அடுத்தவர் குழந்தையை திருடும் ஆண்மையில்லாத பதிவர்கள்.......இப்போதுள்ள பதிவர்களுக்கு என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று குழப்பம் போலும்.....சரக்கு இல்லாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே?
ஹிட்ஸ், ஓட்டு என்று புகழ்போதையில் மாட்டிக்கொண்டு விட்டதால்....சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளுகிறார்கள்.அதிலும் தமிழ்மணம் சூடான இடுகையிலும், டாப் 20-இடத்திலும் வர இப்போது அடுத்தவர்களின் பதிவை திருடுகிறார்கள்...மூளையை கசக்கி யோசித்து மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து டைப் செய்து அந்த பதிவை வெளியிட்டுவிட்டு தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் நாம் இணைத்த உடனே அந்த பதிவு வேறு திருட்டுபதிவரால் சுடப்பட்டு உடனே அது அவர்கள் பெயரிலும் வலையேற்றப்படுகிறது...சிலமணி நேரத்திலேயே அது சூடான இடுகைக்கும் அது வந்துவிடுகிறது. நிஜமாகவே அப்பதிவை எழுதிய பதிவர்கள் தலையில் துண்டைப்போட வேண்டியுள்ளது. ஏன் இந்த திருட்டுப்புத்தி? சே.... நாயும்  பிழைக்குமா இந்த பிழைப்பு. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர்கள் இன்னொருவன் குழந்தையை தத்து எடுப்பார்கள்...சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இருந்தும் தத்தெடுத்து கொள்வார்கள். இதில் இவர்கள் முதல் ரகம். குழந்தை பெற தகுதி இல்லாத ஆண்மையற்றவன் போல்தான் இவர்களின் பிழைப்பும்....அடுத்தவன் குழந்தையை திருடி தன் பெயரை இன்சியலாக்கி கொள்கிறார்கள். சமீபத்தில்கூட நிரூபன் என்ற பதிவர் அவரது பதிவை அதிகம் திருடுவதாக ஆதங்கப்பட்டிருக்கிறார்....பாவம்..அவரால் ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்...இப்படிப்பட்ட திருட்டு நாய்கள் இருக்கும்வரை பதிவு திருட்டை ஒழிக்க முடியாது.

12 நண்பர்கள்

அடுத்தவர் குழந்தையை திருடும் ஆண்மையில்லாத பதிவர்கள்.......

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

 1. இராஜராஜேஸ்வரி கருத்து இது :

  பாவம்..அவரால் ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்

  சரியான சாட்டையடி பகிர்வு.

  ரியாஸ் அஹமது கருத்து இது :

  புரட்சிகரமான பதிவு தான்

  ரியாஸ் அஹமது கருத்து இது :

  என்ன ரொம்ப நாளா ஆள காணோம் ,,,,
  ஆட்சி மாற்றம் காரணமோ ...
  நிறைய புரட்சி செயுங்க தல

  பாலாஜி கருத்து இது :

  அடுத்தவர்களின் உழைப்பை திருடுவது மிகவும் கேவலமான செயல்.
  // தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர்கள்தான் இன்னொருவன் குழந்தையை தத்து எடுப்பார்கள். //
  // அடுத்தவன் குழந்தையை திருடி தன் பெயரை இன்சியலாக்கி கொள்கிறார்கள் //
  நண்பா! இது வருத்தமளிக்கிறது. குழந்தையை தத்து எடுப்பவர்கள் எல்லாம் தகுதி இல்லாதவர்கள் இல்லை.

  விக்கியுலகம் கருத்து இது :

  super shot!

  புரட்சிக்காரன் கருத்து இது :

  பாலாஜி கருத்து இது :
  August 11, 2011 6:48 AM

  அடுத்தவர்களின் உழைப்பை திருடுவது மிகவும் கேவலமான செயல்.
  // தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர்கள்தான் இன்னொருவன் குழந்தையை தத்து எடுப்பார்கள். //
  // அடுத்தவன் குழந்தையை திருடி தன் பெயரை இன்சியலாக்கி கொள்கிறார்கள் //
  நண்பா! இது வருத்தமளிக்கிறது. குழந்தையை தத்து எடுப்பவர்கள் எல்லாம் தகுதி இல்லாதவர்கள் இல்லை.////

  மன்னிக்கவும் நன்பரே...ஒரு ஆதங்கதில் எழுதிய பதிவு.வார்த்தைகலை திருத்தி விடுவொம்

  பாலாஜி கருத்து இது :

  நன்றி நண்பரே!

  Anonymous கருத்து இது :

  உண்மைதான்.... பிள்ளை பெறும் வலி பெற்றவளைத் தவிர யாரால் உணரமுடியும்?!

  சாய் பிரசாத் கருத்து இது :

  திருட்டு பதிவர்களின் பதிவுகளை திரட்டிகள் திரட்டுவதை நிறுத்தினாலே போதும் :)

  நிரூபன் கருத்து இது :

  காலத்திற்கேற்ற காத்திரமான பதிவு,
  திருடன் உணர்ந்து திருந்த வேண்டும் எனும் வகையில் சொற்களை சாட்டையடியாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

  ஜீ... கருத்து இது :

  அவசியமான பதிவு பாஸ்!

  shankar கருத்து இது :

  புரட்சி காரன் ..,

  நானும் தமிழ்மண ஹிட்ஸ் வாங்கி வைரதுல நாக்கு வழிக்கிற பிரஷ் வாங்கி நாராசமா வழிக்கனம்னு ஆச படுறேன் தக்காளி ..,இவனுங்க தூங்கும் போது பதிவ திருடுறானுங்க என்ன பண்றதுன்னு தெர்ல :)

Powered by Blogger