ஐயோ.. நான் 'இதுல' பெயிலாயிட்டேன்


கவிதைத்தெருவுக்கு வருக. வருக.


                                                           
கவிதைத்தெருவை பெருக்க ஆரம்பித்து இன்றோடு ஐந்தாண்டு ஆகிவிட்டது. நான் உங்கள் காதுல பூ சுற்றியதை உங்களோடு இன்று பகிர்ந்தே தீருவேன். நான் எப்படி காதுல பூ சுற்றினேன், ஹிட்சுக்கும், ஓட்டுக்கும் எப்படி எல்லாம் காக்கா பிடித்தேன் என்று சொல்லி வழக்கம் போல் மொக்கை போட விரும்பவில்லை. கவிதை என்கிற பெயரில் 'ஓ சமூகமே விழித்தெழு, ஏ மனிதா பொங்கிவிடு, B,C,D மனிதர்களே ஒன்றுகூடுங்கள்' என்று இத்தனை ஆண்டுகள் அரதப்பழசான மொக்கை கவிதைகளை பொறுத்துக்கொண்டு மொய்க்கு மொய் செய்த உங்களுக்கு 'புதிய பாதை' பார்த்திபனுக்கு ஓட்டல் கதவு திறப்பவர் போல் தலை வணங்குகிறேன். 

                                                                                
என் வலைப்பூவில் ஆதிகாலத்து ப்ளேடு கவிதைகள் மட்டுமின்றி உங்களைக்கவிழ்க்க என் உருப்படியாக நேரத்தை வீணடித்து விட்டு  ஆக்ஸா ப்ளேடு அரசியல், கட்டுக்கதை, சிரிப்பே வராத ஜோக்ஸ் என்று தொடர்ந்து சேவை செய்து வருகிறேன். இதன் மூலம் பாலோயர் எண்ணிக்கை அதிகம் ஆனாலும், இவற்றை முழுதாக படிக்காமல் ஓட்டம் பிடித்தவர்களே அதிகம் என்று உலகுக்கே தெரியும். 

பொதுவாக கொலையாய் கொல்லும் கவிதைகளை படிக்காமல் தலைதெறிக்க ஓடும் நண்பர்களே அதிகம் என்றாலும், ஐரோப்பாவின் ஏதோ ஒரு வீட்டின் மூளையில், (இல்லை இல்லை எழுத்துப்பிழை. 'மூலையில்' பிழையை சரி செய்துவிட்டேன்.. ஹி..ஹி...) ஏதோ ஒரு அப்பாவி என் கவிதையை படித்து 'காதல்' பரத் போல தலையை சொறிந்து கொள்வதை பார்க்கையில் என் பாதம் ஒளிர்கிறது. 

இந்த ஐந்தாண்டில் வலைப்பதிவு எழுதி எழுதி, நல்ல புத்தகங்களை படிக்காமல் வெட்டியாக நேரத்தை போக்கிவிட்டேன். உளுந்தூர்பேட்டை தமிழர்களிடம் என் மகா மொக்கை கவிதைகள் சென்று அடைந்ததன் மூலம் நான் 'ஆளை விடுங்க சாமி பதிவர்' என்று அடையாளம் காணப்பட்டேன். கோடிக்கணக்கில் இல்லாவிட்டாலும் ஒரு நல்ல நட்பை சம்பாதித்தேன். அது நான்தான்..ஹி..ஹி..
வேறு யாரும் சிக்கவில்லை. 

எதிர்பார்ப்புகள் இன்றி தலை எழுத்தை நொந்தவாறு எனக்கு மொய்க்கு மொய் வைக்கும் அப்பாவி பதிவர்களுக்கும், முதல் வரியை படித்ததும் தெறித்து ஓடும் வாசகர்களுக்கும் 'ஏ மனிதா, ஓ சமூகமே' என்று கூறி ரம்பம் போடுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொள்கிறேன். 

பதிவுலகில் என் தொல்லைகள்...

இதுவரைக்கும் ஹிட்ஸ் ஐந்து கோடி.... 

