சர்வாதிகார பதிவர்கள்...

வணக்கம்,
புரட்சிக்காரன் யார் எனும் ஆராய்ச்சியில் சம்மந்தம் இல்லாத பதிவர்களை வம்புக்கு இழுப்பதை நிறுத்தவும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். வெற்று யூகத்தில் 'ஒரு பதிவரை கண்டுபிடித்துவிட்டேன்' என்று கூறி அவர் மனதை,நேரத்தை வீண் அடித்தும் உள்ளீர்கள். இன்னொரு பதிவரையும் கண்டுபிடித்தோம் அல்லது கண்டுபிடிக்கப்போகிறோம் என்று கூறி அவர்களையும் புண்படுத்த வேண்டாம். புரட்சிக்காரனால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கிற்கு மருந்து தேட உங்கள் நட்பு வட்டத்தை இழக்க வேண்டாம்.

                                                      

புரட்சிக்காரன் ஏதோ பஞ்சமா பாதகத்தை செய்தது போலவும், சி.பி.. போல் தாங்கள் கண்டுபிடிக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள். நான் காப்பிபேஸ்ட் செய்தேன் பிழையுடன் எழுதினேன் என்று கூறி நீங்கள் செய்த தவறுகளை இப்போதைக்கு சாமர்த்தியமாக மூடி மறைத்து விட்டீர்கள். பலருக்கு விரைவாக பாலோயராக சேர்வது, அவர்களின் எழுத்துக்கு மதிப்பளிக்காமல் ஒற்றை வார்த்தை பின்னூட்டம் இட்டுவிட்டு ஓடுவது, என் பதிவில் வந்து பயங்கரமாக பொங்கிவிட்டு பிறகு அவற்றை நீக்கி விடுவது போன்ற வேலைகளில் உங்களை வெல்ல எவரும் இல்லை என்பது நண்பர்களுக்கே தெரியும். அதை அவர்கள் முடிவு செய்யட்டும்.

என் பதிவில் இட்ட கருத்துக்களை ஏன் நீக்கினீர்கள் என கேட்டதற்கு ஒரு விளக்கம் தந்தீர்களே . அரசியலில் சேர முழுத்தகுதி கொண்ட ஆள் ஆகிவிட்டீர். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் தராவிட்டால் கருத்தை நீக்கி விட்டா ஓட்டம் பிடிக்க வேண்டும்?? அப்படி என்றால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காத பதிவர்கள் அனைவரின் வலைப்பூவிலும் இப்படித்தான் செய்வீர்களா? மீண்டும் சொல்கிறேன். ஒன்றாம் வகுப்பாவது பாஸ் செய்யுங்கள். என் நிஜமுகத்தை காட்ட சொல்கிறீர்கள்? நீங்கள் எல்லா வலைப்பூவிற்கும் போய் பின்னூட்டம் இடும்போதும், உங்கள் பதிவில் பலர் பின்னூட்டம் இடும்போதும் அனைவரின் நிஜமுகம் தெரிந்தால் மட்டுமே அவர்களிடம் நட்பு பாராட்டுவீர்களா? அப்படி அனைவரும் தம் உண்மையான புகைப்படத்தை போட்டால் அடுத்த நொடியே நானும் அதை செய்கிறேன்.

என்னைத்திட்டி எழுதுவதற்கு கூட என் ப்ரோபைல் ஸ்க்ரீன்களை காப்பி அடித்து பேஸ்ட் செய்துள்ளீர்கள். தொட்டில் பழக்கம் எங்கே போகும்? நிஜமுகத்தை படமாக போட்டுக்கொண்டு ஓராண்டு காலம் நீங்கள் செய்த போலித்தனங்களை விட போலி முகத்தை வைத்துக்கொண்டு உங்கள் நிஜமுகத்தை பலருக்கு எடுத்துச்சொன்னவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். என்று புரட்சிக்காரன் சரணாலயம், புலவர் வீதி முகத்திரையை கிழித்தானோ அன்று முதல் அந்த இரு வலைப்பூவிலும் காப்பி பேஸ்ட் பெருமளவு குறைந்துள்ளது. பிறர் பதிவுகளில் வெற்று பின்னூட்டங்கள் இடுவதை குறைத்துக்கொண்டு நீளமான பின்னூட்டங்களை அளிக்க தொடங்கி உள்ளார்கள். இதை பலரும் நன்றாக அறிவர். இதுவே புரட்சிக்காரனுக்கு கிடைத்த வெற்றிதான். என்ன வேதாளங்கள் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.

