தமிழ்மணம் டாப்-20 பதிவர்கள் ஒரு பார்வை....


கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்மணம் தரவரிசை-20 புதிய மாற்றங்களுடன் வருகிறது.இப்போது  தகுதியான பதிவர்கள் இடம்பிடிக்கிறார்கள். இந்த மாற்றம் வரவேற்க வேண்டியதே....முந்தைய வாரம் இதைப்ப்ற்றி ஒரு பதிவிட்டிருந்தபோது குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் பதிவர் கவிதைவீதி சௌந்தர் சார் அவர்கள். அவரின் வேண்டுகோளை ஏற்று இப்போது இப்போது இடம் பிடித்திருக்கும் பதிவர்களில் முதல் பத்து பதிவர்களை பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம்.


பதிவின் பெயர் : அட..,என்னங்க நீங்க?
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
இடம் : 1
 
இவர் பதிவுலகிற்கு வந்து நீண்ட நாட்களானாலும், இந்த ஒரு மாதமாகத்தான் நிறைய எழுதுகிறார். இவர் ஒரு பல்சுவை பதிவர். காமெடியிலும் கலக்ககூடியவர். இவருடைய பதிவை  ஒருமுறை படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் எழுத்து நடை இவருக்கு. கடந்த வாரம் பிடித்திருந்த முதல் இடத்தை இந்த வாரமும் தக்க வைத்துள்ளார். இனிமேலும் அப்படியே தக்கவைத்துக்கொள்வார் என்றே நினைக்கிறேன். 


பதிவின் பெயர் : நாஞ்சில் மனோ
நாஞ்சில் மனோ
இடம் : 2
 
இவரும் ஒரு பல்சுவை பதிவர்தான். பின்னூட்டங்களில் கத்தி, அருவாள் என்று புதிய நடைமுறையை கொண்டுவந்தவர். இப்படி பிரயோஜனமில்லாத பின்னூட்டங்கள் போடாமல் பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டங்களை போடவேண்டும் என்பது என் அவா...


பதிவின் பெயர் : மாய உலகம்
இடம் : 3

இவரை இன்னும் நான் படித்ததில்லை. படித்தபிறகு எழுதுகிறேன்.


பதிவின் பெயர் : நான் பேச நினைப்பதெல்லாம்
சென்னை பித்தன்
இடம் : 4
 
இவர் ஒரு வித்தியாசமான பதிவர். பெரும்பாலும் இளைஞர்களே பதிவுலகில் கோலோச்சும் நிலையில் இவர் 50+. ஆனாலும், இவரின் எழுத்துக்களில் இளமை ததும்பும்.யூத்களுக்கே சவால் விடும் இவரின் எழுத்து நடை. கதை, கவிதை என்று அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதிப்பவர் அய்யா...


பதிவின் பெயர் : விக்கி நிசமா பொய்யா
விக்கி உலகம்
இடம் : 4

முன்னாள் ராணுவ வீரரான விக்கி எல்லையில் இருந்து எதிரிகளை சுட்டாலும், இதுவரை பதிவுகளை சுட்டதில்லை இவர். பதிவுலகில் தோழமையை வளர்க்கவிரும்பும் பதிவர்


பதிவின் பெயர் : anbu ulagam
M.R
இடம் : 5
 
இதுவரை இவரையும் படித்ததில்லை. இனிமேல் தான் இவரின் பதிவை படிக்கவேண்டும்.

பதிவின் பெயர் : அரசையூரான்
ரஹீம் கஸாலி
இடம் : 6
 
இவரும் ஒரு பல்சுவை பதிவர்தான் என்றாலும், இவருடைய ஸ்பெஷலே அரசியல் பதிவுகள்தான். இடையிடையே மொக்கையும் போடுவார்.பதிவுலக அரசியலில் சிக்காத இவர், பரபரப்பான தலைப்புகள் மூலம் ஈர்ப்பவர்.


