அதிகமான ஹிட்ஸ்கள் வாங்கி தமிழ்மணத்தில் இடம் பிடிக்க......



ஒரு நாளுக்கு சுமார் 100 பதிவுகளுக்கு மேல் செல்லுங்கள். ஆனால், எல்லாவற்றையுமே படிக்க வேண்டுமென்பதில்லை. எல்லாப்பதிவுக்குமே வந்தேன், வாக்களித்தேன், சென்றேன் என்று பின்னூட்டமிடுங்கள். அல்லது, நறுக்கென்று நாலு ஓட்டுப்போட்டாச்சு என்று பின்னூட்டம் போடுங்கள். மொய்யிக்கு மொய் சிஸ்டம் மூலம் நீங்கள் 100 பேருக்கு கமெண்ட் போட்டிருந்தால் அதிலிருந்து 50 பேராவது வந்து உங்களின் பதிவுக்கு கமெண்ட் போடுவார்கள். குறிப்பாக தமிழ்மணத்தில் நாந்தான் முதல் ஓட்டு, த.ம. 2, த.ம.3 என்று போடுங்கள். அவர்களும் தமிழ்மணத்தில் ஓட்டு போடுவார்கள்.

அப்படியும் ஆள் வராவிட்டால், என்ன தலைவா, நம்ம கடைப்பக்கம் ஆளே கானாம், தயவுசெய்து வாங்கன்னு வெட்கத்தை விட்டு கெஞ்சுங்கள். பிறகு பாருங்கள் உங்க ஹிட்ஸை....

அடுத்ததாக....தினமும் 10 பதிவுக்காவது ஆக சேரும் கொள்கையை வைத்திருங்கள். யார் புதிதாக வலைப்பதிவு துவங்கினாலும் அவர்கள் follower ஆக அவர்கள் தலத்தில் சேரும் முன்பே நீங்கள் அவர்களிடம் follower ஆக சேர்ந்து விடுங்கள். நீங்கள் 1000 பதிவிலாவது follower ஆக சேர்ந்திருந்தால் அதில் பாதியாவது, அதாவது ஒரு 500-பேராவது உங்கள் தளத்தில் follower ஆக இணைவார்கள்.

அடுத்ததாக, ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 3 பதிவாவது போடுங்கள். பதிவுஎழுத மேட்டரே இல்லையா? கவலையை விடுங்கள். அதற்குத்தான் நக்கீரன், ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன், குமுதம், ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகள் இருக்கே. அதிலிருக்கும் பதிவுகளை உடனே காப்பி-பேஸ்ட் செய்து உங்கள் பேரில் வெளியிட்டுவிடுங்கள், அல்லது பதிவிற்கு கீழே சின்னதாக அந்த புத்தகத்தின் பேரை போட்டு நன்றி என்று யார் கண்ணிற்கும் தெரியாதவாறு போட்டுவிடவும். அப்ப்டி காப்பி பேஸ்ட் பதிவர்கள் நிறைய இருப்பதால் நீங்கள் முந்துங்கள்...முந்துபவர்களின் பதிவே ஹிட்டடிக்கும்.

அடுத்து facebook, twitter- இல் வெளிவரும் மொக்கைகளை காப்பி செய்து உடனே உங்கள் பேரில் வெளியிடாதீர்கள்.. சில நாள் கழித்து வெளியிடுங்கள்.
அப்போதுதான் அதை உண்மையாகவே எழுதியவர் மறந்து போயிருப்பார்.


யாராவது உங்களை பதிவு திருடர்கள் என்று திட்டினால் கவலைவேண்டாம். இப்பொது பதிவு திருடர்கள்தான் தமிழ்மணம் டாப்- 20 இல் அதிகம் இடம்பிடிக்கிறார்கள். குறிப்பாக வெட்கம், மானம், சூடு, சுரனையை மூட்டைகட்டி வைத்திடுங்கள். பிறகு பாருங்கள் சில நாட்களிலேயே நீங்களும் பிரபல பதிவர்தான்.





