Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

அடுத்தவர் குழந்தையை திருடும் ஆண்மையில்லாத பதிவர்கள்.......



இப்போதுள்ள பதிவர்களுக்கு என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று குழப்பம் போலும்.....சரக்கு இல்லாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே?
ஹிட்ஸ், ஓட்டு என்று புகழ்போதையில் மாட்டிக்கொண்டு விட்டதால்....சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளுகிறார்கள்.அதிலும் தமிழ்மணம் சூடான இடுகையிலும், டாப் 20-இடத்திலும் வர இப்போது அடுத்தவர்களின் பதிவை திருடுகிறார்கள்...மூளையை கசக்கி யோசித்து மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து டைப் செய்து அந்த பதிவை வெளியிட்டுவிட்டு தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் நாம் இணைத்த உடனே அந்த பதிவு வேறு திருட்டுபதிவரால் சுடப்பட்டு உடனே அது அவர்கள் பெயரிலும் வலையேற்றப்படுகிறது...சிலமணி நேரத்திலேயே அது சூடான இடுகைக்கும் அது வந்துவிடுகிறது. நிஜமாகவே அப்பதிவை எழுதிய பதிவர்கள் தலையில் துண்டைப்போட வேண்டியுள்ளது. ஏன் இந்த திருட்டுப்புத்தி? சே.... நாயும்  பிழைக்குமா இந்த பிழைப்பு. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர்கள் இன்னொருவன் குழந்தையை தத்து எடுப்பார்கள்...சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இருந்தும் தத்தெடுத்து கொள்வார்கள். இதில் இவர்கள் முதல் ரகம். குழந்தை பெற தகுதி இல்லாத ஆண்மையற்றவன் போல்தான் இவர்களின் பிழைப்பும்....அடுத்தவன் குழந்தையை திருடி தன் பெயரை இன்சியலாக்கி கொள்கிறார்கள். சமீபத்தில்கூட நிரூபன் என்ற பதிவர் அவரது பதிவை அதிகம் திருடுவதாக ஆதங்கப்பட்டிருக்கிறார்....பாவம்..அவரால் ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்...இப்படிப்பட்ட திருட்டு நாய்கள் இருக்கும்வரை பதிவு திருட்டை ஒழிக்க முடியாது.





பதிவர்களை வாழ வையுங்கள் தமிழ்மணம் நிர்வாகிகளே....



தமிழ்மணம் டாப்-20 வந்ததிலிருந்து பதிவர்களுக்குள் ஒரு போட்டியே உருவாகிவிட்டது. எப்படியாவது முதல் இருபது இடங்களை பிடித்துவிடவேண்டும் என்று நிறைய பதிவர்கள் ஒரு நாளைக்கு ரெண்டு ,மூணு,நாலு பதிவுகளை போட்டு ஹிட்சை உயர்த்திக்கொள்கிறார்கள். ஆனால் அத்தனையும் சொந்தமாக யோசித்ததா என்றால் அதுதான் கிடையாது. எல்லாம் காப்பி பதிவுகள்.முன்னணி இதழ்களில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் காப்பி அடிக்கிறார்கள். இதனால் தமிழ்மணத்தில் முன்னணிக்கு வந்து விடுகிறார்கள். வாரந்தோறும் முன்னணிக்கு வரும் இருபது பதிவர்களை பார்த்தால்....சொந்தமாக எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காப்பியடிக்கும் பதிவர்களே முக்கால் சதவீதம் டாப் 20-ஐ ஆக்கிரமித்துக்கொள்கிரார்கள். நியாயமாக மூளையை கசக்கி எழுதும் பதிவர்கள் இதனால் சோர்ந்து போகிறார்கள் என்றால் மிகையில்லை.

பரபரப்பான தலைப்புக்கள், 18 + தலைப்புக்கள் வைக்கும் பதிவர்களின் பதிவுகளை சூடான இடுகையில் காட்டமாட்டோம் என்று தமிழ்மணம் நிர்வாகம்  முடிவு எடுத்திருப்பதாக பதிவுலக ஜாம்பவான் மங்குனி அமைச்சர் ஒரு பதிவிட்டிருந்தார். வரவேற்கத்தக்க நல்ல முடிவு.

அதேபோல....தொடர்ந்து காப்பியடிக்கும் பதிவர்களின் பதிவுகளையும் ஒரு எச்சரிக்கை கொடுத்து தமிழ் மனத்திலிருந்து நீக்க வேண்டும். அதையும் மீறி காப்பி செய்து வெளியிட்டால் அவர்களின் வலைதளத்தையும் நிரந்தரமாக நீக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் நியாயமாக எழுதும் பதிவர்களின் பதிவுகளும் முன்னணிக்கு வரும். குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க வேண்டிய இவர்களின் திறமை, குடத்திலிட்ட விளக்காய் மாறிவிட்டதிலிருந்து இவர்களை காப்பாற்றலாம். செய்யுமா தமிழ்மணம் நிர்வாகம்?





Powered by Blogger