கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......
இன்னைக்கு நம்ம பாக்கப்போறதும் ஒரு வாத்தியாரை பத்தித்தானுங்கண்ணா....
இந்த கவிதை தெரு வாத்தியாரும், நம்ம சரணாலய வாத்தியாரும் நெருங்கிய தோஸ்துங்க....ரெண்டு பேரும் ஒன்னாத்தான் வேலை பார்க்கறாங்க....
நம்ம அடிக்கடி இவங்களை பத்தி எழுதுறதால...இப்ப சரணாலய வாத்தி கொஞ்சம் திருந்திட்ட மாதிரி இருக்கு...திருந்தட்டும் நமக்கு அதுதானே வேணும்.
சரணாலய பதிவரு இப்பலாம் காப்பிகூட குடிக்கறது இல்லையாம்.
பதிவை கூட ரத்திண சுருக்கமா எழுதுறார். கவிதைங்கிற பேருல எதையாவது ரெண்டு அடி இல்லாட்டி நாலு வரில எழுதி திருக்குறளுக்கும், நாலடியாருக்கும் செம போட்டியை கொடுக்கறாரு அவரு....
அவருக்கு போட்டியா இந்த கவிதைத்தெரு வாத்தியும் கவிதைங்கற பேருல எழுதுவாரு பாருங்க...ஆத்தாடி நம்ம வாலி, வைரமுத்து எல்லாம் பிசசை வாங்கனும் அவருகிட்ட...அப்படி ஒரு சமுதாய அக்கறையுள்ள கவிதைகள்.
கவிதைதெரு வாத்தி பதிவுலக ஷங்கர் மாதிரி.... ஷங்கருன்னு சொன்னதும் பெரிய அளவுல அவரை நெனைக்காதீங்கண்ணா....
ஷங்கரும் இவரும் சரக்கே இல்லாம அவங்க அவங்க துறையில குப்பை கொட்டுறவங்க...
ஷங்கருக்கு பிரமாண்டம்ன்னா...கவிதைதெருவுக்கு ஜிகினா வேலைப்பாடுகள்.
நான் இன்று கடைக்குப்போய் மிட்டாய் வாங்கினேன் என்பதைக்கூட
நான்
இன்று
கடைக்குப்போய்
மிட்டாய்
வாங்கினேன்
என்று ஒன்றின்கீழ் ஒன்றாய் வார்த்தைகளை அடுக்கி, அந்த மொக்கைக்கு ஜிகினா வேலைப்பாடுகளெல்லாம் கொடுத்து, கலர் கலரா வண்ணம் பூசி கவிதைன்னு சந்தைப்படுத்திவிடுவாரு. அவ்வளவு திறமை நம்ம கவிதைதெரு வாத்திக்கு..
ஒரு கவிதை எப்படி இருக்கக்கூடாதுங்குறதுக்கு அண்ணனின் உரைநடையே தப்பு தப்பு கவிதையே சாட்சி. கவிதை எழுதற பதிவர்கள் எல்லாரும் ஒரு முறை நம்ம வாத்தியின் கவிதையை படிங்கப்பா...அப்பத்தான் எப்படி கவிதை எழுதக்கூடாதுன்னு உங்களுக்கு புரியும். இதுகூட தொலையட்டும்.
அன்றைக்கு ஒரு தலைப்பு வச்சிருந்தார் பாருங்க.....ஆசிரியர் ஜாதியே வெட்கி தலைகுனியனும் அதுக்காக....அப்படி என்ன தலைப்புன்னு கேட்கறீங்களா...இதுதான் அந்த தலைப்பு....
ஆத்தா.. நான் அதுல பாஸாயிட்டேன்.
