கைக்குழந்தை பதிவரா நீங்கள்?

கைக்குழந்தை பதிவரா நீங்கள்?  


வாங்கோ அப்பாவி, புதிய தோழர்களே/ தோழிகளே


ஷேமமாக இருக்கேளா? ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா


நீங்கள் பதிவுலகில் புதியவரா? பலே. இந்தப்பதிவு உங்களுக்குத்தான். பத்திரிகைகளில் சாதிக்கும் ஆர்வமும், திறமையும் இருந்தாலும் வாய்ப்பு மிகச்சிலருக்கே கிடைக்கிறது. எனவே உங்களுக்கென ஒரு வலைப்பூவை தொடங்கி அதில் தங்கள் திறமையை நிரூபித்து வெற்றி பெற காலடி எடுத்து வைத்து இருப்பீர்கள். ஆனால் அப்படி முன்னேற விடாமல் உங்கள் கவனத்தை சிதற அடித்து ஓட்டுக்களை குவிக்கவும், ஹிட்ஸ்களை அள்ளவும் உங்களை திசைமாற்றுவதில் சிலர் கைதேர்ந்தவர்கள். அந்த வலையில்  சிக்காதேள்அவங்களாண்ட  இருந்து பேஷாக தப்பி நேர்மையுடன் வெற்றி பெற உங்களுக்கு சில ஆலோசனைகள் கீழே:


*** ஆரம்பத்தில் ஒருசில பதிவுகளை மட்டும் போட்டுவிட்டு நல்ல பதிவர்கள் யார் என்ற தேடுதலை துவக்குங்கோயாருக்கு நிறைய பாலோயர், பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் கிடக்கிறதோ அவர்கள் பலர் தம் கடும் உழைப்பால் பதிவுலகில் உயர்ந்தவர்கள். அப்படி உழைக்காமல் அதே எண்ணிக்கையில் ஓட்டுகள் வாங்கும் கலப்பட பிரபலங்களை அவர்கள் எழுதும் 'சேம் பிளட்'  பதிவுகளை வைத்தே அடையாளம் காணலாம்


*** எழுத்தாழமும், சீர்மிகு சிந்தனையும்  கொண்ட பதிவர்களின் ப்ளாக்குகளில்  அடிக்கடி மனதில் படும் கருத்துக்களை வைங்கோ சாமி.பதிவுசார் விளக்கங்களை கேட்டுப்பெறுங்கோஉங்கள் பதிவை அவர் பார்க்க வேண்டும் என்றெண்ணி அவர் பதிவை படிக்காமல் ஒரே வார்த்தையில் புகழ்ந்து விட்டு ஓட வேண்டாம். அப்படி செய்யாதேள். உங்க மதிப்பு தரைமட்டமாகும்



*** நீங்கள் பதிவை எழுத ஆரம்பித்ததும் உடனே வந்து பாசமாக பின்னூட்டம் போடும் நபர்களில் யார் நல்லவர், யார் ஓட்டுக்கு அலைபவர் என்று இனம் கண்டு கொள்ளுங்க. அப்படிப்பட்டவர்கள் எங்கெல்லாம் தன் கடையை விரித்து இப்படி புதியவர்களை வலையில் போடுகிறார் என்று அடிக்கடி பாருங்ககோள். அப்போது புரியும். அவர்கள் தங்களுக்கு தருவது ஊக்கம் அல்லஓட்டுப்பிச்சை அரசியல். அவர்களை கண்டுகொள்ளாதீர்கள். உண்மையாகவே ஊக்கம் தரும் பிரபல பதிவர்கள் யார் என்று அவர்களின் பதிவின் தரத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். புரியுதோ சமத்து



