் 100 பதிவுகளுக்கு மேல் செல்லுங்கள். ஆனால், எல்லாவற்றையுமே படிக்க வேண்டுமென்பதில்லை. எல்லாப்பதிவுக்குமே வந்தேன், வாக்களித்தேன், சென்றேன் என்று பின்னூட்டமிடுங்கள். அல்லது, நறுக்கென்று நாலு ஓட்டுப்போட்டாச்சு என்று பின்னூட்டம் போடுங்கள். மொய்யிக்கு மொய் சிஸ்டம் மூலம் நீங்கள் 100 பேருக்கு கமெண்ட் போட்டிருந்தால் அதிலிருந்து 50 பேராவது வந்து உங்களின் பதிவுக்கு கமெண்ட் போடுவார்கள். குறிப்பாக தமிழ்மணத்தில் நாந்தான் முதல் ஓட்டு, த.ம. 2, த.ம.3 என்று போடுங்கள். அவர்களும் தமிழ்மணத்தில் ஓட்டு போடுவார்கள்.

அப்படியும் ஆள் வராவிட்டால், என்ன தலைவா, நம்ம கடைப்பக்கம் ஆளே கானாம், தயவுசெய்து வாங்கன்னு வெட்கத்தை விட்டு கெஞ்சுங்கள். பிறகு பாருங்கள் உங்க ஹிட்ஸை....

அடுத்ததாக....தினமும் 10 பதிவுக்காவது ஆக சேரும் கொள்கையை வைத்திருங்கள். யார் புதிதாக வலைப்பதிவு துவங்கினாலும் அவர்கள் follower ஆக அவர்கள் தலத்தில் சேரும் முன்பே நீங்கள் அவர்களிடம் follower ஆக சேர்ந்து விடுங்கள். நீங்கள் 1000 பதிவிலாவது follower ஆக சேர்ந்திருந்தால் அதில் பாதியாவது, அதாவது ஒரு 500-பேராவது உங்கள் தளத்தில் follower ஆக இணைவார்கள்.

அடுத்ததாக, ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 3 பதிவாவது போடுங்கள். பதிவுஎழுத மேட்டரே இல்லையா? கவலையை விடுங்கள். அதற்குத்தான் நக்கீரன், ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன், குமுதம், ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகள் இருக்கே. அதிலிருக்கும் பதிவுகளை உடனே காப்பி-பேஸ்ட் செய்து உங்கள் பேரில் வெளியிட்டுவிடுங்கள், அல்லது பதிவிற்கு கீழே சின்னதாக அந்த புத்தகத்தின் பேரை போட்டு நன்றி என்று யார் கண்ணிற்கும் தெரியாதவாறு போட்டுவிடவும். அப்ப்டி காப்பி பேஸ்ட் பதிவர்கள் நிறைய இருப்பதால் நீங்கள் முந்துங்கள்...முந்துபவர்களின் பதிவே ஹிட்டடிக்கும்.

அடுத்து facebook, twitter- இல் வெளிவரும் மொக்கைகளை காப்பி செய்து உடனே உங்கள் பேரில் வெளியிடாதீர்கள்.. சில நாள் கழித்து வெளியிடுங்கள்.
அப்போதுதான் அதை உண்மையாகவே எழுதியவர் மறந்து போயிருப்பார்.


யாராவது உங்களை பதிவு திருடர்கள் என்று திட்டினால் கவலைவேண்டாம். இப்பொது பதிவு திருடர்கள்தான் தமிழ்மணம் டாப்- 20 இல் அதிகம் இடம்பிடிக்கிறார்கள். குறிப்பாக வெட்கம், மானம், சூடு, சுரனையை மூட்டைகட்டி வைத்திடுங்கள். பிறகு பாருங்கள் சில நாட்களிலேயே நீங்களும் பிரபல பதிவர்தான்.





பதிவர்களை வாழ வையுங்கள் தமிழ்மணம் நிர்வாகிகளே....



தமிழ்மணம் டாப்-20 வந்ததிலிருந்து பதிவர்களுக்குள் ஒரு போட்டியே உருவாகிவிட்டது. எப்படியாவது முதல் இருபது இடங்களை பிடித்துவிடவேண்டும் என்று நிறைய பதிவர்கள் ஒரு நாளைக்கு ரெண்டு ,மூணு,நாலு பதிவுகளை போட்டு ஹிட்சை உயர்த்திக்கொள்கிறார்கள். ஆனால் அத்தனையும் சொந்தமாக யோசித்ததா என்றால் அதுதான் கிடையாது. எல்லாம் காப்பி பதிவுகள்.முன்னணி இதழ்களில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் காப்பி அடிக்கிறார்கள். இதனால் தமிழ்மணத்தில் முன்னணிக்கு வந்து விடுகிறார்கள். வாரந்தோறும் முன்னணிக்கு வரும் இருபது பதிவர்களை பார்த்தால்....சொந்தமாக எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காப்பியடிக்கும் பதிவர்களே முக்கால் சதவீதம் டாப் 20-ஐ ஆக்கிரமித்துக்கொள்கிரார்கள். நியாயமாக மூளையை கசக்கி எழுதும் பதிவர்கள் இதனால் சோர்ந்து போகிறார்கள் என்றால் மிகையில்லை.

பரபரப்பான தலைப்புக்கள், 18 + தலைப்புக்கள் வைக்கும் பதிவர்களின் பதிவுகளை சூடான இடுகையில் காட்டமாட்டோம் என்று தமிழ்மணம் நிர்வாகம்  முடிவு எடுத்திருப்பதாக பதிவுலக ஜாம்பவான் மங்குனி அமைச்சர் ஒரு பதிவிட்டிருந்தார். வரவேற்கத்தக்க நல்ல முடிவு.

அதேபோல....தொடர்ந்து காப்பியடிக்கும் பதிவர்களின் பதிவுகளையும் ஒரு எச்சரிக்கை கொடுத்து தமிழ் மனத்திலிருந்து நீக்க வேண்டும். அதையும் மீறி காப்பி செய்து வெளியிட்டால் அவர்களின் வலைதளத்தையும் நிரந்தரமாக நீக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் நியாயமாக எழுதும் பதிவர்களின் பதிவுகளும் முன்னணிக்கு வரும். குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க வேண்டிய இவர்களின் திறமை, குடத்திலிட்ட விளக்காய் மாறிவிட்டதிலிருந்து இவர்களை காப்பாற்றலாம். செய்யுமா தமிழ்மணம் நிர்வாகம்?





Powered by Blogger