இப்படி ஒரு மட்டமான தலைப்பை ஒரு ஆசிரியர் போட்டது வெட்கக்கேடு. என்னதான் சாக்கு போக்கு சொன்னாலும் 'அது' எனும் வார்த்தைக்கு அசிங்கமான அர்த்தம் உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். ஹிட்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக அந்த 'அது' வார்த்தையை பயன்படுத்தி அதுவும் தாயே (ஆத்தா) நான் அதுல பாஸ் ஆயிட்டேன் என்று எழுதுவது ஒரு ஆசிரியருக்கு அழகா? ஒவ்வொரு முறையும் யாரேனும் தவறை சுட்டிக்காட்டுவதும், சில சமயம் அதை திருத்துவதும், பலமுறை தகிடுதத்தம் செய்யும் அந்த வாத்தியார் இன்னும் அந்த வார்த்தையை திருத்தாமல் இருக்கிறாரே....இன்னும் யாரும் அதை சுட்டிக்காட்டவில்லை போலும்.
இதை எங்க பக்கம் இருக்கும் ஆத்தாவிடம் சொல்லியிருந்தால் அதுல அதை நனைச்சு...அது பிஞ்சுபோற அளவுக்கு அதாலயேஅடிச்சுருப்பாங்க....
அதுல என்னங்க தப்பு இருக்கு? அதுங்கறது கெட்டவார்த்தையான்னு கேட்கறீங்களா?
ஆமாங்க..ஆமாம்...அதுங்கறது இன்றைய பதிவுலகத்தில் அது கெட்டவார்த்தைதான். வாத்தியாரும் ஹிட்சுக்காக கெட்டவார்த்தை அடிப்படையில்தான் அதை பயன்படுத்தியிருக்கார். சாதாரனமாக நான் பாசாயிட்டேன்னு தலைப்பு வச்சா கூட்டம் வராதுன்னு தெரிஞ்சே அதை பயன்படுத்தியிருக்கார்.
இந்த அது இது போன்ற வார்த்தைகளை ரெண்டு வாத்திகளும்தான் அதிகம் பயன்படுத்தறாங்க.....
என்ன பன்றது இவங்க அதுக்குக்கூட லாயக்கில்லை....எதுக்கா? அதுக்குத்தாங்க....
பெற்றவளிடம் போய் "நான் அதுல பாஸாயிட்டேன்" என்று ஒரு ஆண், அதிலும் படித்த ஆசிரியர் சொல்வது மிகவும் கேவலமான செயல். ஹிட்சுக்காக இப்படியா தரம் தாழ்வது. இதில் வேறு தன்னை மாணவர்களுக்கு பிடித்தமானவர் என்று கூறிக்கொள்கிறார். அந்தப்பதிவை காப்பி எடுத்து ஸ்கூல் வாசலில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். அவர்களே தீர்ப்பு சொல்லட்டும். ஆனால் அதற்குள் அவர் அந்த தலைப்பை மாற்றி விடலாம். அதனால் கவலை இல்லை. நான் ஏற்கனவே ஒரு காப்பி எடுத்து விட்டேன். உங்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன்.
கேட்ட கேள்வியை விட்டுவிட்டு சம்மந்தம் இல்லாத பேச்சு எதற்கு? பதிவுலகில் பலர் நல்லவர்கள்தான். பதிவர்கள் யாரும் காலையில் எழுந்தவுடன் வில்லனாக மாறி மற்றவர்களை கொல்லுவதில்லை. என்னமோ நீங்கள் மட்டுமே நல்லவர் போல தற்பெருமை கொல்ல வேண்டாம்.
ஒரு வரி எழுதினாலே நான்கு பிழைகள் வரும். இது வேறயா? தயவு செய்து பிழை இன்றி எழுதுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்டீர்களா? நான் அப்படித்தான் என்று சொல்வது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். கேட்டால் அவசரத்தில் எழுதினேன் என்று சொல்லி தப்பிப்பீர்கள். நீங்கள் தமிழர். அதுவும் ஆசிரியர். எங்கள் பதிவில் பின்னூட்டம் போடும்போதாவது பிழை இன்றி போடுங்கள்.
////புரட்சிக்காரன் என்று பிளாக் ஆரம்பித்தவுடன் பேயருக்கு ஏற்றார்போல் ஏதோ புரட்சியெல்லாம் செய்ய போகுறீர் என்று நினைத்தேன்...