***அதே போல் உங்களுக்கு உடனே பாலோயராக சேரும் ஈர மனம் கொண்ட சிலபோலி அபிஷ்டுகளிடம் உஷாராக இருங்க. வலைப்பூ தொடங்கி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. ஏன் இந்த அவசரம் என்று கேளுங்கோமுதலில் என் பதிவுகளை கொஞ்ச நாட்களாவது  படித்துவிட்டு பிறகு என்னை கொஞ்ச வாருங்கள். இப்போதைக்கு அசடு வழிகிறது. துடைத்து கொள்ளுங்கோ என்று காரமாக கூறுங்கள்எடுத்துக்காட்டு வேணுமா? என் வலைப்பூ தொடங்கிய உடனேயே பாலோ செய்த சக்கைப்பதிவர் மற்றும் புலவர் சந்து இருவரையும் வலது பக்கம் உள்ள 'தோழர்கள்' பட்டியலில் பாருங்க. மோர், நெக்ஸ்ட் ஆகிய சொற்களை அழுத்திப்பாருங்கோஉடனே முகமூடி கிழிந்த கடுப்பில் அன்பால்லோ செய்ய முயல்வார்கள்.   கவலை இல்லை. ஏற்கனவே நகல் எடுத்து விட்டேன். அவசியம் வந்தால் புட்டு வைக்கிறேன்இப்படி லட்சார்ச்சனை செய்து உண்மையை புகை போட்டு மறைப்பதில் ஓராண்டு டிப்ளோமா படித்து தங்க மெடல் வாங்கியவர்கள் இந்த பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி பதிவர்கள். உஷாரா இருங்கோ அம்பி



***  எப்பேர்பட்ட பிரபல பதிவராக இருப்பினும் அந்தப்பதிவு பிடித்தால் மட்டும் கருத்தும், ஓட்டும் போடுங்கள். மொய்க்கு மொய், நெய்க்கு நெய் தமிழர் பண்பாடு என்று பொய்க்கு பொய் சொல்லி பல்லை இளித்து ஓட்டுவாங்க வருபவர்களை ஓரம்கட்டுங்கோள்மோசமான அரசியல்வாதி கூட 5 வருடத்திற்கு ஒரு முறைதான் ஓட்டுக்கு அலைவான். ஆனால் பதிவுலக அரசியல்வியாதிகள் ஓட்டுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். ஜாக்கிரதை பிள்ளைவாள்.  



*** உங்கள் பதிவு நன்றாகவும், எங்கிருந்தும் திருடப்படாமலும்   இருந்தால் மெல்ல மெல்ல நீங்கள் உச்சத்தை எட்டுவீர்கள். அதற்கு கொஞ்சம் மாதங்கள் கூட ஆகலாம். ஆனால் அதுவே நிலையான வெற்றியைத்தரும். போலி புகழ் பெறும் பேராசையில்  தினம்தோறும்  காக்காய் பிடித்து முன்னேறிய ஆட்கள் செய்ததை நீங்கள் செய்தால் உங்களை சில மாதங்களிலேயே 500 பேர் பின்தொடரலாம்ஏகப்பட்ட ஓட்டுகள் விழலாம், லட்சக்கணக்கான ஹிட்ஸ் விழலாம். அதில் எந்தப்பயனும் இல்லைங்கோஅந்த போதையில் அதே முட்டாள்தனத்தை திரும்ப திரும்ப செய்தால் பதிவுலகில் கடைசி வரை நீங்கள் ஒரு டம்மி அல்லது காமடி பீஸ் ஆகவே பார்க்கப்படுவீர்கள். நோக்கு நன்னா புரியறதா சேஷ கோபாலா?



*** தினம் ஒரு மொக்கைப்பதிவு. சில சமயம் மூன்று மொக்கைப்பதிவுகள் போட்டு உங்கள் நேரத்தையும், பிறர் நேரத்தையும் வீண் செய்ய வேண்டாம்வலைத்தளம் பூஞ்சோலையே தவி கண்டதை கொட்டும் கழிப்பிடம் அல்ல. எவ்வளோ ஜலம் போட்டு சுத்தம் செய்யறது சாஸ்திரிகளே.  