22 நண்பர்கள்

அதிகமான ஹிட்ஸ்கள் வாங்கி தமிழ்மணத்தில் இடம் பிடிக்க......

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

  1. தல பதிவு பயனுள்ளது
    இத செய்றதுக்கு வெட்கம் மானம் உள்ளவன் கவலைபடுவான் ஆனா நாம?

    ஆமாம் அது எங்க விக்குது
    நம்ம கடை பக்கம் வாங்க
    தமிழில் SEO தகவல்கள்

    dfgtrdefg கருத்து இது :

    நம்ம கடை பக்கம் வாங்க

    Unknown கருத்து இது :

    பகிர்வுக்கு நன்றி மாப்ள!....நான் நெஞ்ச நிமித்தி சொல்லுவேன் எந்த பத்திரிகையும் காப்பி அடிச்சி போட்டதில்ல...நீர் என்னையும் சேர்த்து திட்டுவதில் என்னய்யா ஞாயம்...என்ன என்னோட பதிவு அதிகமா மொக்கை அத வேணும்னா நான் ஒத்துக்கறேன் ஹிஹி...இதுக்கு பதில் சொல்லுய்யா மாப்ள!

    stalin wesley கருத்து இது :

    என்ன என்னமோ சொல்ரிங்க ,.........

    Lenin கருத்து இது :

    புரட்சி செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள் போல

    Philosophy Prabhakaran கருத்து இது :

    தமிழ்மணம் 5 :)

    NaSo கருத்து இது :

    :)))

    Unknown கருத்து இது :

    நல்லாவே ஐடியா கொடுத்திருக்கீங்க:))))))))

    rajamelaiyur கருத்து இது :

    //
    குறிப்பாக வெட்கம், மானம், சூடு, சுரனையை மூட்டைகட்டி வைத்திடுங்கள். பிறகு பாருங்கள் சில நாட்களிலேயே நீங்களும் பிரபல பதிவர்தான்.
    //

    ஹா ...ஹா ...ஹா ...ஹா ...ஹா ...

    rajamelaiyur கருத்து இது :

    ரொம்ப பாதிக்கபட்டு இருகிங்க போல

    Anonymous கருத்து இது :

    உங்கள் பதிவுக்கு என் மனதில் தோன்றியதை ஒரு பதிவாக என் ப்ளாகில் போட்டிருக்கிறேன்... பார்த்து கருத்திடுங்கள் நண்பா

    http://nisiyas.blogspot.com/2011/09/blog-post.html

    இந்த திரட்டி என்பது என்ன அதோட பண்பாடு பயன்பாடு செயல்முறை விளக்கம் ஏதும் இருக்கா

    Unknown கருத்து இது :

    நம்ம கடை பக்கம் வாங்க

    M.R கருத்து இது :

    நண்பரே வணக்கம் .தங்கள் தளம் இன்று தான் முதன் முதலாக வருகிறேன் .

    தங்கள் ஆதங்கம் புரிகிறது .ஆனால் நான் வாக்களித்தேன் என்று குறிப்பிடுவது

    திரும்பவும் வாக்குகள் பெறத்தான் ,ஏனென்றால் அது ஹிட்சிர்க்காக அல்ல ,வாக்குகள் அதிகம் பெற்றால் பதிவு திரட்டியில் முதல் பக்கத்தில் வரும் அது புதிதாக வரும் பார்வையாளரிடம் கண்களில் படும். அப்பிடி படும் எனது பதிவுகள் யாருக்காவது சில நபர்களுக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்ற எண்ணம தான்.

    ஆனால் நான் அதிகம் ஹிட்ஸ் வாங்கியதில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

    என்னுடைய ஆதங்கம் நான் பதிவிடும் மருத்துவ குறிப்புகள் சில நபர்களுக்காவது உபயோகப்பட வேண்டும் என்று தான் .