உம்முடைய புடலங்காயெல்லாம் பிறபதிவர்களை சாடுவதற்க்கும் சகபதிவர்கள் மீது மண்ணைவாரி துற்றுவதற்க்கும் இந்த புரட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தி கேவலப்டுத்திவிட்டீர்...
ஏதோ இந்த நாட்டை காப்பற்றவந்த கடவுளைப்போல் தங்ளை நினைத்துக்கொண்டுதான் இப்படி சக பதிவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறீர் போல....//
ஆசிரியரின் முதல் பின்னூட்ட பிழைகள்:
பெயருக்கு பதில் பேயருக்கு...
சாடுவதற்க்கும் இல்லை நண்பரே..... சாடுவதற்கும்
தூற்றுவதற்கும் இல்லை நண்பரே....தூற்றுவதற்கும்
கேவலப்டுத்திவிட்டீர் இல்லை நண்பரே.....கேவலப்படுத்திவிட்டீர்
என்ன கொடுமை இது. ஆசிரியருக்கு மீண்டும் மீண்டும் பாடம் எடுக்க வேண்டிய அவலம். ஒரு வருடம் ஆகியும் நீங்கள் 'இதுல' பாஸ் ஆகவே இல்லை.
//////புரட்சி என்ற பெயரில் குறிப்பாக ஒருசில பதிவர்கள் மீது காயப்படுத்துவதை விட்டு விட்டு ஏதாவது செய்யுங்கள் நண்பரே....//
உறுப்படியாக இல்லை பேராசியரே...............உருப்படியாக. உங்களை நீங்களே கத்தியால் குத்திக்கொள்கிறீர்கள். நாங்கள் படித்த நாலாம் வகுப்பு தமிழ் கூட மறந்து விடும் போல. யாராவது காப்பாற்றுங்கள். இங்கே தமிழ்த்தாயை ஆசிரியர் குத்தி குத்தி கிழிக்கிறார்.
//என்னைசுற்றி நடக்கும் சமூகத்தை நான் கவிதையாக்கும் முயற்சிதான் இது..//
நீங்கள் மட்டும் சமூகத்தை திருத்த அரசிடம் லைசன்ஸ் வாங்கலாம். நாங்கள் வாங்கினால் புடலங்காய் என்று சொல்வீர்களா? எந்த ஊர் நியாயம்? குக்கிராமம் போன்ற அனுதாப ஓட்டு வாங்குவதை நிறுத்துங்கள்.
ஆயிரக்கணக்கான வலைப்பூக்களில் குற்றங்கள் என்மீது சுமத்த வேண்டும் என்ற கட்டாயம் என்ன..!//
கண்டுபிடக்காத அல்ல பேராசியரே.... கண்டுபிடிக்காத. இந்த கொடுமைக்குதான் உங்கள் மீது குற்றம் சொல்கிறோம். பொறுமை. பொறுமை. ஓய்வு எடுத்துவிட்டு நன்றாக படிக்கும் மாணவனை விட்டு பிழை இல்லா பின்னூட்டம் போட சொல்லுங்கள்.
//ஏதோ ஒரு நாட்டில் நான்கு சுவருக்கும் உட்கார்ந்து வீரன் போல் பேசி விடலாம்
கோவப்படுவதற்க்கும் குற்றம்சாட்டுவதற்க்கும் அப்படி என்ன ஆகுவிடப்போகிறது...//
கோவப்படுவதற்க்கும் அல்ல கோவப்படுவதற்கும்
குற்றம்சாட்டுவதற்க்கும் அல்ல குற்றம்சாட்டுவதற்க்கும்
ஆகுவிடப்போகிறது அல்ல ஆகிவிடப்போகிறது
வேண்டுமெனில் எல்லா பின்னூட்டத்தையும் நீக்கிவிட்டு மீண்டும் ஒரு முறை பொறுமையாக எழுதுங்கள்.( எல்லா கோட்டையும் அழிங்க. நான் முதல்ல இருந்து பொரோட்டா சாப்பிடறேன்) இல்லாவிடில் இதற்கும் ஒரு சாக்கு சொல்லுங்கள். அப்போதும் எழுத்துப்பிழை வரும். அது விதி. குக்கிராமத்தில் நல்ல தமிழாவது படித்தீர்களா இல்லையா?