இப்போ அடுத்தாத்து அனந்து கூப்பிடறான். நீங்களும் ஆத்துக்கு போங்கோ

                                                                   
டிஸ்கி 

என் வலைப்பூவை ஹாக் செய்ய இரண்டு முறை முயற்சி நடந்துள்ளது. இம்முறை மட்டும் அவர்களை மன்னித்து விடுகிறேன். இன்னொரு முறை இவ்வாறு செய்ய வேண்டாம். நான் ஒவ்வொரு முறையும் சுவாரஸ்யம் கருதி வெவ்வேறு எழுத்து நடையில் எழுதுவதால் இதற்கு தொடர்பு இல்லாத பதிவர்கள் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம் 


வாழிய வளமுடன்,
புரட்சிக்காரன்             
                                                                                 








31 நண்பர்கள்

கைக்குழந்தை பதிவரா நீங்கள்?

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

  1. raja கருத்து இது :

    நன்றி! பயனுள்ளதாக இருந்தது.

    இராஜராஜேஸ்வரி கருத்து இது :

    பரட்சிக்கருத்துகளுக்கு பாராட்டுக்கள்..

    Sivakumar கருத்து இது :

    நண்பரே, உங்கள் நிலை குறித்து எதிர்காலம் தீர்மானிக்கட்டும். அது ஒரு புறம். யார் நீங்கள் எனும் சந்தேகத்தில் முன்பே ஒரு பதிவர் பாதிக்கப்பட்டது தங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அது தொடர்கதை ஆகி மேலும் இதில் தொடர்பில்லா பதிவர்கள் சங்கடத்திற்கு ஆளாகவும் வாய்ப்புண்டு. உங்கள் புகைப்படம் அல்லது தொலைபேசி கூட அவசியம் இல்லை. குறைந்தபட்சம் உங்கள் பெயர் மற்றும் வசிக்கும் நாட்டை பற்றி தெரிவியுங்கள்.

    Sivakumar கருத்து இது :

    இதைக்கேட்பது சரியா தவறா என்பது வேறு விஷயம். ஆனால் தங்கள் பதிவின் சாரம் மற்றும் எழுத்து நடை மூலம் வேறொரு பதிவர்தான் புரட்சிக்காரன் என்று கருதப்பட்டு, அது நண்பர்களிடம் தேவையற்ற பூசல்களை அதிகரிக்கும். அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். புண்ணியமாய் போகும் உங்களுக்கு.

    Arun Ambie கருத்து இது :

    பயன்மிக்க கருத்துக்கள். நன்றியும் பாராட்டுக்களும்.

    A.R.ராஜகோபாலன் கருத்து இது :

    பதிவர்களைப் பற்றிய பட்ட வர்த்தனமான செய்தி.

    பால கணேஷ் கருத்து இது :

    இதுவரை அறியாத, எனக்கு பயன்தரும் நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி!

    SURYAJEEVA கருத்து இது :

    //அதே போல் உங்களுக்கு உடனே பாலோயராக சேரும் ஈர மனம் கொண்ட சிலபோலி அபிஷ்டுகளிடம் உஷாராக இருங்க. வலைப்பூ தொடங்கி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. ஏன் இந்த அவசரம் என்று கேளுங்கோ//

    தோழர்,
    நான் எந்த திரட்டிகளையும் சென்று பார்வை இடுவதில்லை...
    அதனால் ஏதாவது புதிய வலை பூ கண்ணில் பட்டால் உடனே பொல்லொவ் செய்வது என் வழக்கம்... அப்பொழுது தான் அவர்கள் என்ன புதிதாக எழுதினார்கள் என்பதை என் டாஸ் போர்டில் பார்க்க முடிகிறது.. ஆகையால் நல்ல பதிவுகள் இருந்தால் என் கருத்துக்களை தெரிவிப்பது என் வழக்கம்.. ஆகையால் இப்படி பொத்தாம் பொதுவாக குறை சொல்லாதீர்கள்...

    ப்ரியமுடன் வசந்த் கருத்து இது :

    அடடா..