நாம்தான் வல்லவர்கள் என்று எண்ணி மண்ணைக்கவ்வி மக்களை ஏமாற்றி வந்தீர்கள். மீசை மண்ணை துடைத்துக்கொள்ளுங்கள். இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. பாராட்டினால் மட்டும் ஏற்றுக்கொண்டு, தவறை சுட்டிக்காட்டினால் அதை மூடி மறைக்க நீங்கள் செய்த மட்டமான
செயல்கள்:

உண்மையை உரைத்தவன் பதிவிற்கு சென்று சோககீதம் வாசித்தல், தோல் உரித்தவன் ஏமாறாமல் இருந்தால் உங்கள் வலைப்பூவில் கவிதை எனும் பெயரில் அழுது தீர்த்தல்(பாவம் படித்தவர்கள்), அதிலும் பல்ப் வாங்கினால் மீண்டும் தோல் உரித்த பதிவனிடம் போய் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசுதல், அதற்கு அவன் சரியான விளக்கம் தந்து சவுக்கால் அடித்தால் உடனே கருத்தை நீக்கி விட்டு புறமுதுகிட்டு ஓடுதல், பிறகு அவன் தளத்தில் எங்கேனும் ஓர் பிழை உள்ளதா என்று தேடிப்பிடித்து "இதோ அவன் போலி முகத்தை கண்டுபிடித்த டெலக்ஸ் பாண்டியன் இன்ஸ்பெக்டர் நானே" என்று ஜம்பம் அடிப்பது கொடுமையிலும் கொடுமை. எப்போது வளரப்போகிறீர்கள்?

காப்பி பேஸ்ட் செய்ததை ஆதாரத்துடன் சொன்னால் அதை மூடி மறைக்க இயற்கை உபாதை வந்தால் கூட அதை தள்ளிவைத்து விட்டு உங்கள் வலைப்பூவில் போய் காப்பி அடித்த வார்த்தைகளை மாற்றிவிட்டு "நான் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று ஊரை ஏமாற்றி தற்காலிக பெருமூச்சு விட்டுக்கொள்வது. இப்படியும் மனிதர்கள். அதுவும் படித்த ஆசிரியர்கள். ச்சே..நல்ல மாணவர்கள் எப்படி உருவாவார்கள்.

என் எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டி தண்டோரா போட்டீர்கள். அற்புதம். அருமை. எப்போதாவது வரும் எழுத்துப்பிழைக்கும், 24 மணிநேரமும் பிழையாக ஒரு ஆசிரியர் எழுதுவற்கும் வித்யாசம் இல்லையா? இதோ மீண்டும் பிழை பிழை பிழை பிழை. நேற்று விஜயகாந்த் பற்றி நீங்கள்
எழுதிய பதிவில்


மையப்படுத்திய என்பதற்கு மாறாக 'மைப்படுத்தி'
பொறும்மா என்பதற்கு மாறாக பொரும்மா
பேசுறேனா என்பதற்கு மாறாக பேசுரேனா
அந்த நாளே என்பதற்கு மாறாக அந்தநாள்ளே

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கும், ட்யூசனுக்கும் சில எழுத்துப்பிழை ஆசிரியர்களிடம் அனுப்பினால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று நன்றாக யோசிக்கவும். எனக்கு அந்த தீரா நோய் வந்து இப்பாடி தப்பாக எளுதி வறுகிறேன் பெற்றோர்கலே. உங்கள் பிள்ளைகள் நிலை? நான் கேட்டதற்கு "இப்படித்தான் எழுதுவேன். இது சகஜம். நீ யோக்யமா?" என்கிறார்கள். மீண்டும் கேட்டால் சில நண்பர்களை திரட்டிக்கொண்டு அடித்து விரட்டுகிறார்கள். பிறகு அதே தவறை தொடர்கிறார்கள் பெற்றோர்களே. பள்ளி நேரத்தில் பதிவிற்கு செலவிட்டு அதிலும் இன்று வரை பிழையுடன் எழுதும் ஆசிரியர்கள் செய்வது நியாயமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

இந்த லட்சணத்தில் மக்கள் தேர்ந்து எடுத்த விஜயகாந்த் அவர்களை திட்ட உங்களுக்கு என்ன யோக்யதை உள்ளது? பிறர் அழுக்கை குறை கூறும் முன்பு தங்கள் அழுக்கை துடையுங்கள்.

