பதிவர்களை வாழ வையுங்கள் தமிழ்மணம் நிர்வாகிகளே....தமிழ்மணம் டாப்-20 வந்ததிலிருந்து பதிவர்களுக்குள் ஒரு போட்டியே உருவாகிவிட்டது. எப்படியாவது முதல் இருபது இடங்களை பிடித்துவிடவேண்டும் என்று நிறைய பதிவர்கள் ஒரு நாளைக்கு ரெண்டு ,மூணு,நாலு பதிவுகளை போட்டு ஹிட்சை உயர்த்திக்கொள்கிறார்கள். ஆனால் அத்தனையும் சொந்தமாக யோசித்ததா என்றால் அதுதான் கிடையாது. எல்லாம் காப்பி பதிவுகள்.முன்னணி இதழ்களில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் காப்பி அடிக்கிறார்கள். இதனால் தமிழ்மணத்தில் முன்னணிக்கு வந்து விடுகிறார்கள். வாரந்தோறும் முன்னணிக்கு வரும் இருபது பதிவர்களை பார்த்தால்....சொந்தமாக எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காப்பியடிக்கும் பதிவர்களே முக்கால் சதவீதம் டாப் 20-ஐ ஆக்கிரமித்துக்கொள்கிரார்கள். நியாயமாக மூளையை கசக்கி எழுதும் பதிவர்கள் இதனால் சோர்ந்து போகிறார்கள் என்றால் மிகையில்லை.

பரபரப்பான தலைப்புக்கள், 18 + தலைப்புக்கள் வைக்கும் பதிவர்களின் பதிவுகளை சூடான இடுகையில் காட்டமாட்டோம் என்று தமிழ்மணம் நிர்வாகம்  முடிவு எடுத்திருப்பதாக பதிவுலக ஜாம்பவான் மங்குனி அமைச்சர் ஒரு பதிவிட்டிருந்தார். வரவேற்கத்தக்க நல்ல முடிவு.

அதேபோல....தொடர்ந்து காப்பியடிக்கும் பதிவர்களின் பதிவுகளையும் ஒரு எச்சரிக்கை கொடுத்து தமிழ் மனத்திலிருந்து நீக்க வேண்டும். அதையும் மீறி காப்பி செய்து வெளியிட்டால் அவர்களின் வலைதளத்தையும் நிரந்தரமாக நீக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் நியாயமாக எழுதும் பதிவர்களின் பதிவுகளும் முன்னணிக்கு வரும். குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க வேண்டிய இவர்களின் திறமை, குடத்திலிட்ட விளக்காய் மாறிவிட்டதிலிருந்து இவர்களை காப்பாற்றலாம். செய்யுமா தமிழ்மணம் நிர்வாகம்?

23 நண்பர்கள்

பதிவர்களை வாழ வையுங்கள் தமிழ்மணம் நிர்வாகிகளே....

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

 1. நிரூபன் கருத்து இது :

  வணக்கம் சகோ, உங்களின் ஆதங்கம், கருத்துக்கள் நியாயமானவை. ஆனால் இந்த வாரம் சக பதிவர் ஓட்ட வடை நாரயாணன் காப்பி பேஸ்ட் பதிவைப் போடாமல் தரமான பதிவுகளால் முன்னுக்கு வந்திருக்கிறார். ஆகவே காப்பி பேஸ்ட் வட்டத்திற்குள் அவர் காத்திரமான பதிவினைத் தருகிறார் சகோ.

  புரட்சிக்காரன் கருத்து இது :

  அப்படியா ஓட்டவடைக்கு முதலிடமா? பாராட்டுக்கள் அவருக்கு....சொந்தமாக யோசித்து எழுதும் மிகசில பதிவர்களில் அவரும் ஒருவர்.

  Anonymous கருத்து இது :

  மிகவும் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. இந்த காபி பேஸ்ட் பதிவர்களால், நல்ல சிந்தனையும், எழுத்துத் திறமையும், ஆரோக்கியமான கருத்து விவாதம் செய்பவர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார்கள்.

  இராஜராஜேஸ்வரி கருத்து இது :

  வரவேற்கத்தக்க நல்ல முடிவு.

