தமிழ்மணம், ஐடியா மணியின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? அல்லது காப்பி-பேஸ்ட் பதிவுகளின் குப்பையாகத்தான் இருக்குமா?

இன்று நண்பர் ஐடியா மணி அவர்கள் ஒரு அருமையான பதிவு போட்டிருந்தார். பெரும்பாலான பதிவர்களின் மனக்குமுறலை அது பிரதிபலித்திருந்தது. முதலில் அவரின் துணிச்சலுக்கு ஒரு ஓ போடுகிறேன். தமிழ்மணம் டாப்-20 என்பது பெரிய ஆஸ்கார் விருதெல்லாம் கிடையாது. அதில் இடம்பிடிக்க இப்படி எழுத்து விபச்சாரம் செய்யவேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

நேர்மையாக, சொந்தக்கருத்துக்களை எழுதும் பதிவர்கள்தான் டாப்-20 இடம்பிடிப்பார்கள், காப்பி-பேஸ்ட் பதிவர்களுக்கு இடமில்லை என்று தமிழ்மணம் ஒரு அறிவிப்பை விட்டாலே போதும். இன்று டாப்-20 ஐ அடைத்துக்கொண்டிருக்கும் நிறைய பதிவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஏனென்றால் சொந்த சரக்கு எழுதும் அளவிற்கு அவர்கள் மூளை இல்லாத முண்டங்கள். நோகாமல் நொங்கு திங்க பார்ப்பவர்கள்.

தமிழ்மணத்தின் இந்த தவறான தரவரிசையால்தான் சொந்தமாக எழுதும் நிறைய பதிவர்கள் தமிழ்மணத்திலிருந்து விலகிக்கொண்டே போகிறார்கள். தமிழ் மணம் தர வரிசை பட்டியலை நிறுத்தவேண்டும். அல்லது காப்பி-பேஸ்ட் பதிவர்களை தமிழ் மணத்திலிருந்து நீக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை செய்தால்தான் தமிழ்மணத்திற்கு பதிவர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். இல்லாவிட்டால் காப்பி, பேஸ்ட், ஆபாச, பதிவுகளின் குப்பையாக தமிழ்மணம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பூனைக்கு மணியை ஐடியா மணி கட்டியிருக்கிறார். பார்க்கலாம், இனி, தமிழ்மணத்தின் நடவடிக்கையை....





பதிவர் விருதுகள்- 2011


பதிவர் விருதுகள்- 2011

இப்போது எல்லோரும் விருது வழங்குவது டிரெண்ட் டாக இருக்கிறது. நானும் என் பங்கிற்கு சில விருதுகள் வழங்கப்போகிறேன்.

சிறந்த பல்சுவை பதிவர் விருது

விக்கியுலகம்

சிறந்த தொடர் எழுதும் பதிவர் விருது
செங்கோவி

சிறந்த நக்கல் நையாண்டி பதிவர் விருது

பன்னிக்குட்டி ராமச்சாமி

சிறந்த தமிழ்மன மகுடம் பெருவோர் விருது
நிரூபன்

சிறந்த விகடன் காப்பி-பேஸ்ட் செய்பவர் விருது
சி.பி.செந்தில்குமார்

சிறந்த ஒன்று விடாமல் காப்பி-பேஸ்ட் செய்பவர் விருது

வேடந்தாங்கல் கருன்குமார்


சிறந்த அடிக்கடி பிளாக் தொலைப்பவர் விருது
நல்லனேரம் சதீஸ் குமார்

சிறந்த புதுமுக விருது

ஐடியா மணி

சிறந்த தனிமனித தாக்குதல் விருது

சாம் மார்த்தாண்டன்

சிறந்த கானமல் போன பதிவர் விருது
மதி.சுதா

விருது பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் அனைவரும் தமது பணியில் மேலும் வளர புரட்சிக்காரனின் ஆசிகள்.





அதிகமான ஹிட்ஸ்கள் வாங்கி தமிழ்மணத்தில் இடம் பிடிக்க......



