தமிழ்மணம், ஐடியா மணியின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? அல்லது காப்பி-பேஸ்ட் பதிவுகளின் குப்பையாகத்தான் இருக்குமா?

இன்று நண்பர் ஐடியா மணி அவர்கள் ஒரு அருமையான பதிவு போட்டிருந்தார். பெரும்பாலான பதிவர்களின் மனக்குமுறலை அது பிரதிபலித்திருந்தது. முதலில் அவரின் துணிச்சலுக்கு ஒரு ஓ போடுகிறேன். தமிழ்மணம் டாப்-20 என்பது பெரிய ஆஸ்கார் விருதெல்லாம் கிடையாது. அதில் இடம்பிடிக்க இப்படி எழுத்து விபச்சாரம் செய்யவேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

நேர்மையாக, சொந்தக்கருத்துக்களை எழுதும் பதிவர்கள்தான் டாப்-20 இடம்பிடிப்பார்கள், காப்பி-பேஸ்ட் பதிவர்களுக்கு இடமில்லை என்று தமிழ்மணம் ஒரு அறிவிப்பை விட்டாலே போதும். இன்று டாப்-20 ஐ அடைத்துக்கொண்டிருக்கும் நிறைய பதிவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஏனென்றால் சொந்த சரக்கு எழுதும் அளவிற்கு அவர்கள் மூளை இல்லாத முண்டங்கள். நோகாமல் நொங்கு திங்க பார்ப்பவர்கள்.

தமிழ்மணத்தின் இந்த தவறான தரவரிசையால்தான் சொந்தமாக எழுதும் நிறைய பதிவர்கள் தமிழ்மணத்திலிருந்து விலகிக்கொண்டே போகிறார்கள். தமிழ் மணம் தர வரிசை பட்டியலை நிறுத்தவேண்டும். அல்லது காப்பி-பேஸ்ட் பதிவர்களை தமிழ் மணத்திலிருந்து நீக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை செய்தால்தான் தமிழ்மணத்திற்கு பதிவர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். இல்லாவிட்டால் காப்பி, பேஸ்ட், ஆபாச, பதிவுகளின் குப்பையாக தமிழ்மணம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பூனைக்கு மணியை ஐடியா மணி கட்டியிருக்கிறார். பார்க்கலாம், இனி, தமிழ்மணத்தின் நடவடிக்கையை....

11 நண்பர்கள்

தமிழ்மணம், ஐடியா மணியின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? அல்லது காப்பி-பேஸ்ட் பதிவுகளின் குப்பையாகத்தான் இருக்குமா?

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

 1. Anonymous கருத்து இது :

  சொந்த சரக்கு இல்லாதவர்களால் நெடுநாளைக்கு வண்டி ஓட்ட முடியாது... இது அவரவர்களுக்கே தெரிந்த உண்மைதான்..

  கவலை வேண்டாம் நண்பரே

  This comment has been removed by the author.
  புரட்சிக்காரன் கருத்து இது :

  நன்றி

  Yoga.s.FR கருத்து இது :

  எனக்குத் தெரிந்து அண்மையில் கூட ஒரு பதிவர்,சொந்த மூளையில் எழுதுபவர்,தமிழ் மணம் வேண்டாம்(பிச்சை வேண்டாம்,நாயைப் பிடி!)என்று ஓடியே விட்டார்!காரணம்,அவருக்கும்,தமிழ்மணத்துக்கும் தெரியும்!சீனா ஐயா உங்கள் பதிவை,பவுடர் மணியின் பதிவைப் படிக்க வேண்டுமென இறைவனை வேண்டுவோம்!

  Yoga.s.FR கருத்து இது :

  இன்னுமொரு முரண் கருத்து:காப்பி பேஸ்ட் பதிவு இல்லாவிடில் "ஈ" ஓட்ட வேண்டியிருக்குமோ?

  Yoga.s.FR கருத்து இது :

  இன்னுமொரு முரண் கருத்து:(2)அடுத்தவர் பதிவை திருடி,சில சொற்களை மாற்றிப் பதிவிடுவதை விடவும்,ஆனந்த விகடனை காப்பி பேஸ்ட் பண்ணிப் பதிவிட்டால் "எகிறுமோ?"

  Yoga.s.FR கருத்து இது :

  ஷீ-நிசி கருத்து இது :

  சொந்த சரக்கு இல்லாதவர்களால் நெடுநாளைக்கு வண்டி ஓட்ட முடியாது.இது அவரவர்களுக்கே தெரிந்த உண்மைதான்.////சீச்சீ,எத்தனை பேர் வாடகைக்கு லாரி எடுத்து,யார்,யாருடையதோ சரக்கெல்லாம் ஏற்றி,இறக்கி என்னமா சம்பாதிக்கிறாங்க,நீங்க வேற?????

  சின்னப்பயல் கருத்து இது :

  சமூகமே சொந்த சரக்கை விரும்புவதில்லை, போலச்செய்வதிலும்,உருவிப்போடுவதிலும் சுகங்கண்டுவிட்டவர்களை திருத்த
  யாராவது பொறந்துதான் வரணும் !

  Powder Star - Dr. ஐடியாமணி கருத்து இது :

  நண்பரே உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும் நன்றி!

  Raj கருத்து இது :

  தமிழ்மணத்தில் வரும் 99% பதிவுகள் மிக மிக மொக்கையாக உள்ளது..உங்கள் பதிவுகளையும் சேர்த்து தான்.....
  இப்பொழுது எல்லாம் தமிழ்மணம் திறக்கவே பயமா இருக்கு...தாங்க முடியாத மொக்கை

  விக்கியுலகம் கருத்து இது :

  மாப்ள...உண்மைல தமிழ்மணம் எனும் குறுகிய வட்டத்துக்குள்ள இருக்க நெனச்சிட்டா பல பதிவுகளை இட முடியாது....வரலாற்று உண்மை பதிவுகளுக்கு வரத்து கம்மி....இருந்தாலும் அதை விடா முயற்சியுடன் பகிர்கிறேன்...ஏனெனில், இதன் மூலம் பலர் வியட்நாமை பற்றி தெரிந்து கொள்ளவே....அதை விடுத்து ரேசில் ஓட நினைத்து இருந்தால் நானும் என் சுயத்தை இழந்தவனாவேன்...பல மொக்கைகளுக்கு இடையில் சில நல்ல பதிவுகளையும் இடுகிறேன் என்ற மன நிம்மதி போதும்... என்ன நாஞ்சொல்றது...!

Powered by Blogger