இன்று நான்கு வரி எழுதிய பதிவில் கூட ஒரு பிழை:
தலைப்பு: இவைகளைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்.
கலைநயத்தோடு என்பதற்கு மாறாக கலைநயத்ததோடு எனப்பிழையுடன் எழுதி உள்ளீர்கள்.
உடனே எங்கள் பதிவில் வந்து பிழைகளை தேட வேண்டாம். உங்கள் பதிவை சில நாட்கள் படித்தால் அதன் விளைவாக இன்னும் ஓராண்டு நானும் பிழையுடன் எழுதும் வியாதி வந்தே தீரும். வந்தும் விட்டது. எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. நீங்களோ மிகப்பிரபல பதிவர். எனவே சொன்னவன் யார் என்பதை விட சொன்னது என்ன என்று மட்டும் பாருங்கள். நேற்றும் இன்றும் உங்கள் வலைப்பூவில் இருக்கும் பிழை அழுக்கை ஹமாம் சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். உடனே போய் பிழைகளை சரி செய்துவிட்டு நான் அப்படி செய்யவில்லை என்று நீர் கூறினாலும் ஆச்சர்யம் இல்லை. ஏற்கனவே ஸ்க்ரீனை நகல் எடுத்து உள்ளேன். நீங்கள் அவ்வாறு செய்தால் ஆதாரத்துடன் பிழைகளை வெளியிடுவேன்.

என் வலைப்பூவில் அனானியாக வந்து என் குடும்பத்தை பற்றி மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் சாடிய அயோக்யன் யார் என்றும் தெரியும். அப்படி தரம் தாழும் அளவிற்கு என்ன கோபம்? உண்மை சுடத்தான் செய்யும். அதை ஏற்றுக்கொள்ள முடியாவிடில் பொது சபைக்கு வரக்கூடாது. ஒருவன் தவறை சுட்டிக்காட்டினால் அதை ஒரு முறை திருத்தி விட்டு பிறகு அவ்வாறு நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அதே தவறை அலட்சியமாக செய்து வந்தால் கேள்வி கேட்கப்படும். "என்னைத்தான் சொன்னாய்" என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை போல் இங்கு வந்து பொங்கி வழிய வேண்டாம். உங்கள் பதிவிலேயே அழலாம், பொங்கலாம். உங்கள் பாதையில் தொடருங்கள்.


பலரின் அபிமான வலைத்திரட்டியாக இருந்த தமிழ்மணத்தை தன் காப்பி பேஸ்ட் பதிவுகளால் கறை படிய செய்த கரும்பு 'சக்கை' பதிவர் செய்த செயல்களே இன்று இத்தனை தவறுகளும் நிகழக்காரணம். அதைக்கண்டு பொறுமை இழந்த தரமான பதிவர்கள் சிலர் அதை சரியான நேரத்தில்
தட்டிக்கேட்டனர். அதற்கு செவி சாய்த்து காப்பி பேஸ்ட் பதிவுகளை ஒழிக்க தன்னால் ஆனதை செய்த தமிழ்மணத்திற்கு நன்றி. பிற வலைத்திரட்டிகளும் அவ்வாறு செய்ய வேண்டுகிறேன். பிரபல வலைத்திரட்டிகளில் தரமான பதிவுகளை இடாமல் ஆரவாரம் செய்து, காப்பி பேஸ்ட், தொடர் எழுத்துப்பிழைகள் செய்து போலி புகழ் தேடி முதல் இடம் பிடிக்க பேயாய் அலையும் பிரபல பதிவர்களின் முகங்கள் தொடர்ந்து கிழிக்கப்படும். நான் அவர்களைப்போல் தரம் தாழ்ந்து அனானியாக அசிங்கமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். ஆயிரக்கணக்கானவர்கள் எழுதும்போது அவர்கள் அனைவரையும் கண்காணிப்பது வலைத்திரட்டி உரிமையாளர்களுக்கு கடும் சிரமமான காரியமே. ஏதோ என்னால் ஆன சிறு உதவியை அவர்களுக்கு செய்கிறேன். மனசாட்சி உள்ள பதிவர்கள் ஆராய்ந்து தங்கள் ஆதரவை விருப்பம் இருந்தால் தாருங்கள்.

