Showing posts with label பதிவு திருடர்கள். Show all posts
Showing posts with label பதிவு திருடர்கள். Show all posts

ஒரு காப்பி-பேஸ்ட் பதிவரின் அந்தரங்கங்கள்..........................................................................................................................

இன்றைய தமிழ்மனம் டாப்-20-யில் இடம்பிடித்திருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். அதில் இடம்பிடித்திருக்கும் பதிவர்கள் அனைவரும்  பிரபலமானவர்கள் என்பதால் அவர்களைப்பற்றி விமர்சனம் செய்வதென்பது சூரியனுக்கே டார்ச் அடிப்பதை போன்ற அதிகப்பிரசங்கி தனமென்பதால் அதை நான் செய்யமாட்டேன். இருந்தாலும் அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு பதிவரை பற்றி எழுத விழைகிறேன்.

அவர் யாரென்று நான் சொல்லப்போவதில்லை. ஆனால் உங்களுக்கு படித்தவுடன் புரிந்துவிடும் சார் யாரென்று

அவர்தான் ======= என்னும் பிலாக் நடத்தும் காப்பி-பேஸ்ட் மன்னன்.இவர் ஒரு தொழில்முறை ஆசிரியர்.. சொந்தமாக எழுதி ஹிட்ஸ் வாங்கும் பதிவர்களுக்கிடையே காப்பி பேஸ்ட் செய்தாலே போதும் ஹிட்டடிக்கலாம் என்பதற்கு உதாரன புருஷனாக விளங்குபவர்  சார் அவர்கள்.

தமிழ்மனம் டாப்-20 இல் காப்பி பேஸ்ட் பதிவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இவரை போன்ற காப்பி பேஸ்டாளர்களை நீக்கிவைத்து நடவடிக்கை எடுத்தது தமிழ்மனம்.

உடனே பதறி துடித்த  நம் வாத்தியார் அவர்கள் அய்யோ நான் தவறு செய்துவிட்டேன். ஹிட்சுக்காக அடுத்தவர்களின் பதிவுகளை திருடியது தவறுதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இனிமேல் அப்படி திருடமாட்டேன் எழுத்து விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று தமிழ்மனத்திற்க்கு ஒரு மன்னிப்பு கொடுத்துவிட்டு மீண்டும் இனைந்தார். சொன்னது போலவே ஏற்கனவே எழுதி ஹிட் அடித்த காப்பி பதிவுகளை தூக்கி தன்னை யோக்கியனாக காட்டினார்.

இடையில் இந்த பத்து நாளில் சொந்தமாகவே எழுதுகிறேன் பேர்வழி என்று  நான்கு ஐந்து வரியில் என்னன்ன எழவையோ கவிதை என்ற பெயரில் கிறுக்கினார். உடனே சில ஜால்ராக்கள் வந்து ஆகா. சூப்பர் மச்சி பின்னிட்டே என்றெல்லாம் கமெண்ட் போட்டு தங்கள் விசுவாசத்தை காட்டிக்கொண்டனர். பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை
இப்படியெல்லாம் இவர்கள் கமெண்ட் போட்டால்தான் அவர்களின் பதிவிற்கு வாத்தியார் போய் பிரசண்ட் போடுவார். ஆனாலும் கூட்டம் வந்தபாடில்லை. ஓட்டும் கிடைக்கவில்லை. தமிழ்மனம் சூடான இடுகைகளில் தன் பெயர் வரவில்லை. மகுடம் சூட முடியவில்லை. டாப் - 20-யில் இடம் கிடைக்கவில்லை. அடடா... நம்ம சொந்த சரக்கிற்க்கு இவ்வளவுதான் மரியாதை போல என்று நினைத்தார். அப்போதுதான் ஒரு உண்மை அவருக்கு புரிந்தது. நம்மிடம் சொந்தமாக சரக்கே இல்லை. காப்பியடித்துதான் நம் காலத்தை ஓட்டியிருக்கிறோம் என்று...

காப்பியடித்த கையும், களவாடிய மனதும் சும்மா இருக்குமா? பார்த்தார் நம்ம வாத்தியார்.... கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்ற கதையாய்  மீண்டும் தன் பழைய அஸ்திரமான காப்பி பேஸ்ட்டை  கையில் எடுத்தார். நக்கீரனிலிருந்து வேலாயுதம் விமர்சனத்தை அப்படியே சுட்டு தன் பேரில் போட்டுக்கொண்டார்.கூட்டம் மறுபடியும் வந்தது.  ஒரு ஆள் அதை சுட்டிக்காட்டியதும் மறுத்தார். கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததை பற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தியை சுட்டு போட்டார். அதற்கும் கூட்டம் வந்தது.  அண்ணா நூலகம் பற்றி அவரவர்கள் சொந்த கருத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது, நம்ம வாத்தியாருக்குத்தான் சொந்த சரக்கில்லையா? உடனே அதை பற்றி நக்கீரனில் வந்த செய்தியை காப்பியடித்து கடைசியில் நீதிமன்றம் போவார்களா? என்று தன் சொந்த கருத்தை வரியை சேர்த்து வெளியிட்டார். தமிழ்மனம் மகுடமும் கிடைத்தது. இந்த வாரம் டாப்-20 யில்  இடமும் கிடைத்தது.அந்தப்பதிவை படித்த ஜால்ராக்கள் ஆஹா...அருமையான அலசல் என்று ஜல்லியடித்தார்கள்.

அய்யா ஜால்ராக்களே நீங்கள் அருமை, சூப்பர் என்று கமெண்ட் போடுவதாக இருந்தால் நேராக நக்கீரன் தளத்திற்கு போய் போடுங்கள். எதுக்கு வாத்தியார் தளத்தில் போடுகிறீர்கள்?. இது எப்படி இருக்கு என்றால்....குழந்தை பெற்றவளை விட்டுவிட்டு பிரசவம் பார்த்த ஆயாவிடம் வாழ்த்துக்கள் நீங்க அம்மாவாகிட்டீங்க என்று சொல்வதை போல் அபத்தமாக இருக்கிறது.
பாவம் ஜால்ராவாகிய அவர்களையும் சொல்லமுடியாது. அவர்கள் எல்லோரும் கிணற்று தவளைகள். வேறு எந்த தளத்திற்கும் போகாமல் நேராக நம்ம வாத்தியார் தளத்திற்கு மட்டும் வந்து படிப்பதால் எல்லாமே நம்ம வாத்தியாரின் சரக்கு என்றே நினைத்துக்கொள்கிறார்கள்.  நம்ம வாத்தியாரும் வெட்கமில்லாமல் அத்தனை பாராட்டுக்களையும் பல்லை இளித்துக்கொண்டு வாங்கிக்கொள்கிறார். அவரும் என்னதான் பன்னுவார் அவர்தான் புகழ் என்னும் போதைக்கு அடிமையாகிவிட்டாரே...

ஆனாலும், இத்தனை தடவை சொல்லியும் திருந்தாமல் மறுபடியும் மறுபடியும் இப்படி காப்பிபேஸ்ட் செய்வதை கண்டுபிடித்த தமிழ்மணம் நிர்வாகம் இந்த முறை கடுமையாக எச்சரிக்கை செய்ததும் மீண்டும் காப்பியடித்த பதிவுகளை நீக்கிவிட்டார் வாத்தியார். ஆனால், அதுமூலம் கிடைத்த ஹிட்ஸ்? அது கிடைத்தது...கிடைத்ததுதான் அதை அழிக்கமுடியாதே?

இந்த ஹிட்சையும் வோட்டையும் மகுடத்தையும் டாப்-20 இடத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது நாக்கா வழிக்கமுடியும்...அல்லது இத வைத்துக்கொண்டு சென்னையில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்க முடியுமா என்று வாத்தியார் கோபப்படலாம். அப்படி ஒரு மயிருக்கும் உபயோகமில்லாத இதற்காத்தானே இப்படி கீழ்த்தரமான காப்பி-பேஸ்ட் செயலை செய்கிறீர்கள்.

விடுப்பா....விடுப்பா....பழுத்தமரம் தான் கல்லடிபடும் என்று யாராவது வாத்தியாருக்கு சப்பைகட்டினால்......அதற்கும் என்னிடம் பதில் இருக்கிறது....ஆமா....வாத்தியார் பழுத்தமரம் தான். வேவ்வேறு தோட்டங்களில் திருடிய பல்வேறு பழங்களை தன் மரத்தில் ஒட்டவைத்துள்ள பழுத்த ஒட்டுமரம்.
மாணவர்கள் காப்பியடிப்பது தவறென்று சொல்லும் வாத்தியாரே  காப்பியடித்தால்......உங்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். ஆசிரியர் பணி என்பது புனிதமானது...ஆனால் வாத்தியாரை போல ஆள்களால் வாத்தியார் பணிக்கும், பதிவுலகத்துக்கும் இழுக்கு... 

(இந்த பதிவில் வரும் சம்பவங்களும், விசயங்களும் கற்பனையே....இது யாரையும் குறிப்பிடுபவை அல்ல...என்று நான் சத்தியம் செய்தால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?)
  





அடுத்தவர் குழந்தையை திருடும் ஆண்மையில்லாத பதிவர்கள்.......



இப்போதுள்ள பதிவர்களுக்கு என்ன எழுதுவது, எதை எழுதுவது என்று குழப்பம் போலும்.....சரக்கு இல்லாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே?
ஹிட்ஸ், ஓட்டு என்று புகழ்போதையில் மாட்டிக்கொண்டு விட்டதால்....சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளுகிறார்கள்.அதிலும் தமிழ்மணம் சூடான இடுகையிலும், டாப் 20-இடத்திலும் வர இப்போது அடுத்தவர்களின் பதிவை திருடுகிறார்கள்...மூளையை கசக்கி யோசித்து மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து டைப் செய்து அந்த பதிவை வெளியிட்டுவிட்டு தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் நாம் இணைத்த உடனே அந்த பதிவு வேறு திருட்டுபதிவரால் சுடப்பட்டு உடனே அது அவர்கள் பெயரிலும் வலையேற்றப்படுகிறது...சிலமணி நேரத்திலேயே அது சூடான இடுகைக்கும் அது வந்துவிடுகிறது. நிஜமாகவே அப்பதிவை எழுதிய பதிவர்கள் தலையில் துண்டைப்போட வேண்டியுள்ளது. ஏன் இந்த திருட்டுப்புத்தி? சே.... நாயும்  பிழைக்குமா இந்த பிழைப்பு. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர்கள் இன்னொருவன் குழந்தையை தத்து எடுப்பார்கள்...சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இருந்தும் தத்தெடுத்து கொள்வார்கள். இதில் இவர்கள் முதல் ரகம். குழந்தை பெற தகுதி இல்லாத ஆண்மையற்றவன் போல்தான் இவர்களின் பிழைப்பும்....அடுத்தவன் குழந்தையை திருடி தன் பெயரை இன்சியலாக்கி கொள்கிறார்கள். சமீபத்தில்கூட நிரூபன் என்ற பதிவர் அவரது பதிவை அதிகம் திருடுவதாக ஆதங்கப்பட்டிருக்கிறார்....பாவம்..அவரால் ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்...இப்படிப்பட்ட திருட்டு நாய்கள் இருக்கும்வரை பதிவு திருட்டை ஒழிக்க முடியாது.





Powered by Blogger