ஒரு நாளுக்கு சுமார் 100 பதிவுகளுக்கு மேல் செல்லுங்கள். ஆனால், எல்லாவற்றையுமே படிக்க வேண்டுமென்பதில்லை. எல்லாப்பதிவுக்குமே வந்தேன், வாக்களித்தேன், சென்றேன் என்று பின்னூட்டமிடுங்கள். அல்லது, நறுக்கென்று நாலு ஓட்டுப்போட்டாச்சு என்று பின்னூட்டம் போடுங்கள். மொய்யிக்கு மொய் சிஸ்டம் மூலம் நீங்கள் 100 பேருக்கு கமெண்ட் போட்டிருந்தால் அதிலிருந்து 50 பேராவது வந்து உங்களின் பதிவுக்கு கமெண்ட் போடுவார்கள். குறிப்பாக தமிழ்மணத்தில் நாந்தான் முதல் ஓட்டு, த.ம. 2, த.ம.3 என்று போடுங்கள். அவர்களும் தமிழ்மணத்தில் ஓட்டு போடுவார்கள்.

அப்படியும் ஆள் வராவிட்டால், என்ன தலைவா, நம்ம கடைப்பக்கம் ஆளே கானாம், தயவுசெய்து வாங்கன்னு வெட்கத்தை விட்டு கெஞ்சுங்கள். பிறகு பாருங்கள் உங்க ஹிட்ஸை....

அடுத்ததாக....தினமும் 10 பதிவுக்காவது ஆக சேரும் கொள்கையை வைத்திருங்கள். யார் புதிதாக வலைப்பதிவு துவங்கினாலும் அவர்கள் follower ஆக அவர்கள் தலத்தில் சேரும் முன்பே நீங்கள் அவர்களிடம் follower ஆக சேர்ந்து விடுங்கள். நீங்கள் 1000 பதிவிலாவது follower ஆக சேர்ந்திருந்தால் அதில் பாதியாவது, அதாவது ஒரு 500-பேராவது உங்கள் தளத்தில் follower ஆக இணைவார்கள்.

அடுத்ததாக, ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 3 பதிவாவது போடுங்கள். பதிவுஎழுத மேட்டரே இல்லையா? கவலையை விடுங்கள். அதற்குத்தான் நக்கீரன், ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன், குமுதம், ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகள் இருக்கே. அதிலிருக்கும் பதிவுகளை உடனே காப்பி-பேஸ்ட் செய்து உங்கள் பேரில் வெளியிட்டுவிடுங்கள், அல்லது பதிவிற்கு கீழே சின்னதாக அந்த புத்தகத்தின் பேரை போட்டு நன்றி என்று யார் கண்ணிற்கும் தெரியாதவாறு போட்டுவிடவும். அப்ப்டி காப்பி பேஸ்ட் பதிவர்கள் நிறைய இருப்பதால் நீங்கள் முந்துங்கள்...முந்துபவர்களின் பதிவே ஹிட்டடிக்கும்.

அடுத்து facebook, twitter- இல் வெளிவரும் மொக்கைகளை காப்பி செய்து உடனே உங்கள் பேரில் வெளியிடாதீர்கள்.. சில நாள் கழித்து வெளியிடுங்கள்.
அப்போதுதான் அதை உண்மையாகவே எழுதியவர் மறந்து போயிருப்பார்.


யாராவது உங்களை பதிவு திருடர்கள் என்று திட்டினால் கவலைவேண்டாம். இப்பொது பதிவு திருடர்கள்தான் தமிழ்மணம் டாப்- 20 இல் அதிகம் இடம்பிடிக்கிறார்கள். குறிப்பாக வெட்கம், மானம், சூடு, சுரனையை மூட்டைகட்டி வைத்திடுங்கள். பிறகு பாருங்கள் சில நாட்களிலேயே நீங்களும் பிரபல பதிவர்தான்.





Powered by Blogger