கைக்குழந்தை பதிவரா நீங்கள்?

கைக்குழந்தை பதிவரா நீங்கள்?  


வாங்கோ அப்பாவி, புதிய தோழர்களே/ தோழிகளே


ஷேமமாக இருக்கேளா? ஆத்துல எல்லாரும் நன்னா இருக்காளா


நீங்கள் பதிவுலகில் புதியவரா? பலே. இந்தப்பதிவு உங்களுக்குத்தான். பத்திரிகைகளில் சாதிக்கும் ஆர்வமும், திறமையும் இருந்தாலும் வாய்ப்பு மிகச்சிலருக்கே கிடைக்கிறது. எனவே உங்களுக்கென ஒரு வலைப்பூவை தொடங்கி அதில் தங்கள் திறமையை நிரூபித்து வெற்றி பெற காலடி எடுத்து வைத்து இருப்பீர்கள். ஆனால் அப்படி முன்னேற விடாமல் உங்கள் கவனத்தை சிதற அடித்து ஓட்டுக்களை குவிக்கவும், ஹிட்ஸ்களை அள்ளவும் உங்களை திசைமாற்றுவதில் சிலர் கைதேர்ந்தவர்கள். அந்த வலையில்  சிக்காதேள்அவங்களாண்ட  இருந்து பேஷாக தப்பி நேர்மையுடன் வெற்றி பெற உங்களுக்கு சில ஆலோசனைகள் கீழே:


*** ஆரம்பத்தில் ஒருசில பதிவுகளை மட்டும் போட்டுவிட்டு நல்ல பதிவர்கள் யார் என்ற தேடுதலை துவக்குங்கோயாருக்கு நிறைய பாலோயர், பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் கிடக்கிறதோ அவர்கள் பலர் தம் கடும் உழைப்பால் பதிவுலகில் உயர்ந்தவர்கள். அப்படி உழைக்காமல் அதே எண்ணிக்கையில் ஓட்டுகள் வாங்கும் கலப்பட பிரபலங்களை அவர்கள் எழுதும் 'சேம் பிளட்'  பதிவுகளை வைத்தே அடையாளம் காணலாம்


*** எழுத்தாழமும், சீர்மிகு சிந்தனையும்  கொண்ட பதிவர்களின் ப்ளாக்குகளில்  அடிக்கடி மனதில் படும் கருத்துக்களை வைங்கோ சாமி.பதிவுசார் விளக்கங்களை கேட்டுப்பெறுங்கோஉங்கள் பதிவை அவர் பார்க்க வேண்டும் என்றெண்ணி அவர் பதிவை படிக்காமல் ஒரே வார்த்தையில் புகழ்ந்து விட்டு ஓட வேண்டாம். அப்படி செய்யாதேள். உங்க மதிப்பு தரைமட்டமாகும்



*** நீங்கள் பதிவை எழுத ஆரம்பித்ததும் உடனே வந்து பாசமாக பின்னூட்டம் போடும் நபர்களில் யார் நல்லவர், யார் ஓட்டுக்கு அலைபவர் என்று இனம் கண்டு கொள்ளுங்க. அப்படிப்பட்டவர்கள் எங்கெல்லாம் தன் கடையை விரித்து இப்படி புதியவர்களை வலையில் போடுகிறார் என்று அடிக்கடி பாருங்ககோள். அப்போது புரியும். அவர்கள் தங்களுக்கு தருவது ஊக்கம் அல்லஓட்டுப்பிச்சை அரசியல். அவர்களை கண்டுகொள்ளாதீர்கள். உண்மையாகவே ஊக்கம் தரும் பிரபல பதிவர்கள் யார் என்று அவர்களின் பதிவின் தரத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். புரியுதோ சமத்து