                                                                             
ஆனால் நியாயமாக கிடைத்தது வெறும் ரெண்டாயிரம் மட்டுமே. மீதி எல்லாம் நான் நித்தம் பலமணிநேரம் F5 பட்டனை அமுக்கி அமுக்கி பெற்றுக்கொண்டேன். எப்படி என் ராஜதந்திரம்!!  நான் பிறர் பதிவில் பாலோயராக சேர்ந்து விடாமல் ஒற்றை வார்த்தை கமன்ட் போட்டதால், கடைசியில் என் இம்சை பொறுக்காமல் பாலோயராக சேர்ந்தவர்கள் 389. இந்தத்தெருவில் அறுத்த ரம்பங்கள் 333. மனம் வீச...மீண்டும் எழுத்துப்பிழை. மனத்தை எப்படி வீச முடியும்? இது தெரிந்தும் ஐந்தாண்டுகள் அதுவும் ஆசிரியனாக இருந்தாலும் பிழையோடு எழுதுவேன். திருந்தவே மாட்டேன். மணம் வீச நான் எழுதிய டப்பா கவிதைகள் 83. என் பதிவுக்கு கிடைத்த நியாயமான தாக்குதல் 1. அது இதுதான்....


இன்று வரை அந்தப்பதிவில் பிழையை திருத்தவே இல்லை நான். எத்தனையோ பேர் பிழையாக எழுதினாலும், ஆசிரியராகிய நான் பிழையாக எழுதுவது தவறு என்று பலமுறை யார் சொன்னாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தவே மாட்டேன். அதற்கு சாட்சி 'ஐயோ.. நான் பெயிலாயிட்டேன்' எனும் பதிவில் உள்ள பிழைகள். பதிவை படித்துவிட்டு போடவே மாட்டேன். பிழையோடுதான் போடுவேன். 

என் பதிவுக்கு தங்களின் தாக்குதல்கள் 
பின்னுட்டங்கள்.. ஹி..ஹி..பின்னூட்டங்கள் (மீண்டும் மீண்டும் பிழை).
Commands... ஹி.ஹி..ஹி.. Comments (எப்படி அடுத்து ஒரு பிழை..)

இவைகள் என்னால் இல்லை. மொய்க்கு மொய்யால் மட்டுமே சாத்தியம் ஆனது. மேலும் ஜின்க் ஜாக் அடித்து கவிதை தெருவுக்கு ஓட்டுகளை போடுமாறு கேட்டுக்கொல்கிறேன் . 

(படங்கள் கூகுளில் எடுத்தது. பிழையின்றி எழுதும் பாடங்களை நான் இன்னும் கற்காதது என் இஷ்டம்).

என் ஒவ்வொரு பதிவிலும் முக்கியமான வரிகளுக்கு கலர் கலராக பெயின்ட் அடித்து ஒண்ணாங்கிளாஸ் பையன் போல தொடர்ந்து உங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுவேன். 

"ஆசிரியர்  என்ற பொறுப்புடன் இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு பதிவையும் படித்து விட்டு பிழை இல்லாமல் போட முடியுமா?" என்று யாராவது கேட்டால் அவர்கள் எல்லாருக்கும் என் பதில்: 

ஹி...ஹி...ஹி..ஹி...

   
     





8 நண்பர்கள்

ஐயோ.. நான் 'இதுல' பெயிலாயிட்டேன்

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

  1. தமிழ் ஈட்டி! கருத்து இது :

    நான் சொல்லி சொல்லி நொந்துவிட்டேன் நண்பரே. இத்தனை மாதங்கள் ஆகியும் அவர் அப்படித்தான் எழுதுகிறாரா? கொடுமை. சில சொந்த விஷயங்களுக்காக இடைவெளி விட்டிருந்தேன். இதோ நானும் உங்களுடன் கைகோர்க்கிறேன். இனி தமிழ்க்கொலை செய்பவர்களுக்கு(குறிப்பாக ஆசிரியர்களுக்கு) எதிராக சுழலட்டும் நமது போர்வாள். முன்பை விட மிக வேகமாக.

    Anonymous கருத்து இது :

    இவனுங்க ஆசிரியர் வேல செஞ்சு நாசமாப் போச்சு!.

    Anonymous கருத்து இது :

    ஒருத்தர் பதிவ திருடி ,உல்டா செஞ்சு நாட்டக் காப்பாத்தறாரு!