பதிவின் பெயர் : தமிழ்வாசி
இடம் : 7
 
பதிவுலகில் இவர் ஒரு வித்தியாசமான பதிவர். பிரபலங்களை கேள்விகேட்டு பதில் வாங்குவதில் வல்லவர். ஆக்கப்பூர்வமான பதிவுகள் இவருடையது.


பதிவின் பெயர் : http://cablesankar.blogspot.com
Cable Sankar
இடம் : 8
 
சினிமாதான் இவரின் இலக்கு என்றாலும் சாப்பாட்டுக்கடை மூலமும் எல்லோரையும் கவர்ந்தவர். இவர் நிறைய பதிவர்களின் துரோணாச்சாரியார். உடான்ஸ் மூலம் பதிவர்களை அடையாளம் காட்டிவருகிறார். விரைவில் தமிழ்மணம் போல உடான்ஸும் வளரும் என்பது என் எதிர்பார்ப்பு.


பதிவின் பெயர் : counsel for any
shanmugavel
இடம் : 8
 
பதிவுலகில் இவருக்கென்று தனி இடம் உண்டு. மொக்கைகளே அடைத்துகொண்டிருக்கும் பதிவுலகில் இவரின் பதிவு வித்தியாசமானது. பலருக்கும் உபயோகமான பதிவுகள் இவருடையது.

பதிவின் பெயர் : சூறாவளி
சூறாவளி
இடம் : 9

இவரை இன்னும் நான் படித்ததில்லை. படித்தபிறகு எழுதுகிறேன்.பதிவின் பெயர் : கடையநல்லூர்.org
இடம் : 10
 
இவரை இன்னும் நான் படித்ததில்லை. படித்தபிறகு எழுதுகிறேன்.

இது என் பார்வைதான். இதிலுள்ள கருத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நன்றி..


23 நண்பர்கள்

தமிழ்மணம் டாப்-20 பதிவர்கள் ஒரு பார்வை....

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

 1. நாங்களும் இந்த வரிசையில் இருக்கிறோம். எங்களது பதிவையும் படித்து விட்டு சுவையா அல்லது மொக்கையா என கூறவும். தவறா இருந்தா சுட்டிக் காட்டலாம் தவறில்லை, ஏனெனில் நான் தங்களது பதிவை வழக்கமாக படித்து வருபவன், உங்களது சமூகத்தின் மீதான கோபம் எனக்கு பிடிக்கும்

  This comment has been removed by the author.
  This comment has been removed by the author.
  suryajeeva கருத்து இது :

  good review

  Anonymous கருத்து இது :

  நெறைய வெட்டி ஒட்டறகும்பல் துண்டக்காணோம் துணிய காணோமென காணாம போச்சு. நல்ல வேலை. இன்னும் இந்த வார இருபதுல வெட்டி ஒட்டறவனுங்களையும் கண்டு புடிச்சி தமிழ்மணத்துக்கு கொடுத்துட்டா தமிழ்மனம் இன்னும் நல்ல பிளாக்கரை உற்சாக படுதலாம்.

  வைரை சதிஷ் கருத்து இது :

  தமிழ்மணம் இன்னும் வளரட்டும்

  shanmugavel கருத்து இது :

  தங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி.சென்னைப்பித்தன் அய்யா போன்ற படைப்புகளை சார்ந்து இருப்பவர்கள் பட்டியலில் இருப்பது நல்ல அறிகுறி.மற்ற நண்பர்களும் நான் நேசிப்பவர்களே!

  Powder Star - Dr. ஐடியாமணி கருத்து இது :

  நடுநிலைமையுடன் கூடிய தங்களின் பார்வைக்கு மிக்க நன்றி நண்பரே! பதிவுலகம் பற்றி ஈடுபாடு உங்களுக்கு இருப்பதால், இன்னும் பல, பதிவுலகோடு தொடர்புடைய பதிவுகளை நீங்கள் எழுதலாம் என்பது எனது எதிர்பார்ப்பு!