    இந்த பதிவுன்னு இல்ல இதுக்கு முன்னாடி எழுதியிருக்கிற எல்லா பதிவுலயும் நியாயமான கோபம் இருக்கிறது. நீங்கள் கூறியிருக்கும் அத்தனையும் நிஜம்தான் ஏன்னா சொந்தமா பிளாக் ஸ்டார்ட் பண்ணி வித்யாசமான விஷயங்களை பதிவுகளாக கொடுக்கும் போது யாரும் வரவில்லையென்றால் அதற்க்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் உண்டாகும் வலி எனக்கு தெரியும். கிட்டத்தட்ட போட்டோஷாப் , பவர் பாயிண்ட் பயன்படுத்துவது மட்டுமில்லாம சில புதிய ஃபாண்ட்ஸ் இதெல்லாம் தேடிகண்டுபிடித்து ஒரு புதிய பதிவை சாதாரண தலைப்பில் வெளியிடும்போது வந்து பார்ப்பவர்களைவிட நடிகைகளின் பெயரை உபயோகித்து ஒன்னுமே இல்லாத விஷயத்தை சூடான இடுகைகளில் பார்த்ததும் அதுக்கப்பறம் அதுபோல முயற்சிகளை நான் காஇயாளுவதையே விட்டுவிட்டேன் பிறகென்ன உட்கார்ந்து ஒரு நாள் முழுவதும் வடிவமைத்த பதிவுகளுக்கு அங்கீகாரம் இல்லை ஒரு நிமிடத்தில் காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிடும் பதிவுகள் ஒரு ஐந்து நிமிடத்தில் சூடான இடுகைகளில் வந்துவிடுகிறது. காப்பி பேஸ்ட் தடை செய்வதற்க்கும், கவர்ச்சிகரமான தலைப்புகளையும் எத்ரித்து தமிழ்மணத்திற்க்கு வலுவான கோரிக்கைகள் வைக்க வேண்டும் .

    Katz கருத்து இது :

    உண்மையிலே புரட்சிகரமான அறிவுரை. நல்லவேளை நான் அந்த மாதிரி ஒரு வட்டத்திற்குள் மாட்டவில்லை.

    நிறைய சொல்லனும்ன்னு தோணுது. ஆனா.............

    Unknown கருத்து இது :

    உங்களது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு

    ராஜ் கருத்து இது :
    This comment has been removed by the author.
    ராஜ் கருத்து இது :

    மொக்கை பதிவு...
    நீங்க யார் பாஸ் பதிவர்களுக்கு அறிவுரை செய்ய...??????
    நீங்க தான் பிளாக்கர் கண்டுபிடித்த மாதிரி இப்படி பண்ணாத..அப்படி பண்ணாதேன்னு. சொல்ல...சும்மா இருங்க பாஸ்.. நீங்க எத்தனை கருத்துள்ள பதிவு எழுதி தள்ளி இருக்கேங்க..????
    உங்க பதிவு எல்லாம் பார்த்தேன் ..எல்லாமே மொக்கை...நீங்க அட்வைஸ் பண்ணுறீங்களா...??முடியல..
    யாருமே இல்லாத டீ கடையில யாருக்கு பாஸ் டீ ஆத்துறிங்க...??

    இதையெல்லாம் பார்க்கும் போது நீங்கள்தான் ஐடியா மணியா என்று நினைக்க தோன்றுகிறது


    நிஜமுகத்துக்கு வாங்க


    இந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வாங்க புரட்சிக்காரன்

    Unknown கருத்து இது :

    நான் ஒரு வருடம் பதிவு எழுதுகிறேன் எனக்கு பாலோயர் வெறும் 44 பேர்தான் என்னுடைய நிறைய பதிவு ஒரு ஓட்டு கூட வாங்கியது இல்லை நீ மொக்கையா..எழுதுவேன்னு சொன்னிங்கன்னா ஒரு பதிவை மட்டும் படிச்சு பாருங்க ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை போதும் 80% பதிவுக்கு தேவையான படத்தைக்கூட நானே வரைந்து கொள்கின்றேன் எனக்கு யோக்கியதை இருக்கு உம்மை கேள்வி கேட்க நீங்கள் ஒன்று இந்த பதிவுலகை சார்ந்தவராக இருக்க வேண்டும், அல்லது பதிவுலகை வெறுப்பவராக இருக்க வேண்டும், உங்க பதிவு அனைத்தும் யாராவது ஒரு பதிவரை சாடுவதாக இருக்கின்றது, நமக்கு என்ன முடியுமோ அதை தெரிந்த அளவு எழுதுகின்றார்கள் அதை சாடுவது நல்லதல்ல நண்பரே...ஒரு படைப்பாளியின் வலியை உணருங்கள்! புறங்கணிப்பும், மட்டமும் தட்டிய பல பேர் அறிஞர்களாக உருவாகியுள்ளார்கள்....நல்ல படைப்புகளை தாருங்கள் ரசிக்கின்றோம்