  நிரூபன் கருத்து இது :

  மற்றுமோர் விடயம், சிபி, கருண் முதலிய முன்னணிப் பதிவர்களின் படைப்புக்களில் அவர்களது திறமைகள் ஒன்றேன்றாலும் நாளுக்கு ஒன்று எனும் வீதத்தில் வரும். சிபி, கருண் இரண்டு பதிவுகள் போட்டாலும், நாளொன்றுக்கு ஒரு பதிவு சொந்தச் சரக்காக தான் இருக்கும், ஆகவே எல்லாப் பதிவர்களையும் இதனுள் உள்ளடக்க முடியாது சகோ.
  http://tamilmanam.net/top/blogs/1

  வீராங்கன் கருத்து இது :

  சில ஆண்டுகளுக்கு முன் காப்பி பேஸ்ட் வகையராக்களை செய்திகள் என்று ஒரு பிரிவில் பிரித்துவிடுவார்கள். தொடர்ச்சியாக காப்பி பேஸ்ட் பதிவுகள் அந்த இடத்தைப் பிடிக்கும் தமிழ்மணமுகப்பில் துறை சார்ந்த பிரிவுகள் என்பதைப் போல நேரடியாகப் போய்விடும். பின்னர் பதிவர் தமிழ்மணத்தை அணுகி விடுவிக்கச் சொன்னால்தான் விடுவிப்பார்கள். ஏனோ அதை மாற்றி விட்டார்கள்.

  A.R.ராஜகோபாலன் கருத்து இது :

  உண்மையை ஒளிக்காமல் சொல்வதென்றால் இந்த உச்ச இடத்தினால் என்ன பயன், பதிவை கடமையாய் பார்ப்பவர்களை விட, மனதார ரசித்து நம் குறைகளை நீக்க முற்படுபவர்தானே முக்கியம் ஒரு படைப்பாளிக்கு
  அதை தவிர்த்து இதில் எனக்கு உடன்பாடில்லை, புரட்சிகாரனின் புரட்சி தொடங்கிடிச்சோ ???

  தஙள் கருத்து முற்றிலும் உண்மை. இது மட்டுமல்ல தமிழர் பண்பாட்டிற்கு
  மாறாகா,தனிப்பட்ட மனித்ர்களையும,ஏன் பலகட்சித் தலைவகளையும் அவர் தம் குடும்பங்களையும் மற்றும் நடிகை நடிகர்கள் பற்றியும் படிப்போரின் கவனத்தை ஈர்க்கவேண்டி நாகரிகமற்ற தலைப்புகளைத் தந்து எழுதும் போக்கு
  பரவலா உள்ளதை கட்டுப் படுத்தும் நலமென்று கருதுகிறேன்
  நன்றி

  புலவர் சா இராமாநுசம்
  புலவர் குரல்

  விக்கி உலகம் கருத்து இது :

  super shot maapla!

  NKS.ஹாஜா மைதீன் கருத்து இது :

  நல்ல பதிவு..இரண்டு பதிவுகள்தான் ஒருநாளுக்கு அதிகபட்சம் என்பது என் கருத்து...தமிழ்மணம் அங்கீகரிக்குமா?

  Anonymous கருத்து இது :

  @ காப்பி பேஸ்ட் பதிவுகளில் எனக்கும் உடன்பாடு இல்லை. குறைந்தது காப்பி செய்யப்பட்ட பதிவில் தமது சொந்தக் கருத்துக்களை வைத்து அலசி எழுதினால் கூட பரவாயில்லை. அதே போல 18 + தலைப்புகளும் வெறுப்பேற்றுபவையே ஆகும்.

  ஆனால் அவற்றை நீக்குவது எனில் தொழிநுட்ப ரீதியாக சற்றேக் கடினம் தான். எதாவது செய்வது நல்லது? தமிழ் மணம் நிர்வாகம் கவனிக்கக் கடவ ?

  அதே சமயம் இது எழுத்துச் சுதந்திரத்தை மீறுவதாகக் கூட எண்ணப் படலாம். ஆகவே சற்றே ! சிந்திக்க வேண்டிய நிலை.

  ஒரு நாளைக்கு எத்தனைப் பதிவும் எழுதலாம். ஆங்கிலத்தில் சில பதிவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பதிவுக் கூட எழுதுகின்றார்கள். அதனைக் கட்டுப்படுத்துவது நியாயமாகாது.

  நாகரிகமான தலைப்பு, காப்பி பேஸ்ட் செய்வதில் fair use செய்தால் நல்லது, அப்பட்டமான காப்பிகள் சற்றே யோசிக்க வேண்டிய விடயம் தான்.

  இரா. செல்வராசு (R.Selvaraj) கருத்து இது :

  இந்தக் கோரிக்கையில் நியாயம் உண்டு. அதே சமயம் நடைமுறையில் உள்ள சிக்கல்களை இக்பால் செல்வனின் மேற்கண்ட பின்னூட்டம் சரியாகச் சொல்கிறது. நிர்வாகிகளின் நேரம், நுட்பச்சாத்தியம், எழுத்துச்சுதந்திரம் போன்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், அப்படியே வெட்டி ஒட்டும் பதிவுகள் உகந்தவை அல்லவென்று தமிழ்மணம் ஏற்கனவே சொல்லி இருக்கிறது. அப்படியான சிலவற்றைப் பலமுறை நீக்கி இருக்கிறோம். மேற்சொன்ன கட்டங்களுக்குள்ளான சில நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்வோம்.