//நல்ல நோக்கேர்டும்.. நல்ல பார்வையோடும் அணுகினால் எல்லாம் ந்ல்லதாக தெரியும் இப்படி தவறாக கண்ணோட்டம் கொண்டவர்கள் தான் இப்படி தரக்குறைவான வேலையை செய்துக் கொண்டிருப்பார்கள்.//
அது என்று தரக்குறைவாக எழுதியது யார்? அது ஊருக்கே தெரியும். உங்கள் நண்பர் செய்தது போல நீங்களும் எதற்கு மூக்கு சிந்த வேண்டும்? ஏனய்யா இப்படி அழுது அனுதாப ஓட்டு வாங்க வேண்டும். எப்படியோ போங்கள். நான் வகுப்பை தொடர்கிறேன்.
நோக்கேர்டும்.. அல்ல நோக்கோடும்.
ந்ல்லதாக அல்ல நல்லதாக.
(தயவு செய்து ட்யூசன் பீஸ் 500 ரூபாயை மனசாட்சியுடன் கட்டிவிடுங்கள்)
//
கவிதை வீதி... // சௌந்தர் // கருத்து இது :
November 14, 2011 11:50 PM
This post has been removed by the author.//
ஆட்டம் ஆரம்பம். நடத்துங்கள்.
என் ஆதங்கத்தைக்கூட புரிந்துக்கொள்ள முடியாத தங்களிடம் நான் எதைச் சொல்ல... தேவையில்லாத குற்றச்சாட்டுக்கு காரணம் கேட்டால் அதில் குற்றம் கண்டுபிடித்து தாங்கள் தமிழ் மேதையாகிவிட்டீர்கள்...
வாழ்க உங்கள் தமிழ் தொண்டு...
பிழையோடு இருந்தாலும் எனக்கு தெரிந்த தமிழில் நான் அறிந்த விஷயங்களை நல்ல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பேன். உங்களைப்போன்று வசைப்பாட பயன்படுத்த மாட்டேன்.
தொடரட்டும் தங்கள் புரட்சி....
//கவிதை வீதி... // சௌந்தர் // கருத்து இது :
November 14, 2011 11:21 PM
This post has been removed by the author.
கவிதை வீதி... // சௌந்தர் // கருத்து இது :
November 14, 2011 11:27 PM
This post has been removed by the author.
கவிதை வீதி... // சௌந்தர் // கருத்து இது :
November 14, 2011 11:30 PM
This post has been removed by the author.
கவிதை வீதி... // சௌந்தர் // கருத்து இது :
November 14, 2011 11:31 PM
This post has been removed by the author.
கவிதை வீதி... // சௌந்தர் // கருத்து இது :
November 14, 2011 11:32 PM///
வீரவசனம் பேசிய ஆசிரியருக்கு போதுமான பாடம் எடுத்தும் பயன் இல்லை. ஓடி விட்டார். இனி இங்கு வந்து பொங்கினால் பதில் அளிக்க இயலாது. நேரத்தை செலவு செய்து பதில் பின்னூட்டம் அளித்தால் அனைத்து பின்னூட்டங்களையும் அழித்து விட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டார். இனி உங்கள் பதிவிலேயே அழுகாச்சி காவியத்தை தொடருங்கள். "ஐயோ நான் மட்டுமே நல்லவன்" என்று. தயவு செய்து எழுத்துப்பிழை இன்றி.
நீங்கள் செய்த இந்த செயலால் இனி உங்களின் எந்தக்கேள்விக்கும் பதில் பின்னூட்டம் அளிக்கப்போவதில்லை. எங்களுக்கு பிழைப்பு இருக்கிறது.