    K கருத்து இது :

    இதையெல்லாம் பார்க்கும் போது நீங்கள்தான் ஐடியா மணியா என்று நினைக்க தோன்றுகிறது


    நிஜமுகத்துக்கு வாங்க


    இந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வாங்க புரட்சிக்காரன் :///////

    ஹா ஹா ஹா ஹா மறுபடியும் முதல்ல இருந்தா???????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல!

    ஹி ஹி ஹி பதிவுலகத்தில் என்ன ஐடியாமணி மேனியா நிலவுதா?

    K கருத்து இது :

    அண்ணே, புரட்சி அண்ணே! நான் பதிவு போடுறேனோ இல்லையோ? உங்க புண்ணியத்துல ரொம்பவே ஃபேமஸா இருக்குறேன்! ஆஹா, இப்படி ஒரு அரிய வாய்ப்பு யாருக்கு வரும் அண்ணே?

    அப்புறம், இந்த வாரம் ஐயங்கார் பாஷைல எழுதியிருக்கீங்க! ரொம்ப நல்லா இருக்கு!

    ஆனா ஒண்ணு, மறந்து போய்க்கூட யாழ்ப்பாணத்து மொழிவழக்குல எழுதிடாதீங்க! அப்புறம், நீங்க உங்க பர்த்சர்டிஃபிகேட் காம்பிச்சாக் கூட யாரும் உங்களை நம்ப மாட்டாங்க!

    எல்லோரும் நான்னுதான் நெனைப்பாங்க! ஹா ஹா ஹா ஹா !!!!!

    அம்பலத்தார் கருத்து இது :

    பதிவுலகின் அறியப்படாத பக்கங்களை உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    Anonymous கருத்து இது :

    மொக்கை பதிவு...
    நீங்க யார் பாஸ் பதிவர்களுக்கு அறிவுரை செய்ய...??????
    நீங்க தான் பிளாக்கர் கண்டுபிடித்த மாதிரி இப்படி பண்ணாத..அப்படி பண்ணாதேன்னு. சொல்ல...சும்மா இருங்க பாஸ்.. நீங்க எத்தனை கருத்துள்ள பதிவு எழுதி தள்ளி இருக்கேங்க..????
    உங்க பதிவு எல்லாம் பார்த்தேன் ..எல்லாமே மொக்கை...நீங்க அட்வைஸ் பண்ணுறீங்களா...??முடியல..
    யாருமே இல்லாத டீ கடையில யாருக்கு பாஸ் டீ ஆத்துறிங்க...??


    வழி மொழிகிறேன்

    பாட்டு ரசிகன் கருத்து இது :

    See the Post Machi..


    பதிவுலகில் ஒரு புரட்சி...

    தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..

    http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html

    பாட்டு ரசிகன் கருத்து இது :

    ////
    Powder Star - Dr. ஐடியாமணி said...
    இதையெல்லாம் பார்க்கும் போது நீங்கள்தான் ஐடியா மணியா என்று நினைக்க தோன்றுகிறது


    நிஜமுகத்துக்கு வாங்க


    இந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வாங்க புரட்சிக்காரன் :///////

    ஹா ஹா ஹா ஹா மறுபடியும் முதல்ல இருந்தா???????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல!

    ஹி ஹி ஹி பதிவுலகத்தில் என்ன ஐடியாமணி மேனியா நிலவுதா?
    ////////////

    அது எப்படி 1-ந்தேதி போட்ட பதிவுக்கு 4-ந் தேதி கமாண்ட் பேர்டுறீங்க...

    பதிவை இப்பத்தான் படிச்சிங்களா.. அல்லது பயப்படாதவனுக்கு பதில் சொல்ல வந்தீங்களா...


    ஒரு சின்ன டவுட்டு...

