கவிதாவீதி சந்தர் அவர்களுக்கு.....


வணக்கம் வாத்யாரே.....  நேற்றைய எங்கள் பதிவில், சில பின்னூட்டங்களை போட்டு பின் அழித்திருந்தீர்கள். எங்கள் மீது சில குற்றச்சாட்டு வைத்திருந்தீர்கள். உங்களை கண்ணீர் விடவைக்கவேண்டுமென்பதோ....அர்த்தமின்றி காயப்படுத்த வேண்டுமென்பதோ எங்கள் நோக்கமல்ல....எத்தனையோ பேர் இருக்கும்போது என்னை மட்டும் ஏன் குறிவைத்து தாக்குகிறீர்கள்? என்ற உங்கள் கேள்வியின் நியாயத்தை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். நாங்கள் உங்களை மட்டும் தாக்கவில்லை. நாங்கள் தாக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். அதற்கு காரணம், நீங்கள் ஒரு ஆசிரியர். தமிழாசிரியரா என்று தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதை மட்டும் நாங்கள் அறிவோம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று உங்களைப்போன்ற ஆசிரியர்களை மூன்றாம் இடத்தில் வைத்துக்கொண்டாடுகிறது இந்த சமூகம். அப்படிப்பட்ட சமூகத்திற்கு நீங்கள் ஆற்றிய தொண்டு உங்கள் தளம் மூலம் பிழையான வார்த்தைகளை கொடுத்ததுதான்.

யாரோ ஒரு மூன்றாம் மனிதன் இதை செய்தால்கூட மன்னித்துவிடலாம். ஆனால், ஒரு ஆசிரியரே தவறு செய்தால்......அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

எழுத்துப்பிழை என்பது உங்களோடு மட்டும் முடிந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால், நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதால் இதே எழுத்துப்பிழைகளோடு மாணவர்களுக்கு நீங்கள் பாடம் எடுப்பதன்மூலம், மாணவர்களுக்கும் அந்த எழுத்துப்பிழை வந்துவிடாதா?
ஒரு தந்தை தவறு செய்தால் அது அந்த குடும்பத்தை மட்டும்தான் பாதிக்கும். ஆனால், ஒரு ஆசிரியர் தவறு செய்தால் ஒரு சமூகத்தையே பாதிக்கும்.

எழுத்துப்பிழை இருந்தால் என்ன? நான் சொல்லவந்த கருத்தில் பிழையுள்ளதா என்று பாருங்கள் என்றும் ஒரு  பின்னூட்டம் போட்டிருந்தீர்கள்.
எழுத்தில் பிழையிருந்தால் சொல்லவந்த கருத்திலும் பிழை வந்துவிடும் என்பதை ஏன் ஒரு ஆசிரியரான நீங்கள் உணரமறுக்கிறீர்கள்.
உதாரணத்திற்கு சில...

ஒருவனின் மனைவிக்கு ஒரு அழகான சோலை போன்ற தோட்டம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அந்த சோலைக்குள் இன்னொருவன் நுழைந்துவிட்டான். அந்த சம்பவத்தை ஒருவன் எழுத்தில் கொண்டுவரும்போது, என் மனைவியின் சோலைக்குள் ஒருவன் நுழைந்தான் என்றுதான் இருக்கவேண்டும்.
ஆனால், ஒரு எழுத்துதானே மாறுகிறது என்று துணைக்கால் போடாமல் சோலைக்குள் என்பதை சேலைக்குள் என்று எழுதிவிட்டால், குடும்பத்தில் குழப்பம் வந்துவிடாதா?

என் மகன் அடம் செய்கிறான் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்று ஒருவர் இன்னொருவருக்கு ஒரு தபால் எழுதி அதை தன் மகனிடமே கொடுத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி எழுதும்போது வைத்துக்கொள்ளவும் என்பதற்கு பதிலாக வைத்துக்கொல்லவும் என்று பிழையாக எழுதிவிட்டால் முடிந்தது அவரது மகனின் கதை.