/கவிதை வீதி... // சௌந்தர் // கருத்து இது :
November 15, 2011 12:06 AM
என் ஆதங்கத்தைக்கூட புரிந்துக்கொள்ள முடியாத தங்களிடம் நான் எதைச் சொல்ல...//
நாங்கள் என்ன ஜனாதிபதியா? உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொண்டு கருணை மனுவை பரிசீலிக்க?
// தேவையில்லாத குற்றச்சாட்டுக்கு காரணம் கேட்டால் அதில் குற்றம் கண்டுபிடித்து தாங்கள் தமிழ் மேதையாகிவிட்டீர்கள்...//
தேவையில்லாத குற்றச்சாட்டா? ஆயிரம் எழுத்துப்பிழைகளை ஒரு ஆண்டு காலம் எழுதி வந்தீர்களே. அந்த குற்றச்சாட்டுக்கு நேர்மையான பதில் கூறுங்கள். போதும்.
//வாழ்க உங்கள் தமிழ் தொண்டு...//
அது வாழ்வது கிடக்கட்டும் புடலங்காய். தயவு செய்து உங்கள் தமிழ்க்கொலையை நிறுத்துங்கள்.
//பிழையோடு இருந்தாலும் எனக்கு தெரிந்த தமிழில் நான் அறிந்த விஷயங்களை நல்ல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பேன். உங்களைப்போன்று வசைப்பாட பயன்படுத்த மாட்டேன்.//
அது சரி. இன்னும் எத்தனை ஆண்டுகள் பிழையுடன் எழுதுவதாக எண்ணம்.
வசைப்பாட அல்ல ஆசிரியரே வசை பாட.
///தொடரட்டும் தங்கள் ......///
நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் புரட்சி தொடரும். தொடரட்டும் உங்கள் தாய்மொழிக்கொலை.
அய்யய்யோ..இவருடன் ஐந்து நிமிட்டம் இருந்தாலே நம்மக்கு தெரிந்த தமிலும் மரந்து விடும் போள. நம்மையும் பிலையுடன் எலுத வைததுவிட்டார்.
வாழ்த்துக்கள் புரட்சிக்காரரே. நீர் சாட்டையை சுழற்றும். தவறு செய்தது நானாயிருந்தாலும் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளத்தான் வேண்டும்.
உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கிறேன் ....
நடக்கும் எல்லா தவறுகளையும் சுட்டி காட்ட முடியுமா அது உங்களால் சாத்தியமா ?. நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் என்று சிலரை குறிவைத்து எழுதுவது எங்கோ இடிக்குது
வாருங்கள் செந்தில் அவர்களே. நீங்கள் தைரியமாக கருத்தை சொல்லி இருப்பதற்கு நன்றி. இதற்கு முன் அந்த வாத்தியாருக்கு தமிழ் ஈட்டி என்பவர் மிக நாகரீகமாக பல முறை பின்னூட்டமிட்டு பிழைகளை திருத்த சொன்னார். ஆனால் அவருடைய கருத்தை தன் வலைப்பூவில் இருந்து வாத்தியார் நீக்கிவிட்டார். இதை படிக்கவும்.
http://pilaiirukku.blogspot.com/2011/06/blog-post.html
அப்போதே சரி செய்து இல்லாவிட்டாலும், செய்த தவறுகளை அழித்தல் அல்லது மீண்டும் மீண்டும் மறைத்தல், அதுவும் இல்லாவிடில் சோகப்பதிவு எழுதில் கவனத்தை திசை திருப்புதல் என்று செய்வதுதான் கொடுமை.
நீங்கள் தவறு செய்தால் கூட உடனே கடுமையாக தாக்கி பதிவு போடும் அநாகரீகம் எங்களுக்கு இல்லை செந்தில். நட்புடன் பிழையை மட்டும் சுட்டிக்காட்டுவோம். அதை 99% பதிவர்கள் திருத்தியும் கொள்கிறார்கள். ஆனால் மீதி 1% சதவீத ஆட்கள் தான் இப்படி செய்கிறார்கள். பிரபல எழுத்தாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் பதிவர்கள் மீதான மதிப்பு போவதே இந்த 1% ஆட்களால்தான். இன்று எங்கள் பதிவில் அவர் கருத்தை சொன்னதில் கூட ஏகப்பட்ட பிழைகள் இருந்ததை சுட்டிக்காட்டியதற்கு அந்த கருத்துக்களை நீக்கி விட்டார். இதை விட சிறுபிள்ளைத்தனம் ஏதாவது இருக்க முடியுமா?