    Anonymous கருத்து இது :

    // ஒருத்தர் பதிவ திருடி ,உல்டா செஞ்சு நாட்டக் காப்பாத்தறாரு!//

    திருப்பூர் ஜோதிஜியைத்தானே சொல்றீங்க.

    இராஜராஜேஸ்வரி கருத்து இது :

    எப்படி என் ராஜதந்திரம்!?????

    Anonymous கருத்து இது :

    இதையெல்லாம் சொல்லி அவர்களுக்கு புரியவைப்பது வேஸ்ட் பாஸ். இதற்கு முன் அவர் நண்பரை பற்றிய உண்மைகளை போட்டவுடன் உடனே போய் தன் பதிவில் "ஐயோ. என்னை சாச்சிப்புட்டாங்க மச்சான்" என்று நீலிக்கண்ணீர் வடித்து அனுதாப ஓட்டுகளை வாங்கிவிட்டார். கடைசி வரை தான் செய்த தவறை மூடி மறைத்தார். நண்பன் செய்ததைத்தான் இவரும் செய்வார்.

    "ஓ..நண்பர்களே. அவமானப்பட்டேன். என்னை பார்த்து பொறாமைப்படுகிறார்கள். இந்த எதிரிகளுக்கு அலகு குத்துவோம். காது குத்துவோம். உண்மையை வெளியே சொல்லி ஆப்பு வைக்கும் பதிவர்களை ஒழித்துக்கட்டுவோம்" என்று சொல்லுவார். அதை நினைத்தாலே மயக்கம் வருகிறது.

    Anonymous கருத்து இது :

    Anonymous அவர்களே,

    'யார் புரட்சிக்காரன்' என்று சில நாட்களாக மண்டையை உடைத்துக்கொள்ளவே அங்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் தோஸ்த் பதிவர்கள் பெயரில் கும்மி, இன்று பள்ளியில் பேனா மூடி தொலைத்த மாணவனுக்கு ஆறுதல் கூறி தன்னம்பிக்கை ஓட்டினேன் என்று சாதாரண மேட்டருக்கெல்லாம் மார்தட்டுவது, அரசியல் குறித்து எழுதுகிறேன் என்று விரிவாக தரத்துடன் எழுதாமல் 'கலைஞர் செய்தது தவறா, கேப்டன் எப்போது திருந்துவார்' என்று மொக்கை பதிவு போடுவார்கள். இந்த மாவுதான் இன்னும் சில ஆண்டுகளுக்கு அரைக்கப்படும். அவர்களுக்கு இதற்கென்றே ஏகப்பட்ட நேரம் இருக்கிறது. நமக்கு ஆயிரம் வேலை உள்ளது. பிழைப்பை பாருங்கள்.

    - வெட்டியாக இல்லாத ஆசிரியர்.

    Anonymous கருத்து இது :

    ஓ....மதிப்பிற்குரிய வெட்டியாக இல்லாத ஆசிரியரே,
    நீங்கள் இதுவரை ப்ளாக் தொடங்கி காப்பி பேஸ்ட் செய்து நேரத்தை வீண் செய்யாமல் இருந்ததற்கு முதல் நன்றி. நீங்கள் சொல்வதும் சரிதான். அந்த நேரத்தை வெட்டியாக போக்காமல் தரமான பதிவுகளை, புத்தகங்களை எழுதியும், படித்தும் இருந்தால் பிரச்னை இல்லை. நான் கூட ப்ளாக் ஆரம்பிக்க நேற்று கனவில் நினைத்தேன். அதில் கூட ‘அந்த இருவர்’ உடனே எனக்கு பாலோயராக சேர்ந்துவிட்டனர். என்ன ஒரு வேகம்.
    யார் இந்தப்பதிவை எழுதுகிறார் என்று பார்க்காமல் உடனே எப்படித்தான் பாலோயர் ஆவார்களோ? நல்லவேளை ‘நித்யானந்தா’ ப்ளாக் ஆரம்பிக்கவில்லை. என்னமோ போங்க....
    இப்படிக்கு
    - படிக்காமல் நித்தம் நூறு கமன்ட் போடும் ‘டீச்சர். டீச்சரோ டீச்சர்’

Powered by Blogger