***அதே போல் உங்களுக்கு உடனே பாலோயராக சேரும் ஈர மனம் கொண்ட சிலபோலி அபிஷ்டுகளிடம் உஷாராக இருங்க. வலைப்பூ தொடங்கி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. ஏன் இந்த அவசரம் என்று கேளுங்கோமுதலில் என் பதிவுகளை கொஞ்ச நாட்களாவது  படித்துவிட்டு பிறகு என்னை கொஞ்ச வாருங்கள். இப்போதைக்கு அசடு வழிகிறது. துடைத்து கொள்ளுங்கோ என்று காரமாக கூறுங்கள்எடுத்துக்காட்டு வேணுமா? என் வலைப்பூ தொடங்கிய உடனேயே பாலோ செய்த சக்கைப்பதிவர் மற்றும் புலவர் சந்து இருவரையும் வலது பக்கம் உள்ள 'தோழர்கள்' பட்டியலில் பாருங்க. மோர், நெக்ஸ்ட் ஆகிய சொற்களை அழுத்திப்பாருங்கோஉடனே முகமூடி கிழிந்த கடுப்பில் அன்பால்லோ செய்ய முயல்வார்கள்.   கவலை இல்லை. ஏற்கனவே நகல் எடுத்து விட்டேன். அவசியம் வந்தால் புட்டு வைக்கிறேன்இப்படி லட்சார்ச்சனை செய்து உண்மையை புகை போட்டு மறைப்பதில் ஓராண்டு டிப்ளோமா படித்து தங்க மெடல் வாங்கியவர்கள் இந்த பிழிடா சக்கை, புலவர் வீதி மற்றும் 'வேடம்'தாங்கி பதிவர்கள். உஷாரா இருங்கோ அம்பி



***  எப்பேர்பட்ட பிரபல பதிவராக இருப்பினும் அந்தப்பதிவு பிடித்தால் மட்டும் கருத்தும், ஓட்டும் போடுங்கள். மொய்க்கு மொய், நெய்க்கு நெய் தமிழர் பண்பாடு என்று பொய்க்கு பொய் சொல்லி பல்லை இளித்து ஓட்டுவாங்க வருபவர்களை ஓரம்கட்டுங்கோள்மோசமான அரசியல்வாதி கூட 5 வருடத்திற்கு ஒரு முறைதான் ஓட்டுக்கு அலைவான். ஆனால் பதிவுலக அரசியல்வியாதிகள் ஓட்டுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். ஜாக்கிரதை பிள்ளைவாள்.  



*** உங்கள் பதிவு நன்றாகவும், எங்கிருந்தும் திருடப்படாமலும்   இருந்தால் மெல்ல மெல்ல நீங்கள் உச்சத்தை எட்டுவீர்கள். அதற்கு கொஞ்சம் மாதங்கள் கூட ஆகலாம். ஆனால் அதுவே நிலையான வெற்றியைத்தரும். போலி புகழ் பெறும் பேராசையில்  தினம்தோறும்  காக்காய் பிடித்து முன்னேறிய ஆட்கள் செய்ததை நீங்கள் செய்தால் உங்களை சில மாதங்களிலேயே 500 பேர் பின்தொடரலாம்ஏகப்பட்ட ஓட்டுகள் விழலாம், லட்சக்கணக்கான ஹிட்ஸ் விழலாம். அதில் எந்தப்பயனும் இல்லைங்கோஅந்த போதையில் அதே முட்டாள்தனத்தை திரும்ப திரும்ப செய்தால் பதிவுலகில் கடைசி வரை நீங்கள் ஒரு டம்மி அல்லது காமடி பீஸ் ஆகவே பார்க்கப்படுவீர்கள். நோக்கு நன்னா புரியறதா சேஷ கோபாலா?



*** தினம் ஒரு மொக்கைப்பதிவு. சில சமயம் மூன்று மொக்கைப்பதிவுகள் போட்டு உங்கள் நேரத்தையும், பிறர் நேரத்தையும் வீண் செய்ய வேண்டாம்வலைத்தளம் பூஞ்சோலையே தவி கண்டதை கொட்டும் கழிப்பிடம் அல்ல. எவ்வளோ ஜலம் போட்டு சுத்தம் செய்யறது சாஸ்திரிகளே.  


இப்போ அடுத்தாத்து அனந்து கூப்பிடறான். நீங்களும் ஆத்துக்கு போங்கோ

                                                                   
டிஸ்கி 

என் வலைப்பூவை ஹாக் செய்ய இரண்டு முறை முயற்சி நடந்துள்ளது. இம்முறை மட்டும் அவர்களை மன்னித்து விடுகிறேன். இன்னொரு முறை இவ்வாறு செய்ய வேண்டாம். நான் ஒவ்வொரு முறையும் சுவாரஸ்யம் கருதி வெவ்வேறு எழுத்து நடையில் எழுதுவதால் இதற்கு தொடர்பு இல்லாத பதிவர்கள் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம் 


வாழிய வளமுடன்,
புரட்சிக்காரன்             
                                                                                 








Powered by Blogger