  Avargal Unmaigal கருத்து இது :

  1.காப்பி பேஸ்ட் செய்து பதிவு போடு வருபவர்களை விட அதை அவர்களின் ஒரிஜனல் பதிவு என்று அவர்களை பாராட்டி கமெண்ட் போடுபவர்களைத்தான் முதலில் குறை சொல்ல வேண்டும். அப்படிபட்ட கமெண்ட் வருவதினாலேயே அவர்கள் அதை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

  2. இக்பால் செல்வனின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்

  செங்கோவி கருத்து இது :

  டாப் 20 லிஸ்ட் தேவையற்றது தான் நண்பரே..அதை வெளியிடுவதை நிருத்தினாலும் நல்லதே.

  Anonymous கருத்து இது :

  இந்த வாரம் 14ஆம் இடம் மற்றும் 15ஆம் இடம் பிடித்திருக்கும் இருவரும் 1000% காப்பி பேஸ்ட் பதிவர்கள். 14ஆம் இடத்தில் வந்தவர் எங்கே இருந்து சுட்டது என்று போடுவார். ஆனால் இந்த 15 ஆம் இடத்தில் வந்தவர் ஏதோ அவர் எழுதியது போலவே வெளியிடுவார். கேவலம்.

  துளசி கோபால் கருத்து இது :

  Copy & paste க்குன்னே ஒரு தனிப்பிரிவை ஆரம்பிச்சால் தேவலை.
  அவுங்களும் லேபிளில் காபி அண்ட் பேஸ்ட்ன்னு போட்டுக்கலாம்:-)

  Anonymous கருத்து இது :

  டாப் 20 லிஸ்ட் தேவை இல்லை என சொல்ல முடியாது. ஏற்கனவே டெக்னோரட்டி போன்ற ஆங்கில திரட்டிகளில் வகை வகையாக ஆங்கில வலைப்பதிவுகளுக்கு ரேங்க் போட்டு காட்டுகின்றார்கள். அதே தான் தமிழ்மணமும் பீட்டாவாகப் பின்பற்றுகின்றது எனலாம்.

  ரேங்கிங்கை நீக்கச் சொல்வது நியாயமில்லை. ஆனால் காப்பி பேஸ்டுகளில் சில நடவடிக்கைகளை எடுப்பதாக இரா. செல்வராசு கூறியிருக்கின்றதைக் கவனிக்கவும்.

  ரேங்கிங் என்பதை வெகுவிரைவில் வகை பிரித்தும் தமிழ்மணம் வெளியிடலாம் இதனால் பல்வேறு வலைதளங்களும் முன்னே இருப்பது போன்ற உணர்வு வரலாம்.

  fair use இல்லாமல் அப்பட்டமாக காப்பியடிக்கும் வலைப்பதிவுகளை ரேங்கிங்கில் இருந்து பின்னே தள்ளலாம். ஆனால் அதற்கான தொழில் நுட்பத்தை தமிழ் மணம் உருவாக்கும் வரை பொறுத்துத் தான் ஆக வேண்டும் என நினைக்கின்றேன்.

  மங்குனி அமைச்சர் கருத்து இது :

  ரைட்டு நடக்கட்டும் , நடக்கட்டும் ...........

  மங்குனி அமைச்சர் கருத்து இது :

  பதிவுலக ஜாம்பவான் மங்குனி அமைச்சர் ///

  ஏன் இந்த குலைவெறி? எதுன்னாலும் பேசி தீத்துக்கிரலாம் பிரதர் ......

  ரியாஸ் அஹமது கருத்து இது :

  நான் ரொம்ப புதுவரவு,இன்னும் தமிழ் மனதில் என் பதிவுகளை இனைக்கவே முடியல இருந்தும் என்னையும் சிலர் பின்பற்ற ஆரம்பித்தவுடன் ஒரு பொறுப்பு வந்து இருக்கு நான் இந்த கோப்பி பேஸ்ட் வேலை செய்யமாட்டேன்..நீங்க என்னை follow பன்றதுக்கும் நன்றி நண்பரே

  அம்பாளடியாள் கருத்து இது :

  நியாயமான கோரிக்கை!..பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்......

  சசிகுமார் கருத்து இது :

  சரியான நேரத்தில் வந்துள்ள பதிவு

  யாழ் கணினி நூலகம் கருத்து இது :

  சொந்தப் பதிவுகள் பிரசுரிக்க ஒரு தளம் தனியாக பேணுவதே சிறந்தது. அவ்வாறான தளங்களே ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

Powered by Blogger