அவரின் நண்பர்களுக்கும் இது தெரியும். ஆனால் அதை தட்டி கேட்காமல் பலர் ஊக்குவிக்கலாம். நீங்கள் இருபக்கமும் சேராத ஆள். எனவே உங்கள் கருத்து ஒன்றே எங்களுக்கு போதும். மிக்க நன்றி.
/
ரியாஸ் அஹமது கருத்து இது :
November 15, 2011 1:00 AM
உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கிறேன் ....
நடக்கும் எல்லா தவறுகளையும் சுட்டி காட்ட முடியுமா அது உங்களால் சாத்தியமா ?. நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் என்று சிலரை குறிவைத்து எழுதுவது எங்கோ இடிக்குது//
வாழ்த்துக்கு நன்றி ரியாஸ். நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் நாட்டில் நடக்கும் ஒட்டுமொத்த தவறுகளை சுட்டிக்காட்ட இயலாது. அதே கோணத்தில் சிலர் நாட்டை திருத்த கவி பாடுவதால் எல்லாரும் திருந்த இயலுமா? அது போல்தான். ஒரு சிலரை குறிவைத்து ஓராண்டு காலமாகவா எழுதி வருகிறோம்? ஒரு சில பதிவுகள்தானே? அவர்கள் செய்யும் செயல்களை கூர்ந்து கவனித்த பிறகே பதிவிடுகிறோம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறோம் ரியாஸ்.
http://pilaiirukku.blogspot.com/2011/03/blog-post.html
//
Online Works For All கருத்து இது :
November 15, 2011 1:26 AM
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html//
ஆன்லைன் ஒர்க்கு ..ஒனக்கு இருக்கு ஒரு நாள் தீபாவளி. இத்தோட நிறுத்திக்க!!
//புரட்சிக்காரன் இவன் காப்பி-பேஸ்டுக்கு எதிரானவன்//
இன்றுதான் உங்கள் இணையத்திற்கு முதன் முதலில் வந்தேன். புரட்சிக்காரன் என்று சேகுவாராவின் புகை படத்தோடு ப்ளாக் அசத்துகிறது. எல்லாம் சரிதான் அதுஎன்ன நான் காப்பி பேஸ்டுக்கு எதிரானவன் என்று உங்கள் எழுத்துகளுக்கு ராயல்டி வாங்குறீங்கள். வாங்குங்கள் தப்பில்லை ஆனால் செகுவார படத்தையும், புரட்சிக்காரன் என்கிற அந்த பெயரையும் எடுத்து விட்டால் அதை நீங்கள் சொல்ல தகுதி ஆனவர் ஆகிவிடுவீர்.
என்னடா இப்பதான் முதல் முறையா நமது இணையத்துக்கு வந்தேன் என்று சொல்கிறான், வந்த உடனே இப்படி சொல்கிறானே என்று எண்ணாதீர்கள், மனதிற்கு உறுத்தலாக இருந்தது இந்த படமும் அதனோடு உள்ள வார்த்தையும் அதனாலே சொல்கிறேன்.
சேகுவாரா சொன்னார் எந்த பிரதேசத்தில் மக்களுக்கு எதிராக அநீதி நடக்கிறதோ அதுவே எனது சொந்த பூமி என்றார். ஏன் என்றால் எந்த நாட்டில் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டாலும் அதை தன சொந்த பூமியாக நினைத்து போராடுவான் ஒரு புரட்ச்சி காரன்.