  Anonymous கருத்து இது :

  நடுநிலமையான பார்வை பாஸ் )

  ஆமினா கருத்து இது :

  நடுநிலை

  கோகுல் கருத்து இது :

  தெளிந்த பார்வையோடு அலசியிருக்கிரீர்கள்!
  எனக்கும் 20-வது இடம் கிடைத்திருக்கிறது.
  மகிழ்ச்சி.எனது தளத்தை வந்து கண்டு கருத்து கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

  நிரூபன் கருத்து இது :

  தெளிந்த பார்வை, உள்ளதைச் சொல்லும் திறன், நடுவு நிலமையுடன் கூடிய அலசல் பாஸ்.

  Anonymous கருத்து இது :

  டோண்டுல்லாம் ஒரு காலத்துல பிரபலமாக இருந்தார். அவரின் 'சாதிக்கடை' மூடப்பட்டு விட்டதால் வியாபாரம் டல்லாக இருக்கிறது.

  Anonymous கருத்து இது :

  கொடுமைடா சாமி. பத்து பேரு பேரை லிச்டு பண்ணி போட்டா அதுக்கு வேற நேர்மையான நடுநிலையான பதிவென பின்னூட்டம். டாய் என்னங்கடா நெனைச்சுக்கிட்டிருக்கீங்க. மொக்கை கும்மின்னாகூட ஒரு லிமிட்டு வானாமா?

  கேபிள்சங்கர் தமிழ்மனத்துகே யுடான்சுல நெருப்புவெய்ப்பான்யா. தமிழ்மனத்துலயே யுடான்சுக்கு ஓசி வெலம்பரம் கொடுக்கான் பாரு. சூப்பர். அவன் தன்னை சுத்தி ஒரு பில்டப்பு பிளான்பண்னி எழுப்பிட்டே வர்றான் பாரு. ஜாக்கி சேகர் மட்டும் சும்மா இருப்பான்னு நெனைக்கல.

  சென்னை பித்தன் கருத்து இது :

  என் பதிவு பற்றி உங்கள் கருத்துக்கு நன்றி.எனது பொறுப்பு அதிகமாகி விட்டதாக உணர்கிறேன்.அனைவருக்கும் வாழ்த்துகள் .

  சென்னை பித்தன் கருத்து இது :

  50++;அதாவது 60+!!

  Yoga.s.FR கருத்து இது :

  இது ஒரு நல்ல விடயம்!நான் பதிவரல்ல.பலரின் எழுத்துகளுக்கு ரசிகன் மட்டுமே!நான் கூட50+ தான்!தமிழ்மணத்தின் கடந்த கால "அரசியலால்" எனக்குத் தெரிந்து பல பதிவர்கள்(காப்பி பேஸ்ட் இல்லாத)பிச்சை வேண்டாம் என்று ஓடியது நான் அறிந்தது.பார்ப்போம்,மீளவும் வருகிறார்களா என்று!

  ! சிவகுமார் ! கருத்து இது :

  @ சென்னை பித்தன்

  சார் நீங்க எப்போதும் B+. தொடரட்டும் உங்கள் பயணம்!

  சசிகுமார் கருத்து இது :

  தெளிந்த பார்வை

  K.s.s.Rajh கருத்து இது :

  நல்ல பார்வை பாஸ்
  உண்மையில் தமிழ்மணம் டாம் 20 வருவது என்பது இலகுவானகாரியம் இல்லை
  இதற்கு முந்திய வாரம் அதற்கு முதல் நானும் டாப் 10க்குள் வந்தேன் அப்போதுதான் எனக்கே தெரிந்தது அட நம்ம பதிவையும் பலர் படிக்கிறாங்களா என்று உண்மையில் இது ஆரோக்கியமான விடயமே.

  தமிழ்வாசி - Prakash கருத்து இது :

  உங்களின் இந்த பதிவு பலரையும் தமிழ்மணம் டாப் 20 யில் இடம்பிடிக்க தூண்டி விடும் என்பதில் ஐயமில்லை...

  விக்கியுலகம் கருத்து இது :

  பகிர்வுக்கு நன்றி மாப்ள!

  சிவகுமாரன் கருத்து இது :

  தமிழ் மணமா ?

Powered by Blogger