    K கருத்து இது :

    அது எப்படி 1-ந்தேதி போட்ட பதிவுக்கு 4-ந் தேதி கமாண்ட் பேர்டுறீங்க...

    பதிவை இப்பத்தான் படிச்சிங்களா.. அல்லது பயப்படாதவனுக்கு பதில் சொல்ல வந்தீங்களா...


    ஒரு சின்ன டவுட்டு...////////

    ஹி ஹி ஹி ஹி யோவ் பாட்டு, என்ன டவுட்டய்யா உமக்கு?

    01 ம் தேதி போட்ட பதிவுக்கு முதல் மாசம் 31 ம் தேதியே கமெண்டு போட்டிருந்தால் அது ஆச்சரியம்! நான் மூன்று நாட்கள் கழிச்சு 04 ம் தேதி தானே போட்டிருக்கேன்! அதுல உமக்கு என்னையா டவுட்டு!

    அந்த மூணு நாளும் தீட்டா இருந்தேன்! ஓவர் ப்ளீடிங்! ஓகே வா?

    அதுபோக, எப்ப யாரு பதிவு போடுவாங்க ஓடிப்போய், கமெண்டு போடலாம்னு நான் என்ன கம்பியூட்டருக்கு முன்னாடி தவமா இருக்கிறேன்?

    12 மாசமா முழுகாம இருக்குற பொண்டாட்டியையே கவனிக்க நேரம் இல்லாமல் இருக்குறேன்! இதுல நீரு வேற!

    Philosophy Prabhakaran கருத்து இது :

    புரட்சிஜி... அன்னைக்கே கேட்கனும்ன்னு நினைச்சேன்... உங்க வலைப்பூவின் ஆரம்ப கட்ட பாலோயர்களில் நானும் ஒருவன்... புலவர் வீதி நண்பருக்கு முன்னரே நான் இணைந்திருக்கிறேன்... என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...???

    Philosophy Prabhakaran கருத்து இது :

    Follow Up...

    ///////
    01 ம் தேதி போட்ட பதிவுக்கு முதல் மாசம் 31 ம் தேதியே கமெண்டு போட்டிருந்தால் அது ஆச்சரியம்! நான் மூன்று நாட்கள் கழிச்சு 04 ம் தேதி தானே போட்டிருக்கேன்! அதுல உமக்கு என்னையா டவுட்டு!
    ///////////

    மிகப்பெரிய கண்டுபிடிப்பு...

    பாட்டு ரசிகன் கருத்து இது :

    //////
    அது எப்படி 1-ந்தேதி போட்ட பதிவுக்கு 4-ந் தேதி கமாண்ட் பேர்டுறீங்க...

    பதிவை இப்பத்தான் படிச்சிங்களா.. அல்லது பயப்படாதவனுக்கு பதில் சொல்ல வந்தீங்களா...


    ஒரு சின்ன டவுட்டு...////////


    ஹி ஹி ஹி ஹி யோவ் பாட்டு, என்ன டவுட்டய்யா உமக்கு?

    01 ம் தேதி போட்ட பதிவுக்கு முதல் மாசம் 31 ம் தேதியே கமெண்டு போட்டிருந்தால் அது ஆச்சரியம்! நான் மூன்று நாட்கள் கழிச்சு 04 ம் தேதி தானே போட்டிருக்கேன்! அதுல உமக்கு என்னையா டவுட்டு!

    அந்த மூணு நாளும் தீட்டா இருந்தேன்! ஓவர் ப்ளீடிங்! ஓகே வா?

    அதுபோக, எப்ப யாரு பதிவு போடுவாங்க ஓடிப்போய், கமெண்டு போடலாம்னு நான் என்ன கம்பியூட்டருக்கு முன்னாடி தவமா இருக்கிறேன்?

    12 மாசமா முழுகாம இருக்குற பொண்டாட்டியையே கவனிக்க நேரம் இல்லாமல் இருக்குறேன்! இதுல நீரு வேற!
    ////////////


    இவ்வளவு தெளிவாக இருக்கும் தாங்கள் இந்த பதிவை படிக்க வந்து போனதற்கான ஆதாரமாக தமிழ்மணத்தில் ஓட்டு போடாமல் போயிருக்கலாம்...