எங்கோ மணம் வீசுகிறது என்பதை எழுத்தில் கொண்டு வரும்போது வார்த்தைக்கு நடுவில் இடம் விடாவிட்டால் எங்கோமணம் வீசுகிறது என்ற அர்த்தம் வந்துவிடும். கோமணம் என்பது கிராமப்புறத்தில் வயதானவர்கள் அணியும் உள்ளாடை என்பதை ஒரு ஆசிரியரான உங்களுக்கு இந்த சிறியோன் சொல்லித் தெரியவேண்டியதில்லை.இப்படி எத்தனையோ சொல்லலாம்.

அடுத்த ஒரு பின்னூட்டத்தில் நான் குக்கிராமத்திலிருந்து வந்தவன். எனக்கு பிழையில்லாமல் கவிதை எழுதவராது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
உங்களுக்கு பிழையின்றி கவிதை எழுத வராது என்பதற்காக ஏன் குக்கிராமத்துக்காரர்களை வம்பிழுக்கிறீர்கள்?

பட்டுக்கோட்டையார் பிறந்தது செங்கப்படுத்தான்காடு என்ற குக்கிராமத்தில்தான். கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி என்ற ஊர் தேம்ஸ் நதிக்கரையில் இல்லை. அதுவும் ஒரு குக்கிராமம் தான். வைரமுத்து பிறந்த வடுகப்பட்டியும் ஒரு குக்கிராமம்தான்.

இப்படி குக்கிராமங்களில் பிறந்த எல்லோருக்கும் கவிதை எழுத வரும்போது உங்களுக்கு ஏன் வராது?...முயற்சியுங்கள் அய்யா....முடியும் உங்களால்.  

எங்களின் இந்த பதிவிற்கு பதிலடியாக உங்கள் தளத்தில், ஓ...சமூகமே இது நியாயமா? என்று ஒரு கவிதையை நூறு பிழைகளோடு எழுதி பதிவிட்டு அனுதாபம் தேடிக்கொள்ளுங்கள். உங்களுக்கு வாக்களிக்கவும் பரிதாபப்படவும் ஒரு கூட்டமே இருக்கிறது.
உங்களுக்காகத்தான் திருவள்ளுவர்

சொலல்வல்லான் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது


என்று சொல்லியுள்ளார். அதாவது...ஒரு விசயத்தை அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லத்தெரிந்தால் போதும். அது பொய்யாக இருந்தாலும் அவனை சுற்றி ஒரு கூட்டமிருந்து, அவனை வெல்ல யாராலும் முடியாது என்றிருக்கிறார். இந்த இடத்தில் ஒரு திருத்தம், உங்கள் விசயத்தில் அது பொய்யாக இருந்தாலும் என்பதை அது பிழையாக இருந்தாலும் என்று மாற்றிக்கொள்ளுங்கள். இனி, உங்களை தொந்தரவு செய்யப்போவதில்லை. இதுவரை கொடுத்த தொந்தரவிற்காக மன்னிக்கவும்.
இனிமேலாவது பிழையில்லாமல் எழுதுவீர் என்ற நம்பிக்கையில்....

புரட்சிக்காரன்


16 நண்பர்கள்

கவிதாவீதி சந்தர் அவர்களுக்கு.....

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

 1. suryajeeva கருத்து இது :

  அடுத்து யாரு?
  கருப்பு ரோஜாக்கள்
  அப்படின்னு ஒரு ஆசிரியர் இருக்கார்...

  இல்ல தவறுகளை திருத்துகிறோம் என்று தப்புகளை கவனிக்காமல் விடப் போகிறோமா?

  Philosophy Prabhakaran கருத்து இது :

  // கோமணம் என்பது கிராமப்புறத்தில் வயதானவர்கள் அணியும் உள்ளாடை //

  அடேங்கப்பா... என்ன ஒரு விளக்கம் :)

  Anonymous கருத்து இது :

  Poi pozhappa paruppa.....

  Anonymous கருத்து இது :

  Deai.....nee indiayavila
  kalyanam panni oru
  kuzhanthaikku appan....
  Avangalai vittuttu
  poitta......