இனி ஒருவன் கூட இப்படி போலி புகழ்ச்சி ஆட்டம் போட்டு, உண்மையான தரத்துடன் எழுதும் பதிவர்களை பின்னுக்கு தள்ளி கொக்கரிக்க கூடாது. சில வாரங்களாக தமிழ்மணத்தில் நேர்மையாகவும், பிழை இன்றியும் எழுதி வரும் பதிவர்கள் மகுடம் சூடி வெற்றி கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இதே நிலை அனைத்து வலைத்திரட்டியிலும் தொடர வேண்டும்.

அனைத்தையும் கூர்ந்து கவனித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி ஆதரவு தந்த "உண்மையான" பிரபல பதிவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். தேவைப்பட்டால் நாங்களும் வெளிப்படையாக களம் இறங்க தயார் என்று அவர்கள் சொன்னது மிகப்பெரிய பலம் எனக்கு. இந்த உத்வேகத்தால் புரட்சிக்காரன் முன்பை விட தீவிரமாக செயல்படுவான் என்பது உறுதி. உறுதி. உறுதி.

இப்பதிவு நீங்கள் நினைக்கும் பதிவர்கள் யாரையும் சாடி எழுதியது அல்ல. போலி புகழ்ச்சிக்கு அலையும் நபர்களுக்கு மட்டுமே. குற்றமுள்ள நெஞ்சங்கள் குறுகுறுத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது. ஒரு சில நண்பர்களை திரட்டி வந்து அடித்து விரட்டி சர்வாதிகாரம் செய்தால் அதைக்கண்டு பயந்து ஓட நான் கோழை அல்ல. புரட்சிக்காரன்.

தொடரும் புரட்சி. சர்வாதிகாரம் ஒழியும் வரை.
அடுத்த புரட்சி என்ன?
காத்திருங்கள். சீக்கிரம் வருகிறேன்.

என் பதிவில் வரும் எழுத்துப்பிழைகள் அனைத்திற்கும் அவரே காரணம். அவர் திருந்தும் வரை நான் திருந்த வாய்ப்பில்லை. அப்படி ஒரு தொற்று நோய்(எழுத்துப்பிழை நோய்) அது. தீரா நோய் தீருமா? வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இன்று வரை.





8 நண்பர்கள்

சர்வாதிகார பதிவர்கள்...

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

  1. SURYAJEEVA கருத்து இது :

    இந்த சல சலப்பு எப்ப ஓயும்? ஓயாது போலிருக்கே

    Anonymous கருத்து இது :

    நீங்க கலக்குங்க பாஸூ. நல்லது நடந்தால் சரி.

    K கருத்து இது :

    வணக்கம் புரட்சி அண்ணே!

    இன்னிக்கும் சூப்பரா, கலக்கலா எழுதியிருக்கீங்க! அவர்கள் உணர்ந்தால் சரிதான்!

    அப்புறம், நானும் நீங்களும் ஒருவர்தான் என்று அவர்கள் இன்னமும் நம்புகிறார்கள் போல் தெரிகிறது! அட, நீங்கள் வேறு இன்று தமிழ்மணத்துக்கு சப்போர்ட்டாக எழுதியிருக்கீங்க! அதனால் அவர்களின் சந்தேகம் மேலும் வலுப்பட வாய்ப்பிருக்கு! ஏற்கனவே நான் ஏதோ தமிழ்மணத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதாகத்தான் எல்லோரும் பேசிக்கராங்க!

    இனி அவர்களின் சந்தேகத்தை யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது! ஹா ஹா ஹா ஹா!!!!!