நாம் எழுதும் எழுத்தையே அடுத்தவர்கள் காப்பி செய்து போடகூடாது என்று நினைப்பது தவறான சிந்தனை. செய்திகள் மக்களுடையது, சிந்தனைகள் மக்களுக்கு சென்று சேரவேண்டியது அதை நாம் செய்தோம், நாம் எழுதினோம் என்கிற சுய ஆளுமை, இங்கு வருமே ஆனால் இங்கு பொது உடமைக்கும், புரட்சிக்கும் வேலையில்லை.
சராசரி மனிதனாக இருந்து அதை இதை சொல்வதில் தவறில்லை. தவறாக சொல்லி இருந்தால் பதிலளிக்கவும். நட்புடன்: புதியதென்றல்.
தொடர்புகளுக்கு:
sinthikkavum@yahoo.com
puthiyathenral@gmail.com
செய்திகள் அனைத்தும் மக்களுக்கே!
காப்பி செய்து பயன்படுத்தலாம்.
அனுமதி பெற தேவையில்லை.
//புரட்சிக்காரன் இவன் காப்பி-பேஸ்டுக்கு எதிரானவன்//
இன்றுதான் உங்கள் இணையத்திற்கு முதன் முதலில் வந்தேன். புரட்சிக்காரன் என்று சேகுவாராவின் புகை படத்தோடு ப்ளாக் அசத்துகிறது. எல்லாம் சரிதான் அதுஎன்ன நான் காப்பி பேஸ்டுக்கு எதிரானவன் என்று உங்கள் எழுத்துகளுக்கு ராயல்டி வாங்குறீங்கள். வாங்குங்கள் தப்பில்லை ஆனால் செகுவார படத்தையும், புரட்சிக்காரன் என்கிற அந்த பெயரையும் எடுத்து விட்டால் அதை நீங்கள் சொல்ல தகுதி ஆனவர் ஆகிவிடுவீர்.
என்னடா இப்பதான் முதல் முறையா நமது இணையத்துக்கு வந்தேன் என்று சொல்கிறான், வந்த உடனே இப்படி சொல்கிறானே என்று எண்ணாதீர்கள், மனதிற்கு உறுத்தலாக இருந்தது இந்த படமும் அதனோடு உள்ள வார்த்தையும் அதனாலே சொல்கிறேன்.
சேகுவாரா சொன்னார் எந்த பிரதேசத்தில் மக்களுக்கு எதிராக அநீதி நடக்கிறதோ அதுவே எனது சொந்த பூமி என்றார். ஏன் என்றால் எந்த நாட்டில் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டாலும் அதை தன சொந்த பூமியாக நினைத்து போராடுவான் ஒரு புரட்ச்சி காரன்.
நாம் எழுதும் எழுத்தையே அடுத்தவர்கள் காப்பி செய்து போடகூடாது என்று நினைப்பது தவறான சிந்தனை. செய்திகள் மக்களுடையது, சிந்தனைகள் மக்களுக்கு சென்று சேரவேண்டியது அதை நாம் செய்தோம், நாம் எழுதினோம் என்கிற சுய ஆளுமை, இங்கு வருமே ஆனால் இங்கு பொது உடமைக்கும், புரட்சிக்கும் வேலையில்லை.
சராசரி மனிதனாக இருந்து அதை இதை சொல்வதில் தவறில்லை. தவறாக சொல்லி இருந்தால் பதிலளிக்கவும். நட்புடன்: புதியதென்றல்.
தொடர்புகளுக்கு:
sinthikkavum@yahoo.com
puthiyathenral@gmail.com
செய்திகள் அனைத்தும் மக்களுக்கே!
காப்பி செய்து பயன்படுத்தலாம்.
அனுமதி பெற தேவையில்லை.
புதிய தென்றல்,
காப்பி பேஸ்ட் குற்றச்சாட்டை தவிர இன்ன பிற குற்றச்சாட்டுகளையும் படியுங்கள். சொன்ன கருத்தை எல்லாம் நீக்கி விட்டு ஓடுபவர்கள் பற்றி தங்கள் கருத்தென்ன?