  Nee niyayam pesuriya ????
  Vetkkama illai ......unakku.....
  Ithula vera nee periya
  pudingi mathiri......

  Ur a clear mental....

  Anonymous கருத்து இது :

  //Anonymous said...
  Deai.....nee indiayavilaanaaniyaaga//

  aasiriyare, yen anaanigalai anuppi alladhu anaaaniyaaga vandhu comment poda vendum???? unmai sudaththaan seyyum. neengal aadiya aattam konjamaa..nanjamaa...kelvi ketpavargalai viratta ennum ungal mugaththirai melum kilikkappattaalum adhu sariye.

  Anonymous கருத்து இது :

  //Anonymous said...
  Deai.....nee indiayavila//

  hits vaanga vendum enum veri ippadi kooda pesa seyyum pola. ththooo. puratchikkaaran sir, naangal irukkirom. dont worry. thodarungal.

  ஜ.ரா.ரமேஷ் பாபு கருத்து இது :

  தம்பி நல்லா proof reader வேணும்ன்னு தேடிக்கிட்டு இருந்தேன். நீங்க அந்த வேலையை சிறப்பா செய்யுறீங்க.
  உங்களால முடிஞ்சா நான் பதிவு போடுறப்ப கொஞ்சம் படிச்சு பார்த்து நீங்க ஒரு பதிவு போட்டீங்கன்னா என் பதிவை திருத்துறதுக்கு வசதியா இருக்கும்.. சாயந்தரம் ௪ மணியில இருந்து ௫ மணிகுள்ள பதிவு போடுவேன்..

  Anonymous கருத்து இது :

  டேய் ....
  உன்னைப்பத்தி உண்மைய சொன்னா
  அதுக்கு பதில் போடு ...நீ ...கல்யாணம்
  பண்ணி..ஒரு பொண்ணு ..பெத்துட்டு ..
  இந்தியா-வில தவிக்க விட்டுட்டு ...
  ஓடிப்போயட்ட .....
  இதை மறுக்க முடிஉமா ???/

  சொல்லுங்க புரசிக்காரரே ....

  Anonymous கருத்து இது :

  இந்த நாயி ஹிட்ஸ்காக எதையாவது
  எழுதும் ....அப்புறம் பஞ்சாயத்து
  பண்ணும....நம்மளை முட்டாள்
  ஆக்கும் ....யார் என்று தெரிய
  இவன் பதிவையும்....அந்த பதிவையும்
  படிங்க ....எல்லாம் ஒண்ணுதான் ....
  இவனுக்கு தமிழ்மணம்-ல யாரும் வரக்குடாது....அப்படி வந்தா இவனுக்கு
  புடிக்காது,...
  உடனே ..எதையாவது சொல்லி அவங்களை ....நீக்க வைப்பார் ....
  அப்புறம் வேறு பேரில் இவர் மீண்டும்
  உலக பட்டதை போட்டுக்கிட்டு வருவார்....போங்கப்பா போய்
  பொழப்ப பாருங்கப்பா ....

  மேல உள்ள கேள்விக்கு இவனின் பதில் என்ன ????

  அவன் மிகவும் விரும்பும் தலைவர்
  மேல் ஆணை இட்டு கஊரமுடிஉமா ????

  Anonymous கருத்து இது :

  டேய் ....நீ இவ்வளவு மெண்டல் -லா ???
  நீயே வசிக்கடா அந்த மகுடத்தை ....

  நண்பர்களே ...இவனுக்காக...பரிஞ்சிக்கிட்டு வராதிங்க ....இவனுடைய உண்மையான முகம் உங்களுக்கு தெரியாது ....

  அப்புறம் நீங்க வருத்த படுவீங்க ....
  இவனா......என்று

  Powder Star - Dr. ஐடியாமணி கருத்து இது :

  யோவ், புரட்சிக்காரா! யாருய்யா நீரு? உன்னோட சொந்தப் பேரைச் சொல்லாவிட்டாலும்கூட, அற்லீஸ்ட், இருக்கும் ஊரையாவது சொல்லுமையா!