    Unknown கருத்து இது :

    ஒரு தனி நபரை குறிவைத்தே எழுதப்பட்டிருக்கும் இந்த பதிவு கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்கிறது. நீங்கள் நிஜமாகவே எழுத்துப்பிழையை தான் சாடுகிறீர்களா இல்லை வேறு ஏதேனும் முகாந்திரம் உண்டா தெரியவில்லை. அப்படி எழுத்துப்பிழை தான் பிரச்சனை என்றால் அவரின் பதிவின் கமென்ட்டில் சுட்டி இருக்கலாம், அல்லது இ-மெயில் மூலம் சொல்லி இருக்கலாம் அதை விடுத்து நீங்கள் உங்கள் பதிவில் சர்ச்சை கிளப்பவது சரி தானா?

    அதை விட முக்கியம் எழுத்துப்பிழை கொலைகுற்றத்தை விட கொடியது போன்ற ஒரு மாயையை உருவாக்கியும் இருக்கிறீர்கள். இதுவும் சரியில்லை என்றே தோன்றுகிறது. பிழை யாவருக்கும் பொது தானே நீங்கள் செய்யும்போது தொற்று நோய் என்று சமாளிக்கிறீர்கள்??

    //ஒரு சில நண்பர்களை திரட்டி வந்து அடித்து விரட்டி சர்வாதிகாரம் செய்தால் அதைக்கண்டு பயந்து ஓட நான் கோழை அல்ல. புரட்சிக்காரன்.

    நீங்கள் வீரன் என்று முழங்கியது போதும் நண்பரே.. உங்கள் முகமூடியை பிய்த்து எரிந்துவிட்டு வாருங்கள்.. இன்னும் பேசலாம்.

    Unknown கருத்து இது :

    மிகவும் கவனமாய் தான் டைப் செய்தேன் பாருங்க எரிந்து விட்டுன்னு வந்து இருக்கு எறிந்து விட்டுன்னு மாத்தி படிங்க please

    சசிகுமார் கருத்து இது :

    //ஒரு சில நண்பர்களை திரட்டி வந்து அடித்து விரட்டி சர்வாதிகாரம் செய்தால் அதைக்கண்டு பயந்து ஓட நான் கோழை அல்ல. புரட்சிக்காரன்.

    நீங்கள் வீரன் என்று முழங்கியது போதும் நண்பரே.. உங்கள் முகமூடியை பிய்த்து எரிந்துவிட்டு வாருங்கள்.. இன்னும் பேசலாம்.//

    இதையே தான் நானும் கூறுகிறேன். உண்மையை கூற ஒளிந்து வாழ வேண்டிய அவசியமில்லை...நிஜ ப்ரோபைளில் வந்து நியாயமான வாதங்களை வைத்தால் நானும் உங்களுடன் தான்...

    சசிகுமார் கருத்து இது :

    உண்மையாகவே எழுத்துப்பிழை தான் உங்களின் குறை என்றால் நீங்கள் மொத்த தமிழ் பதிவரையும் திட்டியே ஆகவேண்டும். எல்லோருடைய பதிவிலும் எழுத்துப்பிழை ஏற்படுவது இயல்பு தான்.

    எழுத்துப்பிழை இல்லாமல் எப்படி எழுத வேண்டும் என்று எழுதும் இடுகையில் கூட எழுத்துப்பிழை ஏற்படும் என்பதை மறக்க வேண்டாம்...நான் கூறியதில் ஏதேனும் தவறு இருப்பின் கருத்துரையில் தெரிவிக்கலாம்...

    தமிழ்வாசி பிரகாஷ் கருத்து இது :

    புரட்சிக்கார நண்பா உமக்கு ரோசம் அதிகம்ப்பா.... முகமூடி தான் உமக்கு கவசம் என நெனக்கறிங்க. கொற சொல்றது சொல்றிங்க. எழுத்துப்பிழை இருக்குன்னு சொல்றிங்க. இப்ப வரை பதிவுலகில் வெளியிட்ட இடுகைகள் வரை கண்டுபிடித்து சொன்னா ரொம்ப புண்ணியமா இருக்கும். ஒருத்தரையே குறி வச்சு தாக்கறதுல நியாயம் இல்லையே... அவரோட கவிதைகள் பிடிக்கலையினா அங்கேயே கமென்ட்டில் சொல்றத விட்டுட்டு அத வச்சு இடுகை தேத்துறிங்களே.... ஓ.. அவர தான் நீங்க முன் மாதிரியா வச்சு இடுகை எழுதறிங்க போல...

Powered by Blogger