    இன்னும் நிறைய சொல்லலாம் நண்பரே .

    வருகிறேன் நண்பரே ,நன்றி

    ஜோதிஜி கருத்து இது :

    அட்ராக்சனா இருக்கட்டும்ன்னுதான் இந்த புரட்சிக்காரன்னு பேரு....மற்றபடி புரட்சியும் இல்லை....புடலங்காயுமில்லை

    நிரூபன் கருத்து இது :

    அன்பிற்குரிய நண்பா
    வணக்கம்
    நீங்கள் இங்கே பெயர் குறிப்பிட்டு யாரையும் சுட்டியிருக்கா விட்டாலும்,
    தமிழ் மணத்தில் அதிக ஓட்டுக்கள் என் பதிவுகளுக்கும் கிடைக்கின்றன.
    ஆனால் நீங்கள் சொல்வது போல ஒற்றை வரிப் பின்னூட்டங்களோ,
    பதிவினைப் படிக்காது பின்னூட்டங்களோ நான் எழுதுவதில்லை.

    அடுத்த விடயம், தமிழ் மண ட்ராபிக் ட்ரேங்கில் என் வலைப் பதிவு இல்லை என்பதனையும்,
    காப்பி பேஸ்ட் பண்ணி முதல் 20 இனுள் வர விரும்பும் அன்பர்களால் தான்,
    என் வலை குறி வைக்கப்பட்டு தமிழ் மணத்தின் ட்ராபிக் ட்ரேங்கிலிந்து நீக்கப்பட்டது என்பதனையும் இத்தால் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    நான் பதிவெழுத வந்து ரெண்டாவது மாதத்தில் என் வலைப் பதிவிற்கு தமிழ் மணத்தில் ஏழாம் இடம் கிடைத்தது,
    இதனைப் பொறுக்க முடியாதவர்கள் என் வலைப் பதிவில் தனி மனிதத் தாக்குதல் ஒரு அரசியற் கட்டுரையில் இருப்பதாக ரிப்போர்ட் பண்ணி என் பதிவினை வலையினை விட்டு நீக்கும் படி செய்தார்கள்.

    தற்போது புதிய முகவரியில் என் வலைப் பதிவினை எழுதி வருகின்றேன்.
    என் சுய படைப்புக்களைத் தான் பகிர்கிறேனே அன்றி, காப்பி பேஸ்ட் எதுவும் இதுவரை எழுதியதில்லை.

    அடுத்த விடயம், என் பின்னூட்டப் பாணி சற்று மாறுபட்டது என்பதனையும் இவ் இடத்தில் விட்டுச் செல்கிறேன்.

    உங்களின் மேலான பதில்க் கருத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    பனித்துளி சங்கர் கருத்து இது :

    அப்படியா பின்பற்றுகிறேன் அரசே . நேரம் அதிகம் இருக்கிறது உங்களுக்கு என்று நினைக்கிறேன் . தொடரட்டும் தங்களின் புடலங்காய் இல்லை புரட்சி .

    இராஜராஜேஸ்வரி கருத்து இது :

    புரட்சிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    நல்லாயிருக்கே யோசனைகள்...

    வலை வடிவமைப்பு நல்லாயிருக்கு நண்பா...

    நானும் வலைப்பதிவர்களின் நாடித்துடிப்பைப் பிடித்துப்பார்த்திருக்கிறேன் நண்பா..

    http://gunathamizh.blogspot.com/2011/05/350.html இந்தச் சுட்டியில் அந்த நுட்பத்தைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    ஜோதிஜி கருத்து இது :

    வணக்கம்

    இதில் என் பெயரில் வந்துள்ள விமர்சனம் நான் எழுதியது அல்ல. என் பெயரை வைத்து எழுதிய நண்பருக்கு நன்றி.

Powered by Blogger