  பலபேர், நான் தான், புரட்சிக்காரன்னு நெனைக்குறாங்க! ஆனால், நீர் வேறு, நான் வேறு என்ற உண்மை எனக்கும், உமக்கும்தான் தெரியும்!

  தயவு செய்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுமையா! அத்துடன், நீர் தொடர்ந்து மௌனமாக இருந்து, பலபேர் நான் தான் நீர் என்று நம்ப ஆரம்பித்தால், அப்புறம் உமது கருத்துக்கள் எடுபடாது! மேலும் நீர் ஒரு கோழை என்றும் ஆகிவிடும்!

  நீர் அடுத்துவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட நினைக்கிறீர்! அது உமது தனிப்பட்ட பிரச்சனை! ஆனால், இதில் சம்மந்தமே இல்லாமல் எனது பெயர் அடிபடுவதுதான் சங்கடமாக இருக்கு!

  நான் யார்கூடயாவது மோதுவதாக இருந்தால் நேரடியாகத்தான் மோதுவேன்! கடந்தவாரம் 30 லட்சம் மக்களுக்கு எதிராக ஒரு பதிவு போட்டிருந்தேன்!

  அப்படியான நான், எதுக்குய்யா பயப்பிடணும்? நீர் யாருன்னு சொல்லித் தொலையுமைய்யா மொதல்ல!

  Anonymous கருத்து இது :

  //புரட்சிக்காரா! யாருய்யா நீரு?//
  அவரு பேரு திருப்பூர் ஜோதிஜி

  Anonymous கருத்து இது :

  Anonymous கருத்து இது :
  November 17, 2011 8:13 AM
  //புரட்சிக்காரா! யாருய்யா நீரு?//
  அவரு பேரு திருப்பூர் ஜோதிஜி//

  இது என்ன புது பிட்டா?

  Anonymous கருத்து இது :

  //இது என்ன புது பிட்டா?//

  இந்த பதிவில் போய் பாருங்க அண்ணே...

  http://puratchikkaaran.blogspot.com/2011/09/blog-post.html

  புரட்சிக்காரன் கருத்து இது :

  நண்பர்களே... புரட்சிக்காரனின் நோக்கம் திசை மாறு மாறுன்னு மாறிகிட்டு இருக்கு. புரட்சிக்காரன் கோழை இல்லை, தன்னை தெரியபடுத்தும் நேரம் வரும் பொழுது கண்டிப்பாக தெரியபடுத்துவான்.
  அதற்க்கான காலத்தையும் அவன் இந்த தளத்தை ஆரம்பிக்கையிலே முடிவு செய்து விட்டான். அதற்க்கு முன், அவனை கண்டுபிடிக்க நினைத்தால் தாரளமாக செய்யுங்கள். கண்டு பிடிக்கிறேன் பேர்வழி என்று
  மற்றவர்களை காயப்படுத்தாதீர்கள்.

  நான் Powder Star இல்லே... இல்லே.. இல்லே... அண்ணே ஐடியா மணி, இந்த சர்ச்சையில் உங்கள் பெயரை இழுத்துகினதுக்காக, சவுந்தர் அண்ணே மன்னிப்பு கேட்காவிட்டாலும் நான் கேட்கிறேன். என்ன மன்னிச்சுகங்க.
  ஏப்பா அறிவு ஜீவிகளா, IP அட்ரஸ், domain பேரு அப்டி இப்டின்னு ஆயிரத்தெட்டு வசதி இருக்கையிலே, இப்படி மொக்கையா ட்ரை பண்ணாதிங்கப்பா, பல நல்ல கோப்பி பேஸ்ட் செய்யாத உள்ளங்கள் பாதிக்கப்படும்.

  புரட்சிக்காரன் கருத்து இது :

  என் பேரு திருப்பூர் ஜோதிஜியும் இல்ல, மணிப்பூர் மாமிஜியும் இல்ல. ரொம்ப திண்டாடாதீங்க. அடுத்த பதிவுல என்ன பத்தி சில காத்திரமான Clue தாரேன். இப்ப வாரேன்..... நித்திரை கண்ண கட்டுது.

Powered by Blogger