    இதை கூட நாங்கள் மறுக்கலாம் நான் ஓட்டுபோடவேயில்லை என்று..

    என்னுடைய பெயரில் யாரோ ஓட்டுப்போ்டிருப்பார்கள் என்று கூட சொல்லுவீர்கள்...

    முதலில் பொய் சொல்லுவதை நிறுத்துங்கள் நண்பரே..

    தாங்கள் சொல்லும் பொய்தான் தங்கள் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது.

    புரட்சிக்காரன் சாடியுள்ள பதிவர்கள் மீது தாங்கள் உண்மையாக அன்பு காட்டுபவர் என்றால் எதற்காக அவர்களை சாடி போடப்படும் இந்த அனைத்து பதிவுகளுக்கும் தங்களுடைய வாக்கை பதிவு செய்கிறீர்கள்.

    கருத்திடாமல் வாக்கைமட்டும் போட்டுவிட்டால் யாருக்கும் தெரியாது என்றா..?

    மேற்கண்ட மூன்று பதிவர்களை கேவலப்படுத்தும் பதிவுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் போது தாங்களும் இந்த மூவரை சாடுகிறீர்கள் என்று தானே அர்த்தம்...

    K கருத்து இது :

    யோவ்ன் பாட்டு, என்னையா உம்மோட பெரிய இதுவாப் போச்சு!

    யோவ், நீர் தானே மொதல்ல டவுட்டு கேட்டீரு! ஆமா என்ன கேட்டீரு? ஒண்ணாம் தேதி போட்ட பதிவுக்கு எதுக்கு நாலாம் தேதி கமெண்டு போடுறேன்னுதானே கேட்டே?

    அந்த எழவுக்குதாம்ப்ல மேல பதில் சொல்லியிருக்கேன்!

    ஒண்ணாம் தேதி போட்ட பதிவுக்கு ஒண்ணாம் தேதியே ஓட்டுப் போட்டுட்டு, எதுக்கு கமெண்டு போடாம எஸ்கேப் ஆனே? அப்டீன்னு நீரு கேட்டிருந்தா, நான் இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியுப்பன்ல!

    கேக்குறதையும் கேட்டுப்புட்டு பயபுள்ளைக்கு வர்ர டவுட்ட பாரு?

    ஆமா, நான் புரட்சிக்காரனுக்கு ஓட்டுப் போட்டா உமக்கு ஏம்ல எரியுது? அவரு என்ன உன்னைய தாக்கியா பதிவு போட்டிருக்காரு?

    அதுகாண்டி இல்லாம, எங்கூட சேர்ந்து இன்னும் ஒன்பது பேரு ஓட்டுப் போட்டிருக்காங்க! அப்போ அவங்களையும் போயி கேள்வி கேட்பீரா?

    என்னலே ஒன்கூட ரொம்ப ரோதனையாப் போச்சு!

    Suresh Subramanian கருத்து இது :

    பயனுள்ளதாக இருந்தது.

    www.rishvan.com

    சீனுவாசன்.கு கருத்து இது :

    புரட்சிக்காரா ப்ளீஸ்...ப்ளீஸ்
    நம்ம சைட்டுக்கு வா!கருத்து சொல்லு!
    நல்லா பழகுவோம்!எலே எல்லாரும் எட்ட போங்களே!அண்ணே நீங்க வாங்கண்ணே!...

    சீனுவாசன்.கு கருத்து இது :

    அண்ணே!ஒரு டவுட்டு!
    நீங்க பல்லு விளக்காம டீ குடிக்கிறதா பேச்சு அடிபடுதே!நெசமாண்ணே?
    ஏன் கேக்குறேன்னா...நீங்க காப்பி பேஸ்டுக்கு எதிரானவருன்னாங்க!
    அப்பிடியாண்ணே?...

    சீனுவாசன்.கு கருத்து இது :

    அண்ணே!கோபப்பட்டு கமெண்டல்லாம் அழிச்சிடாதண்ணே!நீங்க வந்து மொய் வைக்காட்டியும் பரவால்ல!என்ன நான் சொல்றது?...

Powered by Blogger