தமிழ்மணத்தில் முதலிடத்தை இழந்த பிரபல பதிவர்.......
இன்று வெளிவந்திருக்கும் தமிழ்மணம் தர வரிசை 20- பட்டியலை பார்த்தால் அதிர்ச்சி + மகிழ்ச்சி.
வழக்கமாக இடங்களை அடைத்துக்கொண்டிருந்த காப்பி-பேஸ்ட் பதிவர்கள் விடுபட்டிருந்தார்கள். சொந்தமாக கற்பனைசெய்து எழுதும் பதிவர்கள் இடம்பிடித்திருந்தார்கள்.
ஆனாலும், இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பதிவர்களில் ஒரு சில காப்பி-பேஸ்ட் பதிவர்களும் இருக்கிறார்கள். அனால், என்றாவது ஒரு பதிவை எப்போதாவது காப்பி செய்பவர்கள் என்பதால் விட்டுவிடலாம்....
மற்றபடி இப்போது இடம்பிடித்திருக்கும் பதிவர்கள் அனைவரும் தகுதியானவர்களே....
இதன் மூலம்....
தமிழ்மணம் தரவரிசையில் இடம்பிடிக்க வேண்டும் என்பதால் ஒரு நாளுக்கு மூன்று பதிவு, நான்கு பதிவு என்று காப்பியடித்து பதிவிடுபவர்களின் தொல்லை குறையும்.
சொந்தமாக எழுதப்படும் பதிவுகளின் வரத்து அதிகரிக்கும்.
குறிப்பாக மொக்கைகள் குறையும்.
ரொம்ப நன்றி தமிழ்மணம் நிர்வாகிகளே....
இடம் பிடித்திருக்கும் பதிவர்களுக்கு வாழ்துக்கள்.



