Showing posts with label நக்கல். Show all posts
Showing posts with label நக்கல். Show all posts

கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......



இன்னைக்கு நம்ம பாக்கப்போறதும் ஒரு வாத்தியாரை பத்தித்தானுங்கண்ணா....

இந்த கவிதை தெரு வாத்தியாரும், நம்ம சரணாலய வாத்தியாரும் நெருங்கிய தோஸ்துங்க....ரெண்டு பேரும் ஒன்னாத்தான் வேலை பார்க்கறாங்க....
நம்ம அடிக்கடி இவங்களை பத்தி எழுதுறதால...இப்ப சரணாலய வாத்தி கொஞ்சம் திருந்திட்ட மாதிரி இருக்கு...திருந்தட்டும் நமக்கு அதுதானே வேணும்.

சரணாலய பதிவரு இப்பலாம் காப்பிகூட குடிக்கறது இல்லையாம்.
பதிவை கூட ரத்திண சுருக்கமா எழுதுறார். கவிதைங்கிற பேருல எதையாவது ரெண்டு அடி இல்லாட்டி  நாலு வரில எழுதி திருக்குறளுக்கும், நாலடியாருக்கும் செம போட்டியை கொடுக்கறாரு அவரு....

அவருக்கு போட்டியா இந்த கவிதைத்தெரு வாத்தியும் கவிதைங்கற பேருல எழுதுவாரு பாருங்க...ஆத்தாடி நம்ம வாலி, வைரமுத்து எல்லாம் பிசசை வாங்கனும் அவருகிட்ட...அப்படி ஒரு சமுதாய அக்கறையுள்ள கவிதைகள்.

கவிதைதெரு வாத்தி பதிவுலக ஷங்கர் மாதிரி.... ஷங்கருன்னு சொன்னதும் பெரிய அளவுல அவரை நெனைக்காதீங்கண்ணா....
ஷங்கரும் இவரும் சரக்கே இல்லாம அவங்க அவங்க துறையில குப்பை கொட்டுறவங்க...
ஷங்கருக்கு பிரமாண்டம்ன்னா...கவிதைதெருவுக்கு ஜிகினா வேலைப்பாடுகள்.

நான் இன்று கடைக்குப்போய் மிட்டாய் வாங்கினேன் என்பதைக்கூட

நான்
இன்று
கடைக்குப்போய்
மிட்டாய்
வாங்கினேன்


என்று ஒன்றின்கீழ் ஒன்றாய் வார்த்தைகளை அடுக்கி, அந்த மொக்கைக்கு ஜிகினா வேலைப்பாடுகளெல்லாம் கொடுத்து, கலர் கலரா வண்ணம் பூசி கவிதைன்னு சந்தைப்படுத்திவிடுவாரு. அவ்வளவு திறமை நம்ம கவிதைதெரு வாத்திக்கு..

ஒரு கவிதை எப்படி இருக்கக்கூடாதுங்குறதுக்கு அண்ணனின் உரைநடையே தப்பு தப்பு  கவிதையே சாட்சி. கவிதை எழுதற பதிவர்கள் எல்லாரும் ஒரு முறை நம்ம வாத்தியின் கவிதையை படிங்கப்பா...அப்பத்தான் எப்படி கவிதை எழுதக்கூடாதுன்னு உங்களுக்கு புரியும். இதுகூட தொலையட்டும். 

அன்றைக்கு ஒரு தலைப்பு வச்சிருந்தார் பாருங்க.....ஆசிரியர் ஜாதியே வெட்கி தலைகுனியனும் அதுக்காக....அப்படி என்ன தலைப்புன்னு கேட்கறீங்களா...இதுதான் அந்த தலைப்பு....

ஆத்தா.. நான் அதுல பாஸாயிட்டேன்.

இப்படி ஒரு மட்டமான தலைப்பை ஒரு ஆசிரியர் போட்டது வெட்கக்கேடு. என்னதான் சாக்கு போக்கு சொன்னாலும் 'அது' எனும் வார்த்தைக்கு அசிங்கமான அர்த்தம் உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். ஹிட்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக அந்த 'அது' வார்த்தையை பயன்படுத்தி அதுவும் தாயே (ஆத்தா)  நான் அதுல பாஸ்  ஆயிட்டேன் என்று எழுதுவது ஒரு ஆசிரியருக்கு அழகா? ஒவ்வொரு முறையும் யாரேனும் தவறை சுட்டிக்காட்டுவதும், சில சமயம் அதை திருத்துவதும், பலமுறை தகிடுதத்தம் செய்யும் அந்த வாத்தியார் இன்னும் அந்த வார்த்தையை திருத்தாமல் இருக்கிறாரே....இன்னும் யாரும் அதை சுட்டிக்காட்டவில்லை போலும்.
இதை  எங்க பக்கம் இருக்கும் ஆத்தாவிடம் சொல்லியிருந்தால் அதுல அதை நனைச்சு...அது பிஞ்சுபோற அளவுக்கு அதாலயேஅடிச்சுருப்பாங்க....

அதுல என்னங்க தப்பு இருக்கு? அதுங்கறது கெட்டவார்த்தையான்னு கேட்கறீங்களா?

ஆமாங்க..ஆமாம்...அதுங்கறது இன்றைய பதிவுலகத்தில் அது கெட்டவார்த்தைதான். வாத்தியாரும் ஹிட்சுக்காக கெட்டவார்த்தை அடிப்படையில்தான் அதை பயன்படுத்தியிருக்கார். சாதாரனமாக நான் பாசாயிட்டேன்னு தலைப்பு வச்சா கூட்டம் வராதுன்னு தெரிஞ்சே அதை பயன்படுத்தியிருக்கார்.

இந்த அது இது போன்ற வார்த்தைகளை ரெண்டு வாத்திகளும்தான் அதிகம் பயன்படுத்தறாங்க.....

என்ன பன்றது இவங்க அதுக்குக்கூட லாயக்கில்லை....எதுக்கா? அதுக்குத்தாங்